Published:Updated:

ஜனாதிபதி தேர்தல்: ``முர்மு மீது மரியாதை உள்ளது; ஆனால் ஆதரவு யஷ்வந்த் சின்ஹாவுக்கு” - ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி - அரவிந்த் கெஜ்ரிவால்

``எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை ஆம் ஆத்மி ஆதரிக்கும். திரௌபதி முர்முவை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் நாங்கள் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாக்களிப்போம்" - ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்

ஜனாதிபதி தேர்தல்: ``முர்மு மீது மரியாதை உள்ளது; ஆனால் ஆதரவு யஷ்வந்த் சின்ஹாவுக்கு” - ஆம் ஆத்மி

``எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை ஆம் ஆத்மி ஆதரிக்கும். திரௌபதி முர்முவை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் நாங்கள் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாக்களிப்போம்" - ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்

Published:Updated:
ஆம் ஆத்மி - அரவிந்த் கெஜ்ரிவால்

இந்திய ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளராகத் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு. மம்தா பானர்ஜி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என டி.ஆர்.எஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தன.

யஷ்வந்த் சின்ஹா
யஷ்வந்த் சின்ஹா

அதன் பின்னர் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டத்தில் யஷ்வந்த் சின்ஹா பொது வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தருவதாக டி.ஆர்.எஸ் கட்சி அறிவித்தது. ஆம் ஆத்மி மட்டும் நேற்றுவரை யாருக்கு ஆதரவு என்று தெரிவிக்காமலேயே இருந்தது.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தருவதாக ஆம் ஆத்மி இன்று அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்
ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்
twitter

மேலும் இதுகுறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங், ``எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை ஆம் ஆத்மி ஆதரிக்கும். திரௌபதி முர்முவை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் நாங்கள் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாக்களிப்போம்" எனத் தெரிவித்தார்.

டெல்லி மற்றும் பஞ்சாப்பில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருக்கும் ஆம் ஆத்மி வசம், மொத்தம் 10 எம்.பி-க்கள் மற்றும் 156 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.