வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கிய புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்திடம் தோற்றார்.

இந்தநிலையில், வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.சி.சண்முகம், ``வேலூர் தொகுதியில் விரைவாகத் தேர்தல் நடப்பதற்கு நான்தான் காரணம். நூலிழையில் என்னுடைய வெற்றி பறிபோனது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
என்னை நம்பி ஓட்டுபோட்ட 4,77,199 வாக்காளர்களுக்கும் தேர்தல் பணியாற்றிய கூட்டணிக்கட்சி தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் தேர்தலில் நான் வெற்றிபெற்றதாகவே மக்கள் நினைக்கிறார்கள்.

அதேநேரம், `பத்தோடு பதினொன்றாக இதுவும் ஒன்று’ என்ற கதையாகவே, தி.மு.க வெற்றியைப் பார்க்க முடிகிறது. கட்சி சார்பில்லாமல் பொது வாக்காளர்களில் 100-க்கு 80 சதவிகிதம் பேர் எனக்கு ஓட்டுப்போட்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தி.மு.க-வினர், தன் சொந்தம், தன் சமுதாயம் என்று கூறிப் பல இடங்களில் அழுது புலம்பி வெற்றி பெற்றிருக்கிறார்கள். நாங்கள் திட்டங்களைச் சொல்லி ஓட்டு கேட்டோம். வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் அவர்களுக்குக் கூடுதலாக 22,000 வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

முத்தலாக் தடைச் சட்டம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட காரணங்களால் சிறுபான்மையின மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க முடிவுசெய்திருந்தனர். அதற்காக ஓட்டுப்பதிவு நாளில் மாலை 4 மணிவரை வாக்களிக்காமல் இருந்தனர்.
அதுவே, என்னுடைய தோல்விக்கும் தி.மு.க-வின் வெற்றிக்கும் காரணமாக அமைந்துவிட்டது. 2014 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க-வின் ஓட்டு வங்கி 30 சதவிகிதமாக இருந்தது. இந்தத் தேர்தலில் 47 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
வேலூர் மக்கள் என்னைக் கைவிட்டாலும், நான் அவர்களைக் கைவிடுவதாக இல்லை. தேர்தல் நேரத்தில் நான் கொடுத்த வாக்குறுதிகளான திருமண மண்டபம், வேலைவாய்ப்பு முகாம் என ஒவ்வொன்றாக நிறைவேற்றுவேன்’’ என்றார் உறுதியாக.