Published:Updated:

விழுப்புரம்: காவல்துறை குறித்து அவதூறு பேச்சு! - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்கு!

சி.வி.சண்முகம்

விழுப்புரத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம்: காவல்துறை குறித்து அவதூறு பேச்சு! - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்கு!

விழுப்புரத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published:Updated:
சி.வி.சண்முகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி இரவு, விழுப்புரம் நகராட்சி 42 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். அவர் பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்திலிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், "போதும்... நிறுத்து நிறுத்து" என குரல் எழுப்பியதால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மேற்கு காவல் நிலையம்
விழுப்புரம் மேற்கு காவல் நிலையம்

அப்போது கோபம் கொண்டு பேசிய சி.வி.சண்முகம், "போய் பொன்முடியை வரச்சொல்லு. பொன்முடி இல்ல, ஸ்டாலினை வரசொல்லு... நான் கேட்கின்ற கேள்விக்கு ஸ்டாலினை பதில் சொல்ல சொல். யாரை மிரட்டி பார்க்கிற. வேடிக்கை பார்க்கும் காவல்துறையே, இந்த மிரட்டலுக்கு இந்த சண்முகம் பயப்படமாட்டான். இரவு 12 மணி வரை இங்கு நிற்கிறேன், திமுக-வினருக்கு தைரியம் இருந்தால் வாங்க பார்க்கிறேன்" என்று காட்டமாக பேசியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில், காவல்துறை குறித்து அவதூறாக பேசியது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் (294 B, 504) கீழ் சி.வி.சண்முகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism