Published:Updated:

ரூ.1,400 கோடி கறுப்புப் பணம்... துணைநிலை ஆளுநர் பதவி விலகக் கோரி ஆம் ஆத்மி விடிய விடிய போராட்டம்!

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் விடிய விடிய போராட்டம் ( twitter )

மாநில கலால் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக, மாநில துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவின்பேரில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.

அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகப் பதவி வகிக்கும் டெல்லியில், மாநில கலால் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக, டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவின்பேரில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. இதை கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி தலைவர்கள் பலரும் எதிர்த்ததோடு, பா.ஜ.க-வைக் கடுமையாகச் சாடியும்வந்தனர்.

டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா
டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா

மேலும், டெல்லியில் ஆட்சியைக் கலைப்பதற்காக பா.ஜ.க., ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க ரூ.800 கோடியை ஒதுக்கியிருப்பதாக, கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். அதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி - பா.ஜ.க மோதலில் கெஜ்ரிவால், டெல்லி சட்டமன்றத்தில் நேற்று சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் விடிய விடிய போராட்டம்
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் விடிய விடிய போராட்டம்
twitter

இந்த நிலையில், 2016-ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சக்சேனா, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்றதாகவும், எனவே அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் டெல்லி சட்டமன்ற வளாகத்தில் காந்திசிலை அருகே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் நேற்று விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம் ஆத்மி தலைவர் அதிஷி
ஆம் ஆத்மி தலைவர் அதிஷி
twitter

இது குறித்துப் பேசிய ஆம் ஆத்மி தலைவர் அதிஷி, ``2016-ல் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவராக இருந்த சக்சேனா, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரூ.1,400 கோடி மதிப்பிலான கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க ஊழல் செய்தார். இது ஒரு பண மோசடி வழக்கு. எனவே பண மோசடி தடுப்புச் சட்டம், 2002-ன் கீழ் அமலாக்கத்துறை இதை கவனிக்க வேண்டும். மேலும், சக்சேனா இதற்கு முன்னதாகப் பணியாற்றிய அனைத்து இடங்களிலும், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்த வேண்டும். அதோடு விசாரணை முடியும் வரையில் அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் போராட்டம் நடத்திய அதேநேரத்தில், அதே வளாகத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களும் துணை முதல்வர் பதவி விலக நேற்று விடிய விடிய போட்டிப் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.