Published:Updated:

இளைஞர்களின் இதயநாயகன் ஓ.பி.ஆர்... யார் சொன்னா? - அவரேதான்! - ரவீந்திரநாத் எஸ்.டி.டி. வரலாறு

ரவீந்திரநாத்
News
ரவீந்திரநாத்

‘இளைஞர்களின் இதயநாயகன் ஓபிஆர்’ என்று, அவரே அவரை ஆதரித்து போஸ்ட் போட்டுக்கொள்கிறார். ‘இதெல்லாம் யார் சொல்றாங்க...’ என்று கேட்டால், ‘மனசாட்சி இல்லாதவங்க பாஸு. அதான் யாருமே சொல்றதில்லை. ஸோ, நானே சொல்லிக்கிட்டேன்’ என்கிறார்.

இந்தியா இதுவரை எத்தனையோ வித்தியாசமான அரசியல்வாதிகளை பார்த்திருக்கிறது. சட்டமன்றத்தில் நாக்கைத் துருத்திய விஜயகாந்த் முதல், நாடாளுமன்றத்தில் பாட்டுப் பாடிய நவநீதகிருஷ்ணன் வரை நிறைய பேர். ஆனால், ’இவரு என்ன ரகம்னே தெரியலையே’ என்பதாக இந்திய அரசியலில் இடியென நுழைந்திருக்கிறார் ஒருவர். அவர்... அண்ணன் ஓ.பி. ரவீந்திரநாத் குமார்!

ரவீந்திரநாத்
ரவீந்திரநாத்

அவரின் ட்விட்டர் அக்கவுன்டில் இருந்தே ஆட்டத்தை ஆரம்பிப்போம். அடடா... அதைப் பார்க்க கண்கோடி வேண்டும். ‘#YoungstersInspiration' என்ற அடைமொழி இல்லாமல் ஒரு பதிவையும் இடுவதில்லை, அண்ணன். தந்தையர் தின வாழ்த்தா... அதில் இடம்பெறுகிறது, ‘#YoungstersInspiration'! பதவியேற்பு விழா அறிவிப்பா... அதிலும் இடம் பெறுகிறது ‘#YoungstersInspiration'! இன்னொரு சம்பவத்தையும் சேர்த்தே செய்கிறார். அதைக் கொடுமை என்பதா காமெடி என்பதா என ஒரு குழு அமைத்து ஆராய வேண்டியதிருக்கிறது. அதாவது, ‘இளைஞர்களின் இதயநாயகன் ஓபிஆர்’ என்று, அவரே அவரை ஆதரித்து போஸ்ட் போட்டுக் கொள்கிறார். ‘இதெல்லாம் யார் சொல்றாங்க...’ என்று கேட்டால், ‘மனசாட்சி இல்லாதவங்க பாஸு. அதான் யாருமே சொல்றதில்லை. ஸோ, நானே சொல்லிக்கிட்டேன்’ என்கிறார். இப்போது இது காமெடியா கொடுமையா என்பதை நீங்களும் ஆராயக் கடமைப்பட்டுள்ளீர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதைக் கூட விடுவோம். தேனி அன்னபூரணி ஆலயத்திற்கு நன்கொடை அளித்திருக்கிறார், ஓ.பி.ஆர். இது எல்லா அரசியல்வாதிகளும் பக்திப்பெருக்கில் செய்வதுதான். ஆனால், அண்ணன் அங்கேயும் வித்தியாசமாக ஒன்றைச் செய்தார். என்ன செய்தார்? ’ஓபி.ரவீந்திரநாத் எம்.பி அவர்களே’ என்று, தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டியதைதானே அறிவித்து கல்வெட்டு வைத்தார். ‘ஆளே இல்லை... ஹாரனா ’ என்று கடுமையான கண்டனங்கள் எழுந்தன. அதாவது, ’பதவிக்கே வரலை, அதுக்குள்ளே பவுசா’ என்று ரவுண்டு கட்டினார்கள்.

ரவீந்திரநாத்
ரவீந்திரநாத்

அடுத்த நாள் அண்ணன் ஆஜரானார். ‘இந்த விவகாரத்தில் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என்று அறிவித்தார். ‘அது எப்படி பாஸ்... உங்க மேலே நீங்களே நடவடிக்கை எடுக்கமுடியும்?’ என்று சந்தேகம் கேட்டான் சாமானியன். 'இருங்க மிஸ்டர் சாமானியன். எங்க டாடி திரும்ப சி.எம் ஆனதும் உங்களுக்கு இருக்கு' என ஓ.பி.ஆர் கேட்டவர்களை நோட் செய்து வைத்திருக்கக்கூடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒருவழியாக தேர்தல் முடிவும் வந்தது. எழுபதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து, தமிழ்நாட்டையே 8.8 ரிக்டர் அளவுகோலில் அதிரவைத்தார், ஓ.பி.ஆர். ’எய்யா... ஏஞ்சாமீஈஈஈ...' என சக சால்ட் அண்ட் பெப்பர்க்காரர் டயலாக்கை தன் மாடுலேஷனில் சொல்லிக் கத்தியபடி, பெரியகுளம் தென்கரையிலிருந்து அம்மா சமாதி இருக்கும் கடற்கரை வரை ஆனந்தக் கூத்தாடினார், ஓ.பி.எஸ். 'த்ரீ டைம் சி.எம் பெத்தெடுத்த 3டி கிளாஸே (Delhi, Deposit, Dhideer MP)' என மொத்த தேனியும் குலுங்கியது.

ரவீந்திரநாத்
ரவீந்திரநாத்

அடுத்து நடந்ததுதான் இன்னும் அதகளம். மத்திய அமைச்சர் ஆசையில் அண்ணன் டெல்லிக்குப் போய் குளிரில் வெடவெடக்க, ‘பழக்க வழக்கமெல்லாம் தேர்தல் ரிசல்ட் வரைக்கும்தான்...’ என்று அமித் ஷா ஹேண்ட்ஷேக் கொடுத்து அனுப்பிவைத்தார். அண்ணன் படு அப்செட். தமிழ்நாடு இல்லத்தின் பின்வாசல் வழியாக எகிறிக்குதித்து ஏர்போர்ட்டுக்கு வந்தவரை மடக்கிப் பிடித்து விட்டார்கள் செய்தியாளர்கள். அங்கே, ‘மத்திய அமைச்சராகும் ஆசை எனக்கில்லை’ என்று ஓ.பி.ஆர் சொல்ல, 'என்னண்ணே கண்ணு வேர்க்குது' எனத் துடைத்துவிட்டார் அருகிலிருந்த அடிப்பொடி.

அப்புறம் நடந்ததும் அதகளம்தான். அண்ணனை நாடாளுமன்ற வளாகத்தில் ராகிங் செய்து அறிமுகம் கொடுத்தார்கள் எதிரணி எம்.பிக்கள். ‘ஒரே ஒரு எம்பி வர்றார் வழிவிடுங்கோ...’ என்று அவர்கள் சுத்துப்போட, ‘மோடிக்கிட்டே சொல்லிருவேன் பாத்துக்கங்க...’ என மிரட்டித் தப்பித்தார் ஓபிஆர். இதற்குப் பழிவாங்கவோ என்னவோ, அண்ணன் நாடாளுமன்றத்தையே அலறவிட ஆரம்பித்தார். ‘இது அட்டகாச பட்ஜெட், அற்புதமான பட்ஜெட்...’ என்று ஓ.பி.ஆர் கேப்பேவிடாமல் பேச, ‘நம்ம பட்ஜெட்டைப் பத்தியா பேசுறாரு?' என நிர்மலா சீதாராமனே ஃபைலை புரட்டிப் புரட்டிப் பார்த்திருப்பார்.

ரவீந்திரநாத்
ரவீந்திரநாத்

அதுவும், ‘D for Development Budget... E for Enormous Budget...' என்று ஓ.பி.ஆர் ஜனநாயகத்தை டீல் செய்ததைப் பார்த்து, திரிணாமூல் எம்.பி மஹூவாவே மயக்கம் போட்டு விழுந்தார். ‘யாரு சாமி நீங்க? எங்க இருந்தீங்க இத்தன நாளா?' என மொத்த வளாகமும் கேட்க, 'அப்பாவுக்கு உதவியா இருந்தேன்' என பதில் சொல்லி நெகிழ்ந்தார். 'அப்பாவே ரெண்டு வருஷமா சும்மாதானப்பா இருக்காரு' எனத் தொண்டைவரை வந்த கேள்வியை அப்படியே பிடித்து அமுக்கிக்கொண்டார்கள் சக எம்.பிக்கள். ஆனால், அண்ணனின் அந்த ஜனநாயகப் பேச்சு வாட்ஸ் அப்பில் வந்த ஃபார்வேர்டு மெசேஜ் என்பது வேறுகதை.

அண்ணனின் பொதுவாழ்க்கையிலும் ஒரு கறுப்புதினம் உண்டு. அது அவர் பொதுவாழ்க்கைக்கு வந்த முதல்நாளாகிப் போனதுதான் காலத்தின் கோலம். விருப்புமனு கொடுத்துவிட்டு வெளியே வருகிறார், ஓபிஆர். செய்தியாளர்கள் கேட்கிறார்கள். ‘சார்... வாரிசு அரசியலை எதிர்ப்பதாகச் சொல்கிறார் உங்கள் அப்பா. ஆனால், அவரே உங்களை வேட்பாளராக நிறுத்துகிறாரே...’ எனக் கேட்கிறார்கள். அண்ணனின் முத்தான பதில் இது - ‘நான் ஒன்றும் அமெரிக்காவிலிருந்து அப்படியே வந்து வேட்பாளராக விரும்பவில்லை'.

ரவீந்திரநாத்
ரவீந்திரநாத்

இதற்கும் கூட்டத்தில் ஒரு கேள்வி எழுகிறது - 'அமெரிக்காவிலிருந்து வந்தால்தான் வாரிசு அரசியலா? ஆண்டிபட்டியிலிருந்து வந்தால் வாரிசு அரசியல் இல்லையா?’ என்று விடாமல் அடிக்கிறார்கள். அண்ணன் இப்போது முத்துக்கு முத்தான பதில் சொல்கிறார் - ‘நான் அடிமட்டத்திலிருந்து வந்திருக்கிறேன். இருபது வருஷமாக கட்சிப் பணி செய்கிறேன்’. இந்தப் பதிலைக் கேட்டு, ஓ.பி.எஸ்ஸே 'இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே' என்றிருப்பார்.

இன்னொரு புறம், ‘உதயநிதிக்கு நீங்கதாண்ணே சரியான எதிர்ச்சேவல்...’ என்று பாஸிங்கில் யாரோ ஏத்திவிட, ‘இஸிட்...’ என்று அதிர்ச்சியானார் ஓ.பி.ஆர். அப்போது ஆரம்பித்தது அலப்பறை. ’அடுத்த தேர்தலுக்குள்ள எனக்கு அ.தி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி வேண்டும்’ என்று நாளும் அடம்பிடிக்கிறாராம். இன்னொரு இளைஞரணி வாரிசா? தமிழனுக்கு இன்னும் எத்தனை ‘உடம்பை இரும்பாக்கிக்கோடா...’ மொமன்ட் வருமோ தெரியவில்லை. ஆண்டவா!

ரவீந்திரநாத்
ரவீந்திரநாத்

இதையும் சொல்லாமல் இருக்க முடியாது. அதாவது, டெல்லி மேலிடத்திற்கு அவர்களே வியந்துபோகும் வண்ணம் பாராட்டுப் பத்திரம் வாசிப்பதில் தன் தகப்பனாரையே மிஞ்சுகிறார் ஓ.பி.ஆர். ஓர் உதாரணம்... பா.ஜ.க தேசியச் செயல் தலைவராக ஜேபி நட்டா தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி வெளியாகிறது.

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையே ‘சாப்பிட்டு சாயங்காலம் வாழ்த்து சொல்லிக்கலாம்’ எனத் தூங்கப்போய் விட்டார். ஆனால், அண்ணன் ஓ.பி.ஆர் வான்டடாக வந்து ‘வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன்’ என உருகுகிறார்.

அப்பாவும் மகனும் ஆடும் இந்த கோ-கோ ஆட்டம் பற்றி அறியாமல் 'ஒற்றைத்தலைமைக்கு ஓ.பி.எஸ்தான்யா சரியான ஆளு' என அவ்வை சண்முகம் சாலையில் பந்தயம் கட்டி விளையாடிக்கொண்டிருக்கிறார் பல்லாண்டுக்கால ரத்தத்தின் ரத்தம் ஒருவர். அவர்கள் நம்பும்வரை, மேன்மேலும் வளர்ந்து ட்ரம்ப்பைத் திரும்பிப் பார்க்கவைப்பார் நமது அருமை அண்ணன் ஓ.பி.ஆர். அதற்கு நானே சாட்சி!