Published:Updated:

ஓ.பி.எஸ். Vs இ.பி.எஸ்... - மக்கள் நலனில் யாருக்கு அதிக அக்கறை?

ஓ.பி.எஸ். Vs இ.பி.எஸ்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி... மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருவரின் 'தமிழக முதல்வர்' செயல்பாடுகள் எப்படி இருந்தன?

ஓ.பி.எஸ். Vs இ.பி.எஸ்... - மக்கள் நலனில் யாருக்கு அதிக அக்கறை?

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி... மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருவரின் 'தமிழக முதல்வர்' செயல்பாடுகள் எப்படி இருந்தன?

Published:Updated:
ஓ.பி.எஸ். Vs இ.பி.எஸ்.

ஓ.பன்னீர்செல்வம் இரண்டுமுறை முதல்வராக இருந்தபோதும் அவரது நடவடிக்கைகள் அனைத்தும் ஜெயலலிதா மற்றும் சசிகலா விருப்பத்தின்பேரிலேயே அமைந்தன. அதிலும் இரண்டாம் ஆட்சிக்காலம் முழுவதும் ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்கிய நீதிமன்றத்துக்கு எதிரான போராட்டங்கள், மேல்முறையீட்டு வேலைகள் ஆகியவைதான் நடந்தனவே தவிர, வேறு வேலைகள் பெரிதாக நடக்கவில்லை.

ஜெயலலிதா இருந்தவரை அமைச்சர்கள் உட்பட கட்சிக்காரர்கள் பெட்டிப்பாம்பாக அடங்கியிருந்தார்கள். பேட்டிகள் கொடுப்பதோ பத்திரிகையாளர்களைச் சந்திப்பதோ ஜெயலலிதாவும் செய்ததில்லை; மற்றவர்களையும் செய்ய விட்டதில்லை. ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோதும் பத்திரிகையாளர்களைச் சந்தித்ததில்லை. அவர் அதிகநேரம் நடத்திய முதல் பிரஸ்மீட், ஜெயலலிதா சமாதியில் 'தர்மயுத்தம்' தொடங்கியபோதுதான். மூன்று முறை ஆட்சிக்காலத்தில் நினைவில் வைத்துக்கொள்ளும்படி நடந்த ஒரே சம்பவம் 'ஜல்லிக்கட்டு'தான்.

ஓ.பி.எஸ். Vs இ.பி.எஸ்
ஓ.பி.எஸ். Vs இ.பி.எஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்வரானபோது காட்சிகள் மாறியிருந்தன. அதுவரை அடக்கப்பட்டிருந்த கட்சிக்காரர்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. அறிக்கைகள், பத்திரிகையாளர் சந்திப்பு என்று கட்சியின் முக்கியத் தலைவர்கள் எல்லோருமே பிஸியானார்கள். இதில் நல்லது, கெட்டது இரண்டுமே நடந்தது. ஓர் அமைச்சரைத் துறைசார்ந்த விளக்கம் கொடுப்பதற்குக்கூட ஜெயலலிதா அனுமதித்ததில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி காலத்தில் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக முன்வைத்தார். விஜயபாஸ்கர் கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து வெளிப்படையாக விளக்குகிறார். இவையெல்லாம் அவசியமானவை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதே சமயம், 'அம்மா இட்லியும் சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை', 'மோடி எங்கள் டாடி' என்று திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் தங்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தைக் கேலிக்கூத்தாக்குவதும் நடக்கிறது. ஜெயக்குமாருக்குப் பாடவும் தெரியும் என்பதும் செல்லூர் ராஜுவுக்குள் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி ஒளிந்திருக்கிறார் என்பதும் தெரியவந்ததும் எடப்பாடி ஆட்சியில்தான்.

ஜெயலலிதா, ஓ.பி.எஸ் போல அல்லாமல் தொடர்ச்சியாகப் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் எடப்பாடி, எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார். அதிகாரிகள் ஜெயலலிதாவை அணுகமுடியாத நிலை இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளைக் கலந்தாலோசித்துப் பல முக்கிய முடிவுகளை எடுக்கிறார். அதேநேரம் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முதல் இ-பாஸ் வரை தெளிவில்லாமல் நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டேயிருப்பது ஒரு முதல்வராக மைனஸ்தான்.

ஓ.பி.எஸ்.  இ.பி.எஸ்
ஓ.பி.எஸ். இ.பி.எஸ்

ஜெயலலிதா இருந்தவரை எதிர்க்கட்சிக்காரர்களுடன் அன்னந்தண்ணி புழங்கக்கூடாது என்று தடை விதித்திருந்தார். ஆனால் மூன்றாவதுமுறை ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானபோது தி.மு.கவுடன் நட்புபேணி அரசியல் நாகரிகம் காத்தார். 'பன்னீர்செல்வம் ஸ்டாலினுடன் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும்' இருந்ததாகக் குற்றச்சாட்டையே முன்வைத்தார் சசிகலா. எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை சகாக்களும் மாற்றுக்கட்சிகளுடன் மரியாதையும் நட்பும் காட்டுவது வரவேற்கத்தக்க மாற்றங்கள்.

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிமீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சேலம் எட்டுவழிச்சாலை போராட்டம், குட்கா ஊழல் குற்றச்சாட்டுகள் தொடங்கி சம்பந்திக்கு கான்ட்ராக்ட் கொடுத்ததாக விமர்சனங்கள் என்று பல கரும்புள்ளிகள். `நடப்பது பி.ஜே.பி ஆட்சிதான்', `மத்திய அரசு சொன்னதற்கெல்லாம் தலையாட்டுகிறார்', `மாநில அரசின் உரிமைகளை அடகுவைத்துவிட்டார்' என்று கடும் குற்றச்சாட்டுகள் அள்ளிவீசப்படு கின்றன. இவையெல்லாம் வெளியில் வைக்கப்படும் விமர்சனங்கள். ஆனால் கட்சியில் கடந்த நான்காண்டுகளில் தன்னை எடப்பாடி நிலைநிறுத்திவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

- இவர்கள் இருவரில் யார் சிறந்த முதல்வர் வேட்பாளர்..? - ஃப்ளாஷ்பேக்கோடு அலசும் முழுமையான கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > ஓ.பி.எஸ். Vs இ.பி.எஸ். யார் சிறந்த முதல்வர் வேட்பாளர்? https://bit.ly/3aHfdQt

சிறப்புச் சலுகைகள்:
ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth
விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV