Published:Updated:

டெல்லி: நெருங்கும் தேர்தல்; ஆம் ஆத்மி தொண்டர்களால் தாக்கப்பட்ட எம்.எல்.ஏ தப்பி ஓட்டம் | வீடியோ

தாக்கப்படும் எம்.எல்.ஏ

டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஒருவர் சொந்தக் கட்சித் தொண்டர்களால் கடுமையாகத் தாக்கப்படும் வீடியோ இணையத்தில் பரவிவருகிறது.

டெல்லி: நெருங்கும் தேர்தல்; ஆம் ஆத்மி தொண்டர்களால் தாக்கப்பட்ட எம்.எல்.ஏ தப்பி ஓட்டம் | வீடியோ

டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஒருவர் சொந்தக் கட்சித் தொண்டர்களால் கடுமையாகத் தாக்கப்படும் வீடியோ இணையத்தில் பரவிவருகிறது.

Published:Updated:
தாக்கப்படும் எம்.எல்.ஏ

டெல்லி மாநகராட்சித் தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ், பா.ஜ.க., ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கான சீட்களை விற்பனை செய்வதாக பா.ஜ.க குற்றம்சாட்டிவருகிறது. ஆனால், ஆம் ஆத்மி கட்சி இந்தக் குற்றச்சாட்டை மறுத்துவருகிறது.

இந்த நிலையில், டெல்லி சட்டமன்ற எம்.எல்.ஏ-வான குலாப் சிங் யாதவ், நேற்று இரவு 8 மணியளவில் ஷியாம் விஹாரில் கட்சித் தொண்டர்களுடன் கூட்டம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஏதோ பிரச்னை ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் எதனால் இந்தப் பிரச்னை ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதனால், அந்தக் கூட்டத்தில் இருந்த ஆம் ஆத்மி தொண்டர்கள் தன் சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-வை அடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காங்கிரஸ் - பாஜக - ஆம் ஆத்மி
காங்கிரஸ் - பாஜக - ஆம் ஆத்மி

அந்த வீடியோவில், கடும் வாக்குவாதத்துக்கு மத்தியில், ஆத்திரமடைந்த கட்சி உறுப்பினர்கள் சொந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-வின் காலரைப் பிடித்துத் தள்ளி தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதலுக்கு ஆளான எம்.எல்.ஏ அங்கிருந்து வெளியேற முயன்றபோது, உறுப்பினர்கள் அவரை விரட்டி அடித்தனர். எம்.எல்.ஏ அங்கிருந்து ஓடுவதும் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது.

இந்த நிலையில், இது தொடர்பான வீடியோவை பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், `` நேர்மையான அரசியல் என்று நாடகம் ஆடும் கட்சியின் நிலைமை இதுதான். அந்தக் கட்சியின் தொண்டர்களால்கூட எம்.எல்.ஏ-க்களைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. டெல்லி மாநகராட்சித் தேர்தல் முடிவிலும் இது மாதிரியான காட்சிகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்" என்று பதிவிட்டிருக்கிறார்.