Published:Updated:

`அதிகார பேராசையில் உற்ற நண்பர்களை இழந்துவிட்டார்கள்!’ -சட்டப்பேரவையில் ஆதித்ய தாக்கரே

ஆதித்ய தாக்கரே
ஆதித்ய தாக்கரே

பணமதிப்பிழப்பு திட்டத்தின் மூலம் என்ன ஆனது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதைப் பற்றிப் பேச யாரும் தயாராக இல்லை. பணமதிப்பிழப்பு கொண்டு வரும்போதே அது வேண்டாம் எனத் தடுத்தோம்.

மகாராஷ்டிராவில் நடந்த பெரும் பதவி மோதலுக்குப் பிறகு அங்கு சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணியின் முதல் குளிர்கால சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களாக ஆதித்ய தாக்கரே, ரோஹித் பவார், அதிதி தத்கரே உள்ளிட்ட பலர் இன்றைய கூட்டத்தில் தங்கள் முதல் உரையைப் பேசினர்.

ஆதித்ய தாக்கரே
ஆதித்ய தாக்கரே

சிவசேனாவின் முக்கியத் தலைவரும் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்ய தாக்கரே பேசும்போது, ``இந்த மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு, சுமார் ஒரு மாதமாக நடந்த நாடகத்தை நாம் பார்த்தோம். கூட்டணி அமைப்பதில் பல்வேறு பிரச்னைகள் இருந்தன. ஆனால், இறுதியில் பால்சாகேப் தாக்கரேவின் மகன் முதல்வரானார். சரத் பவார், சோனியா காந்தி ஆகியோர் இணைந்து இந்த அரசை அமைக்க முடிவு செய்தார்கள். இது மகாராஷ்டிராவின் பலத்தைக் காட்டுகிறது. அதிகாரத்தின் பேராசையால் உற்ற நண்பர்களை இழந்த பலரை நான் பார்த்துள்ளேன்.

பறிபோகப் போகிறதா மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷியாரியின் பதவி?

சட்டமன்றக் கூட்டத்தின் முதல்நாளில் எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்தது, மிகவும் மோசமானதாக இருந்தது. நம் மாநிலத்தில் வாழும் விவசாயிகள் கடன் இல்லாமல் இருக்க வேண்டும். வறட்சி, அளவில்லாத திடீர் மழை ஆகியவற்றை விவசாயிகள் எதிர்கொள்கிறார்கள். எனவே, நாம் முதலில் காலநிலை மாற்றத்தைப் பற்றி யோசிக்க வேண்டும். அதற்காகச் சிறப்புக் கூட்டம் அறிவித்து காற்று மாசு, காலநிலை மாற்றம் போன்றவை பற்றி ஆலோசிக்க வேண்டும்.

ஆதித்ய தாக்கரே
ஆதித்ய தாக்கரே

காலநிலை மாற்றம் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளது. சமீபத்தில் வெளியான ஓர் அறிக்கையில், வரும் 2050-ம் ஆண்டு மும்பை மூழ்கிவிடும் எனக் கூறப்பட்டுள்ளது. அதைத் தடுக்க நாம் இப்போதிலிருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் மகாராஷ்டிராவில் வேலையின்மையும் மிகப் பெரும் பிரச்னையாக உள்ளது. பணமதிப்பிழப்பு திட்டத்தின் மூலம் என்ன ஆனது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதைப் பற்றிப் பேச யாரும் தயாராக இல்லை. பணமதிப்பிழப்பு கொண்டு வரும்போதே அது வேண்டாம் எனத் தடுத்தோம், ஆனால், அதுவும் ஜி.எஸ்.டி-யும் விவசாயிகளைக் கூட அதிகம் பாதித்தது” என விமர்சித்துப் பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு