Published:Updated:

"உலகின் மிகப்பெரிய மற்றும் எதிர்மறையான கட்சியை மக்கள் தோற்கடித்துவிட்டனர்!" - மணீஷ் சிசோடியா

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ( Facebook )

ஆம் ஆத்மி, வெற்றி பெறத் தேவையான 126 வார்டுகளைவிடவும் 8 இடங்கள் கூடுதலாகப் பெற்று 134 வார்டுகளுடன் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

"உலகின் மிகப்பெரிய மற்றும் எதிர்மறையான கட்சியை மக்கள் தோற்கடித்துவிட்டனர்!" - மணீஷ் சிசோடியா

ஆம் ஆத்மி, வெற்றி பெறத் தேவையான 126 வார்டுகளைவிடவும் 8 இடங்கள் கூடுதலாகப் பெற்று 134 வார்டுகளுடன் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

Published:Updated:
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ( Facebook )

கிழக்கு டெல்லி மாநகராட்சி ( EDMC), டெல்லி மாநகராட்சி (MCD) தெற்கு டெல்லி மாநகராட்சி(SDMC) ஆகிய மூன்று மாநகராட்சிகளுக்கும் கடந்த 4-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. கிட்டத்தட்ட 50 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவான இந்த தேர்தலில் பா.ஜ.க, ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே யார் வெற்றி பெறுவது எனப் போட்டி நிலவியது. மேலும் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில்கூட ஆம் ஆத்மி வெற்றிபெறும் என்றே முடிவுகள் வெளிவந்தன. அந்த வரிசையில் இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்தது. அதிலும் ஆம் ஆத்மி, பா.ஜ.க இடையேதான் வெற்றி வாய்ப்பு யாருக்கென்ற நிலை நீடித்தது.

டெல்லி மாநகராட்சி தேர்தல்
டெல்லி மாநகராட்சி தேர்தல்

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் ஆம் ஆத்மி, வெற்றி பெறத் தேவையான 126 வார்டுகளைவிடவும் 8 இடங்கள் கூடுதலாகப் பெற்று 134 வார்டுகளுடன் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சியில் கோலோச்சிய பா.ஜ.க-வை ஆம் ஆத்மி வீழ்த்தியிருக்கிறது. ஆம் ஆத்மியின் இத்தகைய பெரிய வெற்றியை கட்சித் தொண்டர்கள் தொடங்கி, தலைவர்கள் வரை அனைவரும் கொண்டாடிவருகின்றனர். இந்த நிலையில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மியின் வெற்றிக்கு காரணமான மக்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார்.

டெல்லி  துணை முதல்வர் மணீஷ் சிசோடியா
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா
twitter

அதில், ``டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மியை நம்பியதற்காக டெல்லி மக்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் எதிர்மறையான கட்சியைத் தோற்கடித்ததன் மூலம், நேர்மையான மற்றும் உழைக்கும் கெஜ்ரிவாலை டெல்லி மக்கள் வெற்றிபெறச் செய்திருக்கின்றனர். மேலும், எங்களைப் பொறுத்தவரையில் இது வெறும் வெற்றியல்ல, மிகப்பெரிய பொறுப்பு" என மணீஷ் சிசோடியா கூறியிருக்கிறார்.

மொத்தமாக வாக்கு எண்ணிக்கை முடிவில், பா.ஜ.க 104 வார்டுகளும், காங்கிரஸ் 9 வார்டுகளும், மற்றவை 3 வார்டுகளும் வெற்றி பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.