Published:Updated:

ஓராண்டு ஆட்சி: திமுக அரசு Vs மத்திய பாஜக அரசு! - மினி ஃபிளாஷ்பேக்

முதல்வர் ஸ்டாலின் - பிரதமர் மோடி

தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோதே, தி.மு.க-வுக்கும், மத்திய பா.ஜ.க அரசுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவிவந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகும், மத்திய அரசுடனான முட்டலும் மோதலும் தொடரவே செய்கின்றன.

ஓராண்டு ஆட்சி: திமுக அரசு Vs மத்திய பாஜக அரசு! - மினி ஃபிளாஷ்பேக்

தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோதே, தி.மு.க-வுக்கும், மத்திய பா.ஜ.க அரசுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவிவந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகும், மத்திய அரசுடனான முட்டலும் மோதலும் தொடரவே செய்கின்றன.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின் - பிரதமர் மோடி
ஓராண்டு ஆட்சி: திமுக அரசு Vs மத்திய பாஜக அரசு! - மினி ஃபிளாஷ்பேக்

தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோதே, பா.ஜ.க எதிர்ப்பு அரசியலில் தி.மு.க தீவிரமாக இருந்தது. பிரதமர் மோடி தமிழகம் வந்தபோதெல்லாம் #GoBackModi ஹேஷ்டேக்கை தி.மு.க-வினரும், தி.மு.க ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்துவந்து, எதிர்ப்பைத் தெரிவித்தனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி அமலாக்கம், இந்தி விவகாரம், தேசிய கல்விக் கொள்கை போன்ற பல பிரச்னைகளில் மத்திய அரசை தி.மு.க கடுமையாக விமர்சித்துவந்தது.

ஸ்டாலின், மோடி
ஸ்டாலின், மோடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய பா.ஜ.க அரசைக் கடுமையாக எதிர்த்துவரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் 2019-ம் ஆண்டு கொல்கத்தாவில் பிரமாண்டமான மாநாடு ஒன்றை நடத்தினார். பல மாநிலங்களிலிருந்து முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட அந்த மாநாட்டில், தி.மு.க சார்பில் ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். அப்போது மத்திய பா.ஜ.க அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“நரேந்திர மோடியை ஏன் கடுமையாக விமர்சிக்கிறீர்கள் என்று என்னிடம் சிலர் கேட்கிறார்கள். அவர் உங்களுக்கு என்ன இடைஞ்சல் கொடுத்தார் என்றும் கேட்கிறார்கள். எனக்கு ஒருவர் உதவி செய்கிறாரா, இடைஞ்சல் செய்கிறாரா என்பது முக்கியமல்ல. நாட்டு மக்களுக்கு ஒருவர் உதவி செய்கிறாரா இடைஞ்சல் செய்கிறாரா என்பதுதான் முக்கியம்.

நான் ஆட்சிக்கு வந்தால் தேனாறும் பாலாறும் ஓடும் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து, வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்குவந்தவர் நரேந்திர மோடி. மத்தியில் இருப்பது மக்களுக்கான ஆட்சி அல்ல. அது கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி, பெரும் நிறுவனங்களுக்கான ஆட்சி, பெரு முதலாளிகளுக்கான ஆட்சி. இந்திய அரசாங்கத்தை ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக நரேந்திர மோடி ஆக்கிவிட்டார்” என்று கடுமையாகச் சாடினார் ஸ்டாலின்.

மோடி
மோடி

கடந்த ஆண்டு, மே மாதம் தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். ஒரு மாநிலத்தில் எதிர்க்கட்சி இருக்கும்போது மத்திய அரசை எதிர்ப்பதற்கும், ஆளுங்கட்சியாக ஆன பிறகு மத்திய அரசை எதிர்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு பாதிக்கப்படாமல் இருப்பது முக்கியம். அப்போதுதான், மாநில நலன் சார்ந்த பணிகளையோ, திட்டங்களையோ மத்திய அரசின் ஒத்துழைப்போடு மாநில அரசால் நிறைவேற்ற முடியும். எனவே, மத்திய அரசு மீதான விமர்சனங்களை தி.மு.க தரப்பு குறைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு மீதான விமர்சனங்களை தி.மு.க தொடர்ந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடனேயே, ‘மத்திய அரசு’ என்பதற்கு பதிலாக ‘ஒன்றிய அரசு’ என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். பிறகு, அமைச்சர்கள் உள்ளிட்ட தி.மு.க-வினரும், தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியினரும், தி.மு.க ஆதரவாளர்களும் `ஒன்றிய அரசு’ என்றே குறிப்பிட ஆரம்பித்தனர். அதற்கு பா.ஜ.க தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்தவுடனேயே மத்திய அரசுடனான தி.மு.க-வின் மோதலாக அது பார்க்கப்பட்டது.

அது தொடர்பாக சட்டசபையில் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "ஒன்றிய அரசு என்ற சொல்லை கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் பயன்படுத்துகிறோம். அதைப் பார்த்து யாரும் மிரளக் கூடாது. ஒன்றிய அரசு என்ற சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துவோம். அதுதான் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை” என்று கூறினார்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதும் கடிதங்களில் ஒன்றிய அரசு என்றே குறிப்பிட ஆரம்பித்தனர். ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவதால், அதில் பிரிவினைவாதமும் இந்திய இறையாண்மையைச் சீர்குலைக்கும் போக்கும் இருப்பதாக பா.ஜ.க ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். ஒன்றிய அரசு என்று சொன்னதற்காக, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் என்றுகூட பா.ஜ.க தரப்பில் சிலர் கோரிக்கை வைத்தார்கள்.

ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை, இழப்பீடு பாக்கி விவகாரத்திலும் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்றன. மாநில அரசுக்குக் கிடைத்துக்கொண்டிருந்த பெரும்பாலான வரி இனங்களை மத்திய அரசு கொண்டுபோய்விட்டதால், மாநில அரசு நிதியாதாரம் இல்லாமல் சிரமப்படுவதாக தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து கூறிவந்தார். அது தொடர்பான தனது கருத்துகளைப் பல நேரங்களில் அவர் காட்டமாக முன்வைத்தார்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. கொரோனாவால் அதிகமான பாதிப்புக்கு தமிழ்நாடு ஆளாகியிருக்கும்போது, மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டுக்கு குறைந்த அளவில் தடுப்பூசி ஒதுக்கப்படுவதாக தமிழக ஆட்சியாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. அதை மத்திய அரசு சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. உடனே, “இன்னும் இரண்டு நாள்களுக்குத்தான் தடுப்பூசி கையிருப்பு இருக்கிறது” என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அதையடுத்து, உடனடியாக தமிழகத்துக்கு தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு வழங்கியது.

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் ஆளுநராக மாற்றப்பட்டு, நாகாலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்துக்கு ஆளுநராக வருகிறார் என்ற செய்தி வெளியானதும் புதிய சர்ச்சை ஒன்று தொடங்கியது. தி.மு.க அரசுக்குக் குடைச்சல் கொடுப்பதற்காகவே முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமிக்கிறது என்று செய்திகள் பரபரத்தன. அதன்படியே, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு ஏற்பட்டது.

ஸ்டாலின், ரவி
ஸ்டாலின், ரவி

‘சக்தி வாய்ந்த முதல்வர்’ என்று ஆரம்பத்தில் ஸ்டாலினை ஆளுநர் பாராட்டினாலும், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பாமல் நீண்ட நாள் வைத்திருந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டும் என்று தி.மு.க மக்களவைக்குழு தலைவரான டி.ஆர்.பாலு பேட்டியளித்தார். ஆர்.என்.ரவிக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் தி.மு.க எம்.பி-க்கள் பிரச்னையைக் கிளப்பினர்.

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி இரண்டாவது முறையாக ஆளுநருக்கு அனுப்பியும், அதையும் நீண்ட கழித்தே மத்திய அரசுக்கு அனுப்பினார். நீட் மசோதா தவிர, மற்ற மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுவைத்திருக்கிறார். இதனால், ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்திருக்கிறது.

இது தவிர்த்து மொழி விவகாரத்திலும் மத்திய அரசுடன் தொடர்ந்து மோதியது தமிழக அரசு. கடந்த ஓராண்டுக்கால தி.மு.க ஆட்சியில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான உறவு மோதல்கள் நிறைந்ததாகவே இருந்தது. இரண்டாம் ஆண்டு இந்த உறவு எப்படியிருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism