Published:Updated:

`ராஜினாமாவை ஏற்க மாட்டோம்; தலைவராக சரத் பவார் தொடர வேண்டும்!' - கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

நிர்வாகிகள் கூட்டம்

`சரத் பவார் கட்சியின் தலைவராகத் தொடர வேண்டும்' என்று தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

Published:Updated:

`ராஜினாமாவை ஏற்க மாட்டோம்; தலைவராக சரத் பவார் தொடர வேண்டும்!' - கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

`சரத் பவார் கட்சியின் தலைவராகத் தொடர வேண்டும்' என்று தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

நிர்வாகிகள் கூட்டம்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கடந்த சில நாள்களுக்கு முன்பு, திடீரென தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரது அறிவிப்பு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்விதமாக அமைந்தது. புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க சரத் பவார், மூத்த தலைவர்கள் அடங்கிய கமிட்டி ஒன்றை நியமித்தார். கட்சி நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதால், தனது முடிவை மறுபரிசீலனை செய்வதாக சரத் பவார் அறிவித்திருந்தார். அதோடு கட்சி நிர்வாகிகளைக் கூட்டி, அடுத்த தலைவர் குறித்து சரத் பவார் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும், மகாராஷ்டிராவில் முதல்வர் வேட்பாளராக அஜித் பவாரை நிறுத்தலாம் என்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை தெரிவித்தனர்.

`ராஜினாமாவை ஏற்க மாட்டோம்; தலைவராக சரத் பவார் தொடர வேண்டும்!' - கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

இது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக சரத் பவார் நியமித்த நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை தென்மும்பையிலுள்ள கட்சி அலுவலகத்தில் கூடியது. இதில் பிரஃபுல் படேல், சகன் புஜ்பால், தனஞ்சே முண்டே, ஏக்நாத் கட்சே, திலிப் வல்சே பாட்டீல், சுனில் தட்காரே, ஜிதேந்திர அவாட், ஜெயந்த் பாட்டீல் போன்ற முக்கியத் தலைவர்கள் கூடி சரத் பவாரின் ராஜினாமா மற்றும் புதிய தலைவர் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு முன்னாள் எம்.பி பிரஃபுல் படேல் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.

சரத் பவார்
சரத் பவார்

அதில், ``கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக சரத் பவார் விருப்பம் தெரிவித்திருக்கிறார். ஆனால், அவரின் முடிவை நாங்கள் நிராகரித்திருக்கிறோம். அவர் தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டும் என்ற ஒருமித்த கருத்தின் அடிப்படையில், கேட்டுக்கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக கட்சியின் உயர்மட்டக்குழு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அந்தத் தீர்மானத்தை சரத் பவார் மதிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். தீர்மானத்தை எடுத்துச் சென்று சரத் பவாரிடம் கொடுத்து, ராஜினாமா முடிவைத் திரும்பப் பெறும்படி கேட்டுக்கொள்வோம். கட்சியின் நலனைக் கருத்தில்கொண்டு, சரத் பவார் தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

அஜித் பவார், சுப்ரியா சுலே ஆகியோர் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் வந்தவுடன் கட்சித் தொண்டர்கள் சரத் பவாருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். சரத் பவார் தனது ராஜினாமா முடிவைத் திரும்பப் பெறுவது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை. ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்டோர் சரத் பவாரை தொடர்புகொண்டு, ராஜினாமா முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அஜித் பவார்
அஜித் பவார்

அதோடு அடுத்த ஆண்டு மகாராஷ்டிராவில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்து கட்சி நிர்வாகிகள் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திவருகின்றனர். தற்போது மகாவிகாஷ் அகாடியில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குத்தான் அதிக எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் சமீபகாலமாக பா.ஜ.க-வில் சேரப்போவதாக செய்தி வெளியாகிக்கொண்டிருக்கிறது.

அவர் கட்சி எம்.எல்.ஏ-க்களை உடைத்துக்கொண்டு பா.ஜ.க-வில் சேர திட்டமிட்டிருப்பதாகவும், அவருக்கு பா.ஜ.க முதல்வர் பதவி கொடுக்கவிருப்பதாகவும் செய்தி வெளியானது. இதையடுத்து அஜித் பவாரைத் தொடர்ந்து கட்சியில் தக்கவைத்துக்கொள்ள, முதல்வர் வேட்பாளராக அவரை முன்னிறுத்த தேசியவாத காங்கிரஸ் முடிவுசெய்திருக்கிறது. இதைக் கட்சியின் மூத்த தலைவர் சகன் புஜ்பாலும் உறுதிபடுத்தியிருக்கிறார்.