Published:Updated:

வி.ஐ.பி உபசரிப்பை நிராகரித்த டெல்லியின் இளம் எம்.எல்.ஏ! - வைரலாகும் வீடியோ #viral video

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ  ராகவ் சாதா.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ராகவ் சாதா.

சாலையைக் கடக்கும்போது பொதுமக்கள் அமைச்சர்களுக்காகக் காத்திருக்க வேண்டுமா?

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியில் உள்ள இளம் எம்.எல்.ஏ ஒருவர், வி.ஐ.பி உபசரிப்பை நிராகரித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

அண்மையில் நடைபெற்று முடிந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் - பி.ஜே.பி என்ற இரு தேசியக் கட்சிகளை வீழ்த்தி ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது. அந்தக் கட்சியின் இளம் வேட்பாளர் ராகவ் சாதா. சார்ட்டட் அக்கவுன்ட் படித்தவர். இவர், டெல்லியின் ராஜீந்தர் நகர் தொகுதியில் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 31 வயதாகும் ராகவ் சாதா, தற்போது டெல்லி ஜால் வாரியத்தின் (பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீர் அமைப்புகளைக் கட்டுப்படுத்தும் வாரியம் ) துணைத் தலைவராகப் பதவியேற்றுள்ளார்.

டெல்லி ஜால் வாரிய அலுவலகத்தில் பதவியேற்றபோது, அவர் அமரும் நாற்காலியில் வி.ஐ.பி உபசரிப்பாகத் துண்டைச்சுற்றி வைத்திருந்தனர். நாற்காலியில் உட்காரச்சென்றவர், அதிலிருந்த துண்டை எடுத்து, அருகில் உள்ள அறையில் வைத்துவிட்டு அமர்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இளம் வயதிலேயே பொறுப்புணர்வோடு நடந்துகொண்ட ராகவ் சாதாவைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

2015-ம் ஆண்டு டெல்லியில், முதலமைச்சராகப் பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவால், ``வி.ஐ.பி கலாசாரம் முற்றிலும் அகற்றப்படும்" என்றார். குறிப்பாக ``சாலையைக் கடக்கும்போது பொதுமக்கள் அமைச்சர்களுக்காகக் காத்திருக்க வேண்டுமா? சைரன் வைத்த வி.ஐ.பி-க்களின் வாகனங்கள் மட்டும் சிக்னலில் நிற்காமல் செல்ல வேண்டுமா, இப்படியான நடைமுறை எந்த வகையில் சரியானதாக இருக்கும்?" என்று கேள்வி எழுப்பினார் கெஜ்ரிவால். அப்படியான வி.ஜ.பி கலாசாரத்தை ஆம் ஆத்மி படிப்படியாக அகற்றும் என்று உறுதியளித்திருந்தார். இந்த நிலையில், அந்தக் கட்சியைச் சேர்ந்த இளம் எம்.எல்.ஏ ராகவ் வி.ஐ.பி உபசரிப்பை நிராகரித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு