Published:Updated:

"கனிம வளக் கொள்ளைக்கு அதிகாரிகளே துணைபோகிறார்கள்!"- வேலூர் கலெக்டரிடம் புகாரளித்த திமுக கவுன்சிலர்

மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்த கவுன்சிலர்

`சத்துவாச்சாரி பகுதி-5ல் வசித்துவரும் சி.கே.சிவாஜி, அவர் குடும்பத்தினர் இந்த மூலக்கொல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக மண்ணை அள்ளியும், கற்களை வெட்டி எடுத்தும், வெடிவைத்துத் தகர்த்தும் விற்பனை செய்துவருகிறார்கள்.' - தி.மு.க கவுன்சிலர் சுதாகர்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் வாராந்தர மக்கள் குறைதீர்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், வேலூர் மாநகராட்சி 24-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சுதாகர் கொடுத்த மனுவில், ‘‘எனது வார்டுக்குட்பட்ட மூலக்கொல்லைப் பகுதியில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் இருக்கின்றன. சத்துவாச்சாரி பகுதி-5ல் வசித்துவரும் சி.கே.சிவாஜி, அவர் குடும்பத்தினர் இந்த மூலக்கொல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக மண்ணை அள்ளியும், கற்களை வெட்டி எடுத்தும், வெடிவைத்துத் தகர்த்தும் விற்பனை செய்துவருகிறார்கள்.

மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்த கவுன்சிலர்
மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்த கவுன்சிலர்

இவர்களின் சட்டவிரோதச் செயல்களுக்கு அதிகாரிகளும் உறுதுணையாக இருக்கிறார்கள். சிவாஜி, அவர் மனைவி குட்டிலட்சுமி, மகன் வினோத்குமார் ஆகியோர் நடத்திவரும் நிறுவனத்தின் மூலம், மொத்தமாக எவ்வளவு மண்ணைத் தோண்டி எடுத்திருக்கிறார்கள் என்பதை சாட்டிலைட் மூலம் ஆய்வுசெய்து, கனிமம் மற்றும் சுரங்க விதியின்கீழ் உரிமக் கட்டணம் மற்றும் அபராதம் வசூலிக்க வேண்டும்.

அதோடு, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம்-1957ன்கீழ் சட்டவிரோத சுரங்கம், கனிமங்களைத் திருடுதல் ஆகிய பிரிவுகளில் சிவாஜி, அவர் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும்.

புகாருக்குள்ளான மூலக்கொல்லைப் பகுதி
புகாருக்குள்ளான மூலக்கொல்லைப் பகுதி

இதற்குத் துணைபோன மாநகராட்சி ஆணையர், மண்டல அலுவலர், கனிம வளத்துறை உதவி இயக்குநர், வருவாய்க் கோட்டாட்சியர், வேலூர் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்மீதும் அபராதத்துடன்கூடிய குற்றவியல் வழக்கு தொடர வேண்டும். மூலக்கொல்லைப் பகுதியில் மாட்டுக் கொட்டகை அமைத்து வசிப்பவர்களை விரட்டியடித்துவிட்டு இரவு நேரங்களில், மண் அள்ள முயல்வதையும் தடுக்க வேண்டும். இயற்கை வளங்களை அதிகாரிகள் துணையுடன் சூறையாடுவதைப் பொதுநலன் கருதி தடுக்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.