Published:Updated:

நிர்வாண போஸ்... நடிகர் ரன்வீருக்காக ஆடைகள் சேகரிக்கும் மத்தியப் பிரதேச தொண்டு நிறுவனம்!

ஆடை நன்கொடை பாக்ஸ்

மத்தியப் பிரதேசத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த நடிகர் ரன்வீர் சிங்குக்கு ஆடைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.

நிர்வாண போஸ்... நடிகர் ரன்வீருக்காக ஆடைகள் சேகரிக்கும் மத்தியப் பிரதேச தொண்டு நிறுவனம்!

மத்தியப் பிரதேசத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த நடிகர் ரன்வீர் சிங்குக்கு ஆடைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.

Published:Updated:
ஆடை நன்கொடை பாக்ஸ்

நடிகர் ரன்வீர் சிங் சமீபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த பத்திரிகை ஒன்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, விவாதக் குரலும் எழுந்திருக்கிறது. சிலர் ரன்வீர் சிங்கின் செயல் மிகவும் துணிச்சலானது என்று பாராட்டியும் இருக்கின்றனர். இந்த நிலையில் மும்பையில் ரன்வீர் சிங் மீது தொண்டு நிறுவனம் ஒன்று போலீஸில் புகார் அளித்திருக்கிறது.

பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாகக் கூறி மும்பை போலீஸார் ரன்வீர் சிங் மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர். சில இடங்களில் ரன்வீர் சிங்குக்கு எதிராகப் போராட்டமும் நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கிடையே மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று, ரன்வீர் சிங்கின் புகைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதோடு, ரன்வீர் சிங்குக்காக பொதுமக்களிடம் ஆடைகள் சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறது.

ஆடை நன்கொடை பாக்ஸ்
ஆடை நன்கொடை பாக்ஸ்

இந்தூரை சேர்ந்த `நேகி கீ திவார்’ என்ற தொண்டு நிறுவனம் ரன்வீர் சிங்குக்குக் கொடுப்பதற்காக பொதுமக்களிடம் பழைய ஆடைகளைச் சேகரித்துவருகிறது. ஆடைகள் சேகரிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியிருக்கிறது. பொதுமக்கள் பழைய ஆடைகளைப் போடுவதற்காக சாலையோரம் நன்கொடை பாக்ஸ் ஒன்றையும் தொண்டு நிறுவனம் வைத்திருக்கிறது.

இது குறித்து ரன்வீர் சிங்குக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் தொண்டு நிறுவனப் பிரதிநிதி கூறுகையில், ``ரன்வீர் சிங் இளைஞர்களின் முன்மாதிரியாக இருக்கிறார். அவரைப் பல இளைஞர்கள் பின்பற்றுகின்றனர். ரன்வீர் சிங்கின் இந்தப் புகைப்படங்கள் மலிவான விளம்பரமாகவே தெரிகின்றன. இது இளைஞர்களை பாதிக்கும். இது தொடரக் கூடாது. எனவேதான் போராட்டம் நடத்துகிறோம்” என்று தெரிவித்தார். தன்னுடைய கணவரின் செயலுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் நடிகை தீபிகா படுகோனே திணறிக்கொண்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உர்ஃபி ஜாவேத்
உர்ஃபி ஜாவேத்

இதற்கிடையே நடிகர் ரன்வீர் சிங்கின் துணிச்சலான செயலை பார்த்து நடிகை உர்ஃபி ஜாவேத் தனது மேலாடையைத் துறந்திருக்கிறார். விதவிதமான ஆடைகளை அணிவதில் மிகவும் பிரபலமான உர்ஃபி ஜாவேத் தனது மேலாடையை துறந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.