Published:Updated:

உ.பி தேர்தல்: நீதிக்காக 600 கி.மீ பயணிக்கும், `தாஜ்மஹால்’ மாவட்டம்! - ஆக்ரா கள நிலவரம் என்ன?

ஆக்ரா

ஆக்ராவின் கல நிலவரம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள தாஜ்மஹால் நகரத்துக்கு நேரடி விசிட் அடித்தோம்... இனி உத்தரப்பிரதேசம், ஆக்ராவிலிருந்து நாங்கள் நச்சினார்க்கினியன், பியர்சன்..!

உ.பி தேர்தல்: நீதிக்காக 600 கி.மீ பயணிக்கும், `தாஜ்மஹால்’ மாவட்டம்! - ஆக்ரா கள நிலவரம் என்ன?

ஆக்ராவின் கல நிலவரம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள தாஜ்மஹால் நகரத்துக்கு நேரடி விசிட் அடித்தோம்... இனி உத்தரப்பிரதேசம், ஆக்ராவிலிருந்து நாங்கள் நச்சினார்க்கினியன், பியர்சன்..!

Published:Updated:
ஆக்ரா

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் குறித்த தகவல்கள் இந்திய அளவில் கவனம் பெற்றுவருகின்றன. பிப்ரவரி 10-ம் தேதி, முதல் கட்டத் தேர்தல் மேற்கு உ.பி-யில் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், முதல் கட்டத் தேர்தல் நடக்கவிருக்கும் ஆக்ராவின் கள நிலவரம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள தாஜ்மஹால் நகரத்துக்கு நேரடி விசிட் அடித்தோம்... இனி உத்தரப்பிரதேசம், ஆக்ராவிலிருந்து நாங்கள் நச்சினார்க்கினியன், பியர்சன்..!

உலகப் புகழ்பெற்ற ஒருச் சுற்றுலா தளத்துக்கு தான் வரமோங்கிறதுக்கு அறிகுறி `பாசமா... அக்கறையோட' நம்பள சுத்தி வட்டமிடுற ஆட்டோக்காரங்க தான். அவங்க பேச்சு திறமை, விடாமுயற்சி எல்லாம் அபாரம் என்று இருவரும் வியக்க! வேலைய பாக்க நாலா பக்கமும் கிளம்பினோம்.

ஆக்ரா
ஆக்ரா

பியர்சன்: என்ன ப்ரோ? மதியம் 12 மணி ஆகியும் ஒரே பனி மூட்டம். கன்னுல எதையும் பாக்கமுடியல. தாஜ்மஹால ஒரு போட்டோ கூட எடுக்க முடியல, என்ன ப்ரோ பண்ணுறது?

ந.இனியன்: சரி கிளம்பி, பிஜிலி கர்க்கு பக்கத்துல இருக்க ஹிங்கி மண்டிக்கி வந்துரு. இங்க நிறைய ஷு கடைங்க இருக்கு. ஷேர் ஆட்டோ கார்கிட்ட 'தஸ்னு சொல்லு அப்படியும் ஒத்துக்கலனா பீஸ்னு' சொல்லிட்டு ஏறி வா.

இருவரும் ஹிங்கி மண்டியில் சந்திக்க...

பியர்சன்: ப்ரோ கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் ஷுகடையா இருக்கு? என்ன ப்ரோ லெதர் ஷூ 300 ரூபா! மத்ததெல்லாம் 100 ரூபானு சொல்றாங்க?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷூ மார்க்கெட்
ஷூ மார்க்கெட்

ந.இனியன்: ஆமா ப்ரோ! இது ஷு கடல். இந்த ஊர்ல ஷு உற்பத்தி, விற்பனைய நம்பி தான் பலரும் இருக்காங்க. தாஜ்மஹால், பேடா ஸ்வீட்டுக்கு அப்புறம் இங்க இது தான் பேமஸ்!

ஆக்ரா
ஆக்ரா

கோட்டைகள், மாளிகைகள் தொடங்கி காதலின் சின்னமாம் ஷாஜகானின் தாஜ்மஹால் வரை கொண்ட அழகிய நகரம்தான் ஆக்ரா. தாஜ்மஹால் கட்டடம் மாதிரியே இங்கு கிறிஸ்தவ கல்லறையும், ராதா சாமி என்பவரின் கல்லறை கோயிலும், சீக்கியர்களின் கோயிலும் இந்த நகரத்தின் பன்மைத்துவத்தின் அடையாளங்கள்.

ஆக்ரா
ஆக்ரா

சரி, ஆக்ரா தேர்தல் கள நிலவரம் என்ன'னு அலசுவோம் வாங்க..!

9 தொகுதிகளைக் கொண்ட ஆக்ரா மாவட்டத்தில் தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ரா கான்டோன்மன்ட் தொகுதியை எடுத்து கொள்வோம். இது ஒரு தனித் தொகுதி. ராணுவத்துக்கு‌ சொந்தமான பல இடங்கள் இந்தத் தொகுதியில் இருந்தாலும், இந்தப் பகுதியின் மக்களைப் பொறுத்தவரை எளிய பின்னணி கொண்ட உழைக்கும் மக்களே அதிகம்.

சமாஜ்வாடி கட்சியின் சார்பாக குன்வார்‌ சந், பா.ஜ.க சார்பாக தற்போதைய எம்‌.எல்.ஏ ஜி.எஸ் தர்மேஷ், காங்கிரஸ் ‌சார்பில் சிகந்தர்‌ வால்மீகி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக பாரத்தேந்திர அருண் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆக்ராவின் தீர்க்கப்படாத நீண்ட கால பிரச்னைகள்!

உலகப்புகழ் ‌பெற்ற சுற்றுலாத்தலங்கள் ‌பல இருந்தும், அதை வளர்த்தெடுக்க பெரிதாக எதுவும் செய்யப்படவில்லை என்பதும், எகிப்த்தின் கைரோவுக்கு இணையாக வளர்ந்திருக்க வேண்டிய ஆக்ரா மாநில சுற்றுலாத்துறையின் தேக்கமும் தான் பிரதானமான பிரச்னை என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ‌அனில் சுக்லா.

இது தொடர்பாகப் பேசிய அவர், ``உ.பி அரசின் மாநில பட்ஜெட்டில் தாஜ்மஹாலை விட மதுராவுக்குத்தான் அதிக நிதி ஒதுக்குகிறார்கள். இதனால் எந்தப் பயனும் இல்லை. தாஜ்மஹாலுக்கு என்று வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் தீடீரென்று மதுராவுக்குத் திரும்பிவிட மாட்டார்கள்" என்றார்.

மூத்த பத்திரிகையாளர் ‌அனில் சுக்லா
மூத்த பத்திரிகையாளர் ‌அனில் சுக்லா

ஷு உற்பத்தியின் தலைநகர் என்று அழைக்கப்படும் ஆக்ராவின் இன்னும் பிற சிக்கல்கள் குறித்துப் பேராசிரியர் அர்ஷத் கூறுகையில், ``நாட்டின் ‌ஒட்டுமொத்த ஷு உற்பத்தியில் 60 சதவிகிதத்தை நிறைவு செய்யும் இந்த மாநிலத்தில், தற்போது அரசின்‌ கவனிப்பின்மையால் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் லட்சக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

மேற்கு உத்தரப்பிரதேசத்தில் ஒரு பிரச்னை என்றால் நீதிக்காக 600 கி.மீ போகவேண்டி இருக்கு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கிளை பக்கத்தில் இருக்கும் லக்னோவில் எதுக்கு? இந்த மக்களின் உடனடித் தேவை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கிளை ஆக்ராவில் அமைக்கப்படுவது தான்" என்று பேராசிரியர் அர்ஷத் தெரிவித்தார்.

பேராசிரியர் அர்ஷத்
பேராசிரியர் அர்ஷத்

தொடர்ந்து பேசியவர், ``மேற்கு உத்தரப்பிரதேச மக்கள் தாங்கள் செய்யாத பாவத்துக்காக தண்டனைகளை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றனர். நீதிக்காக பல நூறு கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியுள்ள நிலை என்பது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மக்கள் மனசு

பொது மக்களின் மன நிலையை அறிந்துகொள்ள பலதரப்பட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கும், மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளுக்கும் சென்று விசாரித்தோம்.

நந்துபுறா பகுதியில் வசிக்கும் ராமாத்தி என்ற பெண் நம்மிடம் பேசிய போது, ``நான் மாயாவதிக்குத் தான் ஓட்டு போடுவேன். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டார் மோடி. நிறைய பேர் வேலைவாய்ப்பை இழந்து இருக்காங்க. மக்களை‌ பிச்சக்காரங்களாக்கி இலவச ரேஷனுக்கு லைன்'ல நிக்க வச்சுட்டாங்க. இங்க யாருக்கும் வேலை இல்லை. கொரோனாவையே காரணமா சொல்றாங்க. எங்க பேகன்ஜி (மாயாவதி) தான்‌ ஜெயிக்கனும். அவங்க தான் ஏழைகளின் கடவுள். நான் அவருக்கு தான் ஓட்டு போடுவேன்" என்றார்.

பா.ஜ.க-வின் தீவிர ஆதரவாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட கௌரவ், ``பி.ஜே.பி-க்குத் தான் என்னோட ஆதரவு. இது இந்துக் கட்சி அதுவே போதும். ராம்‌ மந்திர்‌, வளர்ச்சி ஆக்ரா மெட்ரோ நகரமாக உள்ளது‌. கங்கை நீருக்காக பெரிய டேங்கையே கட்டியிருக்கிறார்கள்‌. பி.ஜே.பி-யால் தான் மெட்ரோவை இங்கு கொண்டுவர முடிந்தது" என்று தெரிவித்தார்.

ராமாத்தி - கௌரவ் - முகமது அஸீஸ்
ராமாத்தி - கௌரவ் - முகமது அஸீஸ்
தாஜ்மஹால் ஒட்டியப் பகுதியைச் சேர்ந்த முகமது அஸீஸ், ``என்னைப் பொறுத்த வரைக்கும் இங்கிருக்கும் ‌அரசியல் கட்சிகள் கிட்ட நேர்மை இல்லை. ஏழைகளின் கஷ்டங்களை அவங்க புரிஞ்சிக்கணும். தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் எல்லாம் மூடப்பட்டிருக்கு விவசாயிகள் கஷ்டத்துல இருக்காங்க.
ஆக்ரா
ஆக்ரா

நான் என்னைப்போல சாதாரண மக்கள் கிட்ட கேட்குறது எல்லாம் மாற்றம் மிக அவசியமா தேவைப்படுது" என்றவர், ``இந்துக்களோ முஸ்லிம்களோ தேவை மாற்றம்தான் இங்க‌" என்று கூறினார்.

தேர்தல் களத்தை‌ப் பொறுத்தவரை, பகுஜன்‌ சமாஜ் கட்சிக்குத்தான்‌ ஓட்டு என்று அந்தக் கட்சியை சார்ந்தவங்களும் `டபுள்‌ இன்ஜின்‌ சர்க்கார்‌' என்று சொல்லப்படுற யோகி - மோடிக்கு‌ தான் மக்கள் ஆதரவுனு பா.ஜ.க-வும் பிரசாரங்களை பரபரப்பாக நடத்திவருகிறார்கள்.

இந்தத் தொகுதியை பொறுத்தவரை போட்டி `பி.எஸ்.பி - பி.ஜே.பி' இடையேதான் என்று பேசப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தின் `தலித் தலைநகரம்' என்றழைக்கப்படும் ஆக்ராவின் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த உ.பி‌ அரசியலையும்‌ தீர்மானிக்கக் கூடும் என்பதே அரசியல் நோக்கர்களின் பார்வையாக இருக்கிறது..!

தொடர்ந்து அலசுவோம் உத்தரப்பிரதேசத்தை...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism