Published:Updated:

பீகார்: முதல்வர் நிதிஷ் குமார் கலந்துகொண்ட விழா மேடை அருகே குண்டுவீச்சு - காவல்துறை தீவிர விசாரணை!

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ( ட்விட்டர் )

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்ற விழா மேடையின் அருகே வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அண்மையில் தனது சொந்த ஊரான பக்தியார்பூரில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்றபோது, பாதுகாப்பு குறைபாடு காரணமாக மர்மநபர் ஒருவர் அவரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்தத் தாக்குதலின்போது பதிவான சிசிடிவி காட்சிகள் வைரலாகி, பேசுபொருளாகின.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
ட்விட்டர்

இந்த நிலையில், இன்று பீகார் மாநிலம் நாளந்தாவில் முதல்வர் நிதிஷ் குமார் ஜென்பான் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது நிதிஷ் குமார் அமர்ந்திருந்த மேடைக்கு அருகே வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், அவருடைய பாதுகாவலர்கள் உடனே அவரைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். விழா மேடை அருகே குண்டு வீசப்பட்டது தொடர்பாக ஒருவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

ஒரு மாநிலத்தின் முதல்வர் இரண்டாவது முறையாக பொதுவெளியில் அச்சுறுத்தலுக்குள்ளாவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism