Published:Updated:

''சொத்துக் குவிப்பு வழக்குக்கும் கலைஞருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை''

செ.கு.தமிழரசனுக்கு தி.மு.க. பதில்

செ.கு.தமிழரசனுக்கு சட்டம் தெரியுமா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், அவருக்கு 'அம்மா’-வைத் துதி பாடுவது கைவந்த கலை என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட  செ.கு.தமிழரசன், சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடித்தது தலைவர் கலைஞர்தான், சிறப்பு நீதிமன்றத்தை சென்னையில் அமைத்ததும் கலைஞர்தான். அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற மனுப் போட்டதும் தி.மு.க-தான் என்று அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டு உள்ளார். அவருக்கு சில விளக்கங்கள்.

''சொத்துக் குவிப்பு வழக்குக்கும் கலைஞருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை''

அம்மையார் ஜெயலலிதாவுக்கு எதிரான இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கின் மூலகாரணமே ஜனதா கட்சியின் அன்றையத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும், இன்று அ.தி.மு.க-வில் முக்கியப் பொறுப்பு​களில் உள்ள சில தலைவர்களும்தான். சுப்பிரமணியன் சுவாமிதான் முதன் முதலில் அம்மையார் மீது வழக்குத் தொடர்வதற்காக, பக்கம் பக்கமாக ஆதாரங்களைக் கொண்டுபோய் அன்றைய ஆளுநரிடம் கொடுத்தார்.

இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கு சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டபோது, அது

''சொத்துக் குவிப்பு வழக்குக்கும் கலைஞருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை''

நீதிமன்றங்களின் பணிச்சுமைகளைக் கூறி, இதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கலாம் என்று ஆலோசனை​யையும் கூறியது. அதன்படி மூன்று சிறப்பு நீதிமன்றங்கள் தனியாக அமைக்கப்பட்டன. அந்த மூன்றில் ஒன்றுதான் அம்மையாரின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம். இந்த நடைமுறை முழுக்க முழுக்க சட்டம் மற்றும் நீதித்துறை, உயர் நீதிமன்றப் பதிவாளர் சார்ந்ததே தவிர, தலைவர் கலைஞர் சார்ந்தது அல்ல.

இரண்டாவதாக, வழக்கை இழுத்தடித்தது தலைவர் கலைஞர்தான் என்று ஓர் அடிப்படையற்ற குற்றச்சாட்டை தமிழரசன் பதிவுசெய்துள்ளார். ஒரு வழக்கின் விசாரணை அதிகாரியே, குற்றம்சாட்டப்​பட்டவர்களுக்கு ஆதரவாகப் பிறழ் சாட்சியாக மாறியபோது அதனைக் கண்டித்தும், வழக்குப் போகும் பாதை சிலரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது என்றும் கூறித்தான் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றது தி.மு.க. 'நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக வேண்டுமானால் இருந்துவிட்டுப் போங்கள். ஆனால், சட்டம் உங்களைவிடப் பெரியது’ என்று உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு அறிவுறுத்தியது. சொத்துக் குவிப்பு வழக்கில் அரசியல் தலையீடு என்ற வாதம் எழுந்தபோது, உச்ச நீதிமன்றம் தெளிவான வார்த்தைகளால் அதற்கு விளக்கம் அளித்தது.

''ஜனநாயக  தேசத்தில் எதிர்க் கட்சிகளுக்கு, சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்துக்குள்ளே  மட்டுமல்ல, அவற்றைத் தாண்டியும் பல பொறுப்புகள் இருக்கின்றன. அதிகாரத்தில் உள்ளவர்களைக் கண்காணிக்கும் கடமையும் பொறுப்பும் மற்றவர்களைக் காட்டிலும் எதிர்க் கட்சிகளுக்கே அதிகம் இருக்கிறது. ஆளும் கட்சியும் அதற்குக் கீழ் உள்ள அரசு இயந்திரமும் தவறான வழியில் இயங்க ஆரம்பிக்கும்போது, அதைச் சுட்டிக்காட்டுவதும், அவர்கள் செல்லும் பாதை தவறானது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கட்டாயமும் எதிர்க் கட்சிகளுக்கு இருக்கின்றன'' - இந்தத் தீர்ப்பு வெளியான தேதி 18.11.2003.

மேலும், நீதிபதியின் பணி நீட்டிப்புக்கும் தி.மு.க-தான் காரணம் என்று அவர் கூறியிருக்கிறார். தமிழக நீதிமன்றங்களையும் இங்குள்ள நீதிபதிகளையும் மதிக்காமல்தான் இந்த வழக்கை தி.மு.க பெங்களூருக்கு மாற்றியது என்று கூறும் செ.கு.தமிழரசன் அவர்களே, ''நீதிமன்றங்களும் நீதிபதிகளின் இருக்கைகளும்தான் உயர்ந்த இடங்கள் என்று நான் நினைத்தேன். ஆனால், அதைவிட பெரிதாக ஓர் இடம் இருக்கிறது என்று இப்போது தெரிந்துகொண்டேன்'' என்று நீதிபதி சிவப்பா கூறியது யாரைப் பார்த்து? யாருடைய ஆட்சி அப்போது தமிழகத்தில் நடந்துகொண்டிருந்தது?

தலைவர் கலைஞர் கைதுசெய்யப்பட்ட நாள் இந்திய வரலாற்றில் ஒரு கறுப்பு நாள். எந்தக் குற்றச்சாட்டின் கீழ், அத்தனை சித்ரவதைகளை அனுபவித்து கலைஞர் கைதானாரோ, அந்தக் குற்றச்சாட்டு இன்று வரை நிரூபிக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கும் வரை, அந்த வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்படவே இல்லை என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். மேலும், 3 கோடி வழக்குகள்... 300 ஆண்டுகள்... என்றெல்லாம் பேசியிருக்கும் செ.கு.தமிழரசன் அவர்களே, உங்கள் அம்மையாரைப்போல், ஒரு வழக்கை 18 ஆண்டுகள் இழுத்தடித்தால், 300 ஆண்டுகள் அல்ல... 3,000 ஆண்டுகள் தேவைப்படும்.

உங்கள் அம்மையாருக்கு எதிரான இந்த வழக்கை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தி.மு.க-வுக்கு இல்லை. ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க் கட்சியாக இருந்தாலும் சரி, தன்னுடைய கடமைகளைச் சரியாக நிறைவேற்றுவதன் மூலம் தி.மு.க தனக்கான அரசியலை எப்போதும் முன்னெடுக்கிறது. அதை உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. உங்கள் செவிகளை அது இதுவரை எட்டவில்லை என்றால், எட்டியவர்களிடம் கேட்டாவது அறிந்துகொள்ளுங்கள்.

     நம்பிக்கையுடன்,

வழக்கறிஞர் பிரசன்னா