Published:Updated:

தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள்; பதற்றத்தில் கோவை! - அவசர ஆலோசனை மேற்கொண்ட தலைமைச் செயலர்

தலைமைச் செயலாளர் இறையன்பு

அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக, கோவை மாநகரம் முழுவதும் சுமார் 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

கோவையில் கடந்த சில தினங்களாக ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க பிரமுகர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவங்களின் காரணமாக கோவையில் அசாதாரண சூழல் நிலவிவருகிறது.

கோவை பெட்ரோல் குண்டு வீச்சு
கோவை பெட்ரோல் குண்டு வீச்சு

அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக, கோவை மாநகரம் முழுவதும் சுமார் 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணைய அலுவலகத்தில், 92 ஜமாத் தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் சமீரன், காவல் ஆணையர் இன்று ஆலோசனை நடத்தினர்.

இறையன்பு
இறையன்பு

அதைத் தொடர்ந்து, ``மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். இது குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவலைப் பரப்புகிறவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.

அதன்பிறகு, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு காணொளி வாயிலாக, மேற்கு மண்டல ஐ.ஜி, கோவை காவல் ஆணையர், மாவட்ட எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.