Published:Updated:

``ஆம் ஆத்மியைக் கண்டு பாஜக பயப்படுகிறது; பாஜக-வுக்கு ஆம் ஆத்மி ஒன்றே மாற்று" - அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

``குஜராத்தில் ஆட்சி மாறப்போகிறது. மக்கள் இனி பயப்படத் தேவையில்லை. ஆம் ஆத்மி மட்டுமே பா.ஜ.க-வுக்கு மாற்று." - அரவிந்த் கெஜ்ரிவால்

``ஆம் ஆத்மியைக் கண்டு பாஜக பயப்படுகிறது; பாஜக-வுக்கு ஆம் ஆத்மி ஒன்றே மாற்று" - அரவிந்த் கெஜ்ரிவால்

``குஜராத்தில் ஆட்சி மாறப்போகிறது. மக்கள் இனி பயப்படத் தேவையில்லை. ஆம் ஆத்மி மட்டுமே பா.ஜ.க-வுக்கு மாற்று." - அரவிந்த் கெஜ்ரிவால்

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டமன்ற தேர்தலில், பஞ்சாப்பில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸையும், மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜ.க-வையும் ஒருசேர வீழ்த்தி, முதன்முறையாக பஞ்சாப்பில் தடம்பதித்தது. அப்போதிருந்தே ஒருபக்கம் பா.ஜ.வு-க்கு எதிராக மாற்று அணியைத் திரட்ட பல்வேறு கட்சிகள் முயன்றுவரும் வேளையில், `நாங்கள்தான் இனி பா.ஜ.க-வுக்கு எதிர்க்கட்சி, நாங்கள்தான் பா.ஜ.க-வுக்கு மாற்று’ என ஆம் ஆத்மி கூறிவருகிறது. இந்த நிலையில், குஜராத்தில் நேற்று பேரணி மேற்கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இதே கருத்தைத்தான் முன்வைத்துப் பேசியிருக்கிறார்.

பாஜக
பாஜக

குஜராத் தேர்தலை நோக்கமாகக்கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பேரணியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ``மக்கள், பா.ஜ.க-வுக்கு எதிராக எதையும் பேசுவதற்கு பயப்படுகிறார்கள். அவ்வாறு, பா.ஜ.க-வுக்கு எதிராக ஏதாவது பேசினால், தாங்கள் மிரட்டப்படுவதாகவும், தாக்கப்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர். ஆனால், குஜராத்தில் ஆட்சி மாறப்போகிறது. மக்கள் இனி பயப்படத்தேவையில்லை. ஆம் ஆத்மி மட்டுமே பா.ஜ.க-வுக்கு மாற்று. ஆம் ஆத்மி கட்சிக்கு மட்டுமே பா.ஜ.க பயப்படுகிறது" என்று பா.ஜ.க-வைக் கடுமையாகச் சாடினார்.

இந்த ஆண்டின் இறுதியில் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism