பெங்களூரில் நிராகரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஜாமீன் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு விசாரணைக்குப் போனது. எப்படியாவது ஜெயலலிதாவை ஜாமீனில் எடுத்துவிட வேண்டும் என நவநீதகிருஷ்ணன் எம்.பி உள்ளிட்ட அ.தி.மு.க வழக்கறிஞர்கள் டெல்லி தமிழ்நாடு ஹவுஸில் கேம்ப் அடித்தனர். ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஆஜராவதற்கு ஃபாலி எஸ்.நாரிமன், கே.டி.எஸ்.துள்சி, சுஷில்குமார் போன்ற மூத்த வழக்கறிஞர்களின் பெயர்களைப் பரிசீலித்தனர். நாரிமன் சம்மதித்துவிட்டால், பெயில் கிடைத்துவிடும் என்று நம்பினர். அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை.

அச்சமடைந்த அ.தி.மு.க-வினர்

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் கடந்த 13-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. சசிகலாவுக்கு ஆதரவாக கிரிமினல் வழக்குகளில் புகழ் பெற்ற கே.டி.எஸ்.துள்சி ஆஜரானார். இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு ஆதரவாக வழக்கறிஞர் சுஷில்குமார் ஆஜரானார். மனுக்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட 13-ம் தேதியே வாதத்தை அனுமதிக்காமல், தலைமை நீதிபதி சம்பந்தப்பட்ட நீதிபதி

அமர்வு விசாரணைக்கு 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகக் குறிப்பிட்டார். அதனால், அ.தி.மு.க தரப்பு அச்சம் அடைந்தது. அ.தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்கள் சிலர் டெல்லியில் முகாமிட்டனர்.

நாரிமனுக்கு எதிர்ப்பு

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நாரிமன் ஆஜரானது, டெல்லி வழக்கறிஞர்கள் வட்டாரத்தை ஆச்சர்யப்படுத்தியது. நாரிமன் இந்த வழக்கில் ஆஜராவதற்கு எதிராக உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி புகார் கொடுத்தார். நாரிமனின் மகனான ரோஹின்டன் நாரிமன், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பதால், இவர்கள் அந்த வழக்கில் தங்கள் செல்வாக்கை செலுத்துவார்கள் என்று அதில் தெரிவித்திருந்தார். அது உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பைக் கிளப்பியது.

வழக்கத்துக்கு மாறான ஜாமீன்

தலைமை நீதிபதி அமர்வின் முன்பாக ஜாமீன் மனு மீதான விசாரணை பகல் 12 மணிக்கு முன்பாகவே தொடங்கியது. சுமார் 45 மணி நிமிடங்கள் விசாரணை நடைபெற்றது. வழக்கறிஞர் நாரிமனுக்கும் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்துவுக்கும்தான் வாதம். இடையே 10 நிமிடங்கள் சுப்பிரமணியன் சுவாமிக்குக் கிடைத்தன. அந்த அமர்வில் இருந்த மற்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஏ.கே.சிக்ரி அமைதியாகக் கேட்டுக்கொண்டு இருந்தனர். இறுதியில், ஜாமீன் வழங்குவதாக தலைமை நீதிபதி கூறினார். வழக்கமான முறைகளுக்கு மாறாக, ஜெ. தரப்பினருக்கு எப்படி ஜாமீன் வழக்கப்பட்டது என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நடக்கின்றன.

நேரில் வர வேண்டாம்!

உச்ச நீதிமன்றத் நீதிபதிகளின் உத்தரவை, மேலோட்டமாகப் பார்த்தால், ''டிசம்பர் 18-ம் தேதி வரை தண்டனையை நிறுத்தி வைக்கிறோம். வீட்டுக் காவல் எல்லாம் எதுவும் கிடையாது. ஜெயலலிதாவை ஜாமீனிலேயே விடுதலை செய்கிறோம். ஜெயலலிதா தரப்பு கேட்டது 6 வாரகால அவகாசம்தான். ஆனால், நாங்கள் 8 வாரம் அவகாசம் கொடுக்கிறோம். மேல் முறையீட்டில் ஜெயலலிதா நேரில் ஆஜராகத் தேவை இல்லை. அவருடைய வழக்கறிஞர்கள் வந்தாலேபோதும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு செக்!

உச்ச நீதிமன்ற உத்தரவில், ''ஜாமீன், விடுதலை மற்றும் தண்டனைக் குறைப்பு ஆகியவற்றைக் கேட்பதற்கு ஜெயலலிதாவுக்கு உரிமை உண்டு. ஆனால், பிரபல வழக்கறிஞர்களை எல்லாம் வைத்து வாதாடி, இந்த வழக்கை ஜெயலலிதா 18 ஆண்டுகள் இழுத்தடித்தார். இப்போது இதில், நாங்கள் ஜாமீன் வழங்கினால், இந்தச் சலுகையைப் பயன்படுத்தி மேல்முறையீட்டு வழக்கை 20 ஆண்டுகளுக்கு அவர் இழுத்தடிப்பார் என்று ஏன் நினைக்கக் கூடாது? என்ற கேள்வியை எழுப்பினர்.

''தற்போது ஜாமீன் வழங்குகிறோம். சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை டிசம்பர் 18-ம் தேதி வரை நிறுத்தி வைக்கிறோம். ஆனால், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கான வேண்டுகோள் மனுவை

நீங்கள் உடனடியாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். 35 ஆயிரம் பக்கங்கள் உள்ள வழக்கின் ஆவணங்களை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் டிசம்பர் 17-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். அதில் ஒரு நாள் தாமதம் ஏற்பட்டாலும், நாங்கள் ஜாமீனை உடனடியாக ரத்து செய்வோம். மேல் முறையீட்டு வழக்கை மூன்றே மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். ஓர் ஒத்திவைப்புக்குக்கூட ஜெயலலிதா தரப்பு முயற்சிக்கக் கூடாது. தங்களது உத்தரவில், மற்ற மனுதாரர்களுக்கு (தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் சுப்பிரமணியன் சுவாமி) ஜெயலலிதா தரப்பில் இருந்து எந்தவித அச்சுறுத்தலும் இருக்கக் கூடாது. அப்படி ஏதாவது ஏற்பட்டு, அந்த மனுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகினால், உடனடியாக ஜாமீனை ரத்து செய்துவிடுவோம்'' என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிபந்தனையைப் பின்பற்ற வேண்டிய பொறுப்பு, ஜெயலலிதாவைவிட அ.தி.மு.க-வினருக்கே அதிகம் உள்ளது.

ஒருவேளை மூன்று மாதங்களில் முடியப்போகும், மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஜெயலலிதாவுக்குச் சாதகமாக வந்தால், அவர் உடனடியாக மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சர் ஆகிவிடுவார். அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் இருப்பதால், இந்த ஆட்சியிலேயே அவர் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட கால அவகாசம் நிறைய இருக்கிறது. ஆனால், தீர்ப்பு அங்கும் பாதகமாக வந்தால், அது ஜெயலலிதாவுக்கு உச்சக்கட்ட அதிகாரச் சறுக்கலாக இருக்கும்.

டிசம்பர் 18

உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த மனுவை மீண்டும் டிசம்பர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். இது மிகமிக நூதனமாக ஜெயலலிதாவுக்கு வைக்கப்பட்டுள்ள செக். டிசம்பர் 18-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது, ஜெயலலிதா தரப்பு மேல் முறையீடு செய்வதற்கான வேண்டுகோள் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும். 35 ஆயிரம் பக்கங்கள் உள்ள வழக்கின் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்க வேண்டும். அதற்கிடையே, சுப்பிரமணியன் சுவாமியிடம் அ.தி.மு.க-வினர் எந்த வம்புதும்பும் செய்திருக்கக் கூடாது. இவற்றில் ஏதாவது மீறப்பட்டு இருந்தால், அன்றே ஜாமீனை ரத்துசெய்து உச்ச நீதிமன்றம் தனது சாட்டையைச் சுழற்றத் தயங்காது.

- சரோஜ் கண்பத், ஜோ.ஸ்டாலின்