Published:Updated:

``காவிக்கொடி தேசியக்கொடியாக மாறும்” - ஈஸ்வரப்பாவை கைதுசெய்யக் கோரி ஆம் ஆத்மி எம்.பி புகார்

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்

``ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேசியக்கொடி ஏற்றப்படவேயில்லை. உண்மையில் பா.ஜ.க., தேசியக்கொடியை எதிர்க்கிறது." - ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்

``காவிக்கொடி தேசியக்கொடியாக மாறும்” - ஈஸ்வரப்பாவை கைதுசெய்யக் கோரி ஆம் ஆத்மி எம்.பி புகார்

``ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேசியக்கொடி ஏற்றப்படவேயில்லை. உண்மையில் பா.ஜ.க., தேசியக்கொடியை எதிர்க்கிறது." - ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்

Published:Updated:
ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்

கர்நாடக மாநிலத்தின் மூத்த பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஈஸ்வரப்பா தேசியக்கொடியை அவமதித்ததாக, அவரைக் கைதுசெய்ய வேண்டும் என ஆம் ஆத்மியைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி சஞ்சய் சிங் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து டெல்லியிலுள்ள நார்த் அவென்யூ காவல் நிலையத்தில் ஈஸ்வரப்பா மீது புகாரளித்த சஞ்சய் சிங், ``ஒருநாள் காவிக்கொடி இந்தியாவின் தேசியக்கொடியாக மாறும் என்று கூறி தேசியக்கொடியை அவமதித்த ஈஸ்வரப்பா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய விண்ணப்பம் கொடுத்திருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேசியக்கொடி ஏற்றப்படவேயில்லை. உண்மையில் பா.ஜ.க., தேசியக்கொடியை எதிர்க்கிறது" என நேற்று கூறியிருந்தார்.

முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா
முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா

முன்னதாக ஈஸ்வரப்பா, ``காவிக்கு மரியாதை என்பது இன்று நேற்றல்ல, பல்லாயிரம் ஆண்டுகளாகக் கொடுக்கப்பட்டுவருகிறது. காவிக்கொடி, தியாகத்தின் அடையாளம். ஆர்.எஸ்.எஸ்-ன் கொடி இன்றில்லை என்றாலும், என்றாவது ஒருநாள் தேசியக்கொடியாக மாறும் என்பதில் சந்தேகமேயில்லை" எனக் கூறியிருந்தார். ஈஸ்வரப்பாவின் இத்தகைய பேச்சுக்குப் பின்னரே, சஞ்சய் சிங் இது போன்று புகாரளித்துள்ளார்.

இது முதன்முறையல்ல, முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் கர்நாடக சட்டசபையிலேயே, `செங்கோட்டையில் ஒருநாள் காவிக்கொடி ஏற்றப்படும்' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஈஸ்வரப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism