Published:Updated:

ஊழல் வழக்கில் கைதான பெண் அதிகாரியுடன் அமித் ஷா - புகைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் கைது

அவினாஷ் தாஸ்

ஊழல் வழக்கில் கைதான ஐஏஎஸ் அதிகாரியுடன் அமித் ஷா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதால், சினிமா தயாரிப்பாளர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

ஊழல் வழக்கில் கைதான பெண் அதிகாரியுடன் அமித் ஷா - புகைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் கைது

ஊழல் வழக்கில் கைதான ஐஏஎஸ் அதிகாரியுடன் அமித் ஷா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதால், சினிமா தயாரிப்பாளர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
அவினாஷ் தாஸ்

பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் அவினாஷ் தாஸ் என்பவர், ட்விட்டரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜார்க்கண்டில் ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா சிங்கால் என்பவருடன் இருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். பூஜா கைதுசெய்யப்படுவதற்கு முன்பு இந்தப் படம் எடுக்கப்பட்டது என்றும் தாஸ் குறிப்பிட்டிருந்தார். அதோடு பெண் ஒருவர் மூவர்ணக்கொடி கலரில் ஆடை அணிந்திருந்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் பண மோசடி தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பூஜாவைக் கைதுசெய்துள்ளனர்.

தாஸ் ட்விட்டரில் புகைப்படத்தைப் பதிவிட்டது தொடர்பாக குஜராத் மாநிலம், அகமபாத் போலீஸார் கடந்த மே மாதம் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து தாஸ் முன்ஜாமீன் கோரி அகமதாபாத் செஷன்ஸ் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து அகமதாபாத் உயர் நீதிமன்றத்திலும் தாஸ் மேல் முறையீடு செய்தார். அதிலும் தாஸுக்கு முன்ஜாமீன் கிடைக்கவில்லை.

அவினாஷ் தாஸ்
அவினாஷ் தாஸ்

இதையடுத்து அகமதாபாத் போலீஸார் நேற்று மும்பைக்கு வந்தனர். அவர்கள் நேராக அவினாஷ் தாஸ் இல்லத்துக்குச் சென்று அவரைக் கைதுசெய்தனர். தாஸ் தனது அலுவலகத்துக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தபோது, அவரைக் கைதுசெய்து குஜராத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர் அகமதாபாத் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார். அவரைத் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க குற்றப்பிரிவு போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!