Published:Updated:

குடிபோதையில் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டாரா பஞ்சாப் முதல்வர்?- குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள்

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

``பகவந்த் மான் குடித்துவிட்டு மது போதையில் ஜெர்மன் விமானமான லுஃப்தான்சா-வில் ஏறியதால், அதிகாரிகள் விமானத்திலிருந்து அவரை இறக்கிவிட்டார்கள்" என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

குடிபோதையில் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டாரா பஞ்சாப் முதல்வர்?- குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள்

``பகவந்த் மான் குடித்துவிட்டு மது போதையில் ஜெர்மன் விமானமான லுஃப்தான்சா-வில் ஏறியதால், அதிகாரிகள் விமானத்திலிருந்து அவரை இறக்கிவிட்டார்கள்" என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

Published:Updated:
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மதுபோதையில் இருந்ததால் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டதாக பரபர குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. பஞ்சாப்பில் முதலீடு செய்வதற்காக முதலீட்டாளர்களைச் சந்திக்க, மாநில அதிகாரிகள் குழுவுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஜெர்மனி சென்றிருந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மியின் ராஷ்டிரிய ஜன் பிரதிநிதி சம்மேளனத்தில் கலந்துகொள்ள அவர் இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காணொளி கூட்டம் வாயிலாக கலந்துகொண்ட அவர், திங்கள்கிழமைதான் இந்தியா திரும்பினார்.

சிரோமனி அகாலிதள கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல்
சிரோமனி அகாலிதள கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல்
ட்விட்டர்

இந்த நிலையில், சிரோமனி அகாலிதள கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், அவர் மனைவி ஹர்சிம்ரத் கவுர் பாதல், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் பர்தாப் சிங் பஜ்வா ஆகியோர், ``பகவந்த் மான் குடித்துவிட்டு மது போதையில் ஜெர்மன் விமானமான லுஃப்தான்சா-வில் ஏறியதால், அதிகாரிகள் விமானத்திலிருந்து அவரை இறக்கிவிட்டார்கள்" எனக் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

இது தொடர்பாக சுக்பீர் சிங் பாதல் தனது ட்வீட்டர் பக்கத்தில், ``பகவந்த் மான் நடக்க முடியாத அளவுக்கு குடிபோதையில் இருந்ததால், லுஃப்தான்சா விமானத்திலிருந்து இறக்கப்பட்டதாக தகவல் கூறுகிறது. இதனால் விமானம் நான்கு மணி நேரம் தாமதமானது. அதனால்தான் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய மாநாட்டை அவர் தவறவிட்டார். அவரின் இந்தச் செயல் உலகெங்கிலும் உள்ள பஞ்சாப்பியர்களை அவமானப்படுத்தியிருக்கிறது" எனப் பதிவிட்டிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சட்டமன்ற உறுப்பினர் பர்தாப் சிங் பஜ்வா
சட்டமன்ற உறுப்பினர் பர்தாப் சிங் பஜ்வா
ட்விட்டர்

மேலும், பஞ்சாப் காங்கிரஸின் பர்தாப் சிங் பஜ்வா, ``மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா லுஃப்தான்சாவிடமிருந்து விவரங்களைப் பெற்று அவற்றைப் பகிரங்கப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், லுஃப்தான்சா நியூஸ் நேற்று தன்னுடைய ட்விட்ட பக்கத்தில், ``பிராங்ஃபர்ட்டிலிருந்து டெல்லிக்கு வரும் எங்கள் விமானம், தாமதமாக உள்வரும் விமானம். அதேபோல விமான மாற்றம் காரணமாக, முதலில் திட்டமிட்டதைவிட விமானம் தாமதமாக புறப்பட்டது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என விளக்கமளித்திருக்கிறது.

விமானம்
விமானம்

விமான நிறுவனத்தின் விளக்கத்தைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் மல்விந்தர் சிங், “ஞாயிற்றுக்கிழமை முதல் எதிர்க்கட்சிகள் எல்லா வகையான பொய்களை பரப்புகிறார்கள். பஞ்சாப் முதல்வர்மீது பொய் வழக்குகள் போட்டனர். முதலமைச்சரை குறிவைத்து மாநிலத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. எனவே, எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ஆனாலும் எதிர்க்கட்சிகள், "உண்மையான பிரச்னை விமானத்தின் தாமதம் அல்ல, பஞ்சாப் முதல்வர் விமானத்திலிருந்து இறக்கப்பட்டாரா இல்லையா என்பதுதான். ஆனால், முதல்வர் பகவந்த் மான் அமைதியாகவே இருக்கிறார். அவர் பேசுவாரா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

இதற்கு முன்னர் பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் குடிபோதையில் குருத்வாராவில் நுழைந்ததாக பா.ஜ.க-வைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் அவர்மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தது குறிப்பிடதக்கது.