Published:Updated:

ஜனநாயகத்துக்காக ஒலித்த குரல்!

வீரேந்திரகுமார்
பிரீமியம் ஸ்டோரி
வீரேந்திரகுமார்

சுகுமாரன்

ஜனநாயகத்துக்காக ஒலித்த குரல்!

சுகுமாரன்

Published:Updated:
வீரேந்திரகுமார்
பிரீமியம் ஸ்டோரி
வீரேந்திரகுமார்

1975ஆம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடிநிலைக் காலம். ‘`அது ஒரு கரும்பூதம். என்னையும் அது பிடித்துத் துன்புறுத்தியது’’ என்று எம்.பி.வீரேந்திரகுமார் தன்னுடைய சுயசரிதைக் குறிப்புகளில் சொல்கிறார். ஆனால் அந்த நெருக்கடிநிலைக் காலம்தான் பல அரசியல் வாதிகளைப் பொதுக் கவனத்துக்குக் கொண்டு வந்தது. சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் என்று அந்தக் கட்சி வட்டாரங்களில் மட்டுமே அறியப்பட்டிருந்த வீரேந்திரகுமார் கேரளம் முழுவதற்கும் அறிமுகமானார்.

வீரேந்திரகுமார்
வீரேந்திரகுமார்

நெருக்கடி நிலைக்கு எதிராகக் காங்கிரஸ் அல்லாத அனைத்துக் கட்சிகளையும் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி – சிபிஐ நீங்கலாக) ஒருங்கிணைத்தார். மாநிலம் தழுவிய கண்டனக் கூட்டங்களை நடத்தவும் ஜனநாயகப் பாதுகாப்புக்கான பரப்புரையை விரிவாக்கவும் முன்னின்றார். இந்த நடவடிக்கைகளுக்காகச் சிறையில் தள்ளப்பட்டார். சிறைவாசமும் ஜனநாயக ஒருங்கிணைப்புப் பணியும் அவரை மாநில அளவில் மட்டுமல்ல; தேசிய அளவிலும் கவனத்துக்குரியவர் ஆக்கியது. இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் ஒருவரானார். கடந்த மே மாதம் 29 அன்று மறையும்வரையிலும் இந்த அரசியல் முக்கியத்துவத்தை நிலைநிறுத்திக்கொண்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேரளத்தின் வடக்கு எல்லையோர மாவட்டமான வயநாட்டில் சமணக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் வீரேந்திரகுமார். சோஷலிஸ்ட் தலைவர் ராம் மனோகர் லோகியாவால் ஈர்க்கப்பட்டு அரசியலில் புகுந்தார். ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராகவும் துணைத்தலைவராகவும் செயலாற்றினார். எந்த ஜனநாயக மதிப்பீடுகளைக் காப்பாற்ற விரும்பினாரோ அவற்றைக் கைவிட்டபோது அதிலிருந்து விலகினார். ஜனதா தளத்தில் இணைந்தார். பின்னர் அதுவும் பிளவுபட்டபோது தேவ கௌடா தலைமையிலான ஜனதா தளத்துக்கு மாறினார். அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அதுவரை எதிர்த்துவந்த மதவாதக் கட்சியுடன் தேவ கௌடா இணக்கம் காட்டியபோது அவரை விட்டுப் பிரிந்து மதச்சார்பற்ற ஜனதா தளத்தை உருவாக்கினார். அதன் தலைவராகவே இறுதிவரை இருந்தார்.

வீரேந்திரகுமார்
வீரேந்திரகுமார்

கேரளத்தின் பாரம்பரிய இதழான ‘மாத்ருபூமி’யின் நிர்வாகப் பொறுப்பை 1977இல் வீரேந்திரகுமார் ஏற்றபோது கேரளக் கலாசார உலகம் புருவத்தை உயர்த்தியது. சுதந்திரப் போராட்ட வீரரும் கேரள மறுமலர்ச்சிச் செயல்பாட்டாளர்களில் ஒருவருமான கே பி கேசவமேனன் தொடங்கிய பத்திரிகை, காங்கிரஸ் பாரம்பரியம் கொண்ட இதழ் ஒரு சோஷலிஸ்டின் கைக்கு மாறுவதா என்ற விவாதமும் எழுந்தது. வட இந்திய ஊடக நிறுவனம் ஒன்று கைப்பற்றவிருந்த மலையாளப் பத்திரிகை நிறுவனத்தை அதன் பெருமை குலையாமல் காக்கவே வீரேந்திரகுமார் அதைச் செய்தார் என்பதைக் காலம் பின்னர் தெளிவுபடுத்தியது. இன்றும் மலையாளத்தில் இரண்டாவது முன்னணி நாளிதழ் ‘மாத்ருபூமி’தான் என்பதே அதற்குச் சாட்சி. அதே பெயரில் வெளியாகும் வார இதழ் இன்றும் மலையாள இலக்கியத்தின் சங்கப் பலகையாகவே கருதப்படுகிறது. பழம்பெருமையைத் தக்கவைத்துக்கொண்டே புதிய காலத்தின் சவால்களுக்கு ஏற்ப மாத்ருபூமி குழுமத்தை விரிவாக்கியது வீரேந்திரகுமாரின் மேலாண்மைத் திறமைக்கு உதாரணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜனநாயகத்துக்காக ஒலித்த குரல்!

அரசியல்வாதி, ஊடக உரிமையாளர் என்பதோடு எழுத்தாளராகவும் வீரேந்திரகுமார் விளங்கினார். தத்துவம். அரசியல், பயணம் உட்பட பலதுறை அக்கறைகளும் அனுபவங்களும் வெளிப்படும் எழுத்துகள் அவருடையவை. இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். ராம ஜென்மபூமி விவகாரத்துக்கு எதிர்வினையாக எழுதிய ‘ராமனின் துக்கம்’, மலையாளக் கவிஞர் சங்ஙம்புழ கிருஷ்ணப்பிள்ளையின் வாழ்வையும் கவிதைகளையும் மையமாக்கி எழுதிய ‘விதியின் வேட்டை மிருகம்’ ஆகிய நூல்கள் அவரைத் தேர்ந்த எழுத்தாளராக அடையாளம் காட்டுபவை.

வீரேந்திரகுமார்
வீரேந்திரகுமார்

வகுப்புவாத சக்திகளும் மதவெறி அரசியலும் சின்னாபின்னமாக்கி வரும் இந்திய அரசியலில் மதச்சார்பின்மையின் தரப்பில் நின்றவர், சுற்றுச் சூழல் நசிவில் பதைக்கும் மானுட மனச் சாட்சியின் காவலர்களில் ஒருவர் என்றும் நினைக்கப்படுவார். அந்த வகையில் இன்றைய இந்திய அரசியலில் அவர் அரியவரே.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism