Published:Updated:

``காங்கிரஸ் அவ்வளவுதான்..!" - கோவாவில் கட்சித் தாவலைத் தொடர்ந்து ஆம் ஆத்மி சாடல்

ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சாதா

கோவாவில் 11 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டிருந்த காங்கிரஸிலிருந்து, 8 எம்.எல்.ஏ-க்கள் இன்று பா.ஜ.க-வுக்கு மாறியிருக்கின்றனர்.

``காங்கிரஸ் அவ்வளவுதான்..!" - கோவாவில் கட்சித் தாவலைத் தொடர்ந்து ஆம் ஆத்மி சாடல்

கோவாவில் 11 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டிருந்த காங்கிரஸிலிருந்து, 8 எம்.எல்.ஏ-க்கள் இன்று பா.ஜ.க-வுக்கு மாறியிருக்கின்றனர்.

Published:Updated:
ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சாதா

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, `பாரத் ஜோடோ' என்ற பெயரில் மக்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன், கன்னியாகுமரியிலிருந்து, காஷ்மீர் வரை யாத்திரை மேற்கொண்டிருக்கும் இந்த வேலையில், கோவா காங்கிரஸில் விரிசல் விழுந்திருப்பது, கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோவாவில் 11 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டிருந்த காங்கிரஸிலிருந்து, 8  எம்.எல்.ஏ-க்கள் இன்று பா.ஜ.க-வுக்குத் தாவியிருக்கின்றனர்.

இந்த நிலையில், கோவாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மாநிலக் கட்சி அந்தஸ்த்தைப்பெற்ற ஆம் ஆத்மி, காங்கிரஸை விமர்சித்திருக்கிறது.

ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சாதா
ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சாதா
ட்விட்டர்

இது தொடர்பாக ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சாதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``பா.ஜ.க-வின் ஆபரேஷன் லோட்டஸ், டெல்லி, பஞ்சாப்பில் தோல்வியடைந்தது. ஆனால் தற்போது கோவாவில் வெற்றிபெற்றிருக்கிறது. ஏனெனில் நீங்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்கும்போது, ​​எதிர்கால பா.ஜ.க எம்.எல்.ஏ-வைத்தான் தேர்ந்தெடுக்கிறீர்கள். காங்கிரஸ் கட்சி அவ்வளவுதான் முடிந்துவிட்டது. அது தற்போது சிறு சிறு துண்டுகளாக ஓய்விலிருக்கிறது" எனப் பதிவிட்டு விமர்சித்திருக்கிறார்.

பாஜக - காங்கிரஸ்
பாஜக - காங்கிரஸ்

கோவாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் காங்கிரஸ் இதுபோன்று பிளவுருவது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு ஏற்கெனவே 2019-ல் காங்கிரஸின் 15 எம்.எல்.ஏ-க்களிலிருந்து 10 பேர் பா.ஜ.க-வுக்குச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.