Published:Updated:

``ஆம் ஆத்மி இனி தேசிய கட்சி... காங்கிரஸுக்கு மாற்று நாங்கள் தான்!" - ஆம் ஆத்மி மூத்த தலைவர் பேச்சு

ஆம் ஆத்மி

"ஆம் ஆத்மி கட்சிக்கு இது ஒரு மகத்தான நாள். இன்று நாங்கள் ஒரு தேசிய கட்சியாகிவிட்டோம்"- ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ராகவ் சத்தா

``ஆம் ஆத்மி இனி தேசிய கட்சி... காங்கிரஸுக்கு மாற்று நாங்கள் தான்!" - ஆம் ஆத்மி மூத்த தலைவர் பேச்சு

"ஆம் ஆத்மி கட்சிக்கு இது ஒரு மகத்தான நாள். இன்று நாங்கள் ஒரு தேசிய கட்சியாகிவிட்டோம்"- ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ராகவ் சத்தா

Published:Updated:
ஆம் ஆத்மி

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை 8 மணி முதல் நடைபெற்றுவருகிறது. இதில் 11 மணி வரையிலான நிலவரப்படி பஞ்சாபைத் தவிர்த்து மற்ற நான்கு மாநிலங்களிலும் பா.ஜ.க தான் முன்னிலை வகிக்கிறது. பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி கட்சி, அங்குள்ள 117 தொகுதிகளில், 80-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலைப் பெற்று ஆட்சியமைக்கும் நிலைக்கு வந்துள்ளது. இதே நிலை நீடிக்குமானால் இந்தியாவில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கும் இரண்டாவது மாநிலமாக பஞ்சாப் இருக்கும்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான ராகவ் சத்தா, ``ஒரு கட்சியாக ஆம் ஆத்மிக்கு இது ஒரு மகத்தான நாள். ஆம் ஆத்மி ஒரு தேசிய கட்சியாக மாறுவதை நான் காண்கிறேன். இனி தேசிய அளவில் காங்கிரஸுக்கு, ஆம் ஆத்மி மாற்றுக்கட்சியாக இருக்கும். இன்று நாங்கள் ஒரு தேசிய கட்சியாகிவிட்டோம். நாங்கள் இனி மாநில கட்சி அல்ல, தேசிய கட்சி. அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியாவை பிரதமராக வழிநடத்தும் நாள் விரைவில் வரும்" என்று கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism