Published:Updated:

``தமிழகத்தில் பிரியங்கா காந்தி தலைமையில், மாபெரும் மகளிர் பேரணி!" - கே.எஸ்.அழகிரி தகவல்

கே.எஸ்.அழகிரி ( Arun.K )

தமிழ்நாட்டில் பிரியாங்கா காந்தி தலைமையில், மாபெரும் மகளிர் பேரணி நடத்தப்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

``தமிழகத்தில் பிரியங்கா காந்தி தலைமையில், மாபெரும் மகளிர் பேரணி!" - கே.எஸ்.அழகிரி தகவல்

தமிழ்நாட்டில் பிரியாங்கா காந்தி தலைமையில், மாபெரும் மகளிர் பேரணி நடத்தப்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
கே.எஸ்.அழகிரி ( Arun.K )

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திவரும் பாரத் ஜோடோ யாத்திரையின் தொடர்ச்சியாக 'அரசியல் அமைப்பைப் பாதுகாப்போம் - கையோடு கைகோப்போம்' என்ற பரப்புரையை தமிழ்நாட்டில் முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்லப் பிரசாத் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பாரத் ஜோடோ யாத்திரை
பாரத் ஜோடோ யாத்திரை

அதன் பிறகு செய்தியாளரிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் 100 காங்கிரஸ் கொடிகள் ஏற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அடுத்தகட்டமாக வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும்விதமாக, 'அரசியல் அமைப்பைப் பாதுகாப்போம் - கையோடு கைகோப்போம்' என்ற பரப்புரையை ஜனவரியில் தொடங்கவிருக்கிறோம். இது தொடர்பாக மாவட்டத் தலைவர்களுடன் விவாதிக்கும் கூட்டம் நடைபெற்றது.

இந்தப் பரப்புரையை மாநில அளவில் ஜனவரி 15-ம் தேதிக்குள்ளும், மாவட்ட அளவில் ஜனவரி 16 முதல் 30-ம் தேதிக்குள் முடிக்கவும், ஆன்லைன் சூதாட்ட மசோதா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களை முடக்கிவைத்திருக்கும் தமிழக ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என எச்சரிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

ராகுல் காந்தி - பிரியாங்கா காந்தி
ராகுல் காந்தி - பிரியாங்கா காந்தி
ட்விட்டர்

'அரசியலமைப்பைப் பாதுகாப்போம் - கையோடு கைகோப்போம்' என்ற பரப்புரையில் இந்திய பாரத் ஜோடோ யாத்திரை நடைப்பயணம் குறித்த ஸ்டிக்கர் ஒவ்வொரு வீட்டின் கதவிலும் ஒட்டுவது, அந்த நடைப்பயணத்தின் சிறப்பை மக்களிடம் கொண்டு சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும், பிரியங்கா காந்தி தலைமையில் மாபெரும் மகளிர் பேரணி நடத்தப்படவிருக்கிறது. அதில் மகளிர் கொள்கை விளக்க அறிக்கையை பிரியங்கா காந்தி வெளியிடவிருக்கிறார்" என்று தெரிவித்தார்.