Published:Updated:

`4 தொகுதி கேட்டிருக்கிறேன்; வேலூரில் நான் போட்டியிடவில்லை!’ - ஏ.சி.சண்முகம்

ஏ.சி.சண்முகம்

``அ.தி.மு.க கூட்டணியில் 4 தொகுதிகளை கேட்டிருக்கிறோம். நான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை’’ என்கிறார் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்.

`4 தொகுதி கேட்டிருக்கிறேன்; வேலூரில் நான் போட்டியிடவில்லை!’ - ஏ.சி.சண்முகம்

``அ.தி.மு.க கூட்டணியில் 4 தொகுதிகளை கேட்டிருக்கிறோம். நான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை’’ என்கிறார் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்.

Published:Updated:
ஏ.சி.சண்முகம்

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி பங்கீடு பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க தலைமை தீவிரம் காட்டி வருகிறது. பா.ம.க-வுக்கு 23 தொகுதிகளும், பா.ஜ.க-வுக்கு 20 தொகுதிகளும் பங்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் கூட்டணியிலிருந்து தே.மு.தி.க திடீரென விலகியிருக்கிறது. இந்தச் சூழலில், சிறிய கட்சித் தலைவர்களும் குறைந்தது ஐந்து தொகுதிகளை கேட்டு அடம்பிடிப்பதால் அ.தி.மு.க தலைமை அதிர்ச்சியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதி கட்சியும், பத்து தொகுதிகளின் பட்டியலை கொடுத்து அதில் ஐந்து தொகுதிகளைக் கேட்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பேச்சுவார்த்தையில், அத்தனை தொகுதிகளை ஒதுக்க முடியாது என்று அ.தி.மு.க தலைமை கூறிவிட்டதால் தற்சமயம் ஐந்திலிருந்து நான்குத் தொகுதிகளுக்கு இறங்கி வந்திருக்கிறார் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, அ.தி.மு.க கூட்டணி வேட்பாளராக வேலூர் மக்களவைத் தொகுதியில் களமிறங்கிய ஏ.சி.சண்முகம், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்திடம் தோற்றுப்போனார். நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு ஈடாக குறிப்பிட்ட சில தொகுதிகளை கட்டாயமாக கொடுக்க வேண்டுமென்று கேட்கிறாராம் ஏ.சி.சண்முகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பரபரப்பான இந்த அரசியல் சூழ்நிலையில், ஏ.சி.சண்முகத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘புதிய நீதிக்கட்சிக்கான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறதா?’’

‘‘தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாகப் போய் கொண்டிருக்கிறது. மொத்தம் 10 தொகுதிக்கான பட்டியலை கொடுத்துள்ளோம். அதில், நான்கு தொகுதிகளைக் கேட்டிருக்கிறோம். விரைவில் உடன்பாடு எட்டிவிடும்.’’

‘‘வேலூர் சட்டமன்றத் தொகுதியில் நீங்கள் களமிறங்கப் போவதாகப் பேச்சு அடிபடுகிறதே?’’

‘‘நான் வேலூர் தொகுதியைக் கேட்கவில்லை. கூட்டணி பங்கீடு முடிந்தப் பின்னரே நான் போட்டியிடுவது குறித்து முடிவெடுப்போம். அதேசமயம், நான் எம்.பி., எம்.எல்.ஏ-வாக இருந்தவன். என்னைப் போலவே புதிய நீதிக்கட்சியின் பொதுச்செயலாளர் கு.பா.பழனியப்பன், பொருளாளர் வெள்ளைச்சாமியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்தான். நாங்கள் மூன்று பேருமே இம்முறை போட்டியிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளோம். அதற்குப் பதிலாக மூன்று நான்கு இளைஞர்களுக்கும், புது முகங்களுக்கும் இடம் வாங்கித் தரவுள்ளோம்.’’

ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்

‘‘அ.தி.மு.க கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?’’

‘‘அ.தி.மு.க வலுவாக இருக்கிறது. மக்கள் மத்தியில் எங்கள் கூட்டணிக்கான எழுச்சி ஆதரவு தென்படுகிறது. இந்த ஆட்சியில் பல்வேறு மக்கள் நலன் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளனர். நீட் தேர்வு இருக்கின்ற காலக்கட்டத்தில், அரசுப்பள்ளியில் படிக்கிற ஏழை மாணவர்களுக்கும் சீட் கிடைக்க வழிவகைச் செய்துள்ளது அ.தி.மு.க அரசு. அதேபோல், இருபதாயிரம் கோடி கூட்டுறவு கடனையும் தள்ளுபடி செய்துள்ளது. உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை, தொழில் துறை, கல்வி, விவசாயத்துறை, வேளாண் உற்பத்தி என 75 சதவிகிதத் துறைகளில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது. அதற்குக் காரணம் அ.தி.மு.க அரசாங்கம். எடப்பாடியார் ஆட்சியில் மாதம் மும்மாரி மழைப் பெய்கிறது. அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியிருக்கிறது.’’

‘‘தி.மு.க கூட்டணி குறித்து உங்கள் கருத்து?’’

‘‘தி.மு.க ஆட்சியை இழக்கக் காரணமே மின்வெட்டு பிரச்னைதான். அ.தி.மு.க ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தப் பின்னரே தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறியது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும்போதுதான் மாநிலம் வளர்ச்சிபெறும். தி.மு.க-வின் தோல்வியை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism