சென்னை ஐ.ஐ.டி-யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் பிரதமர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியை தூர்தர்ஷன் பொதிகையில் சரியான முறையில் ஒளிபரப்பவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான விவாதங்கள் நடைபெற்றுவந்த நிலையில், சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சிப் பிரிவின் உதவி இயக்குநர் வசுமதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுதொடர்பாக, பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அதிகாரி சசிசேகர் வெம்பதி வெளியிட்டுள்ள உத்தரவில், இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இந்தப் பணியிட நீக்கம் அமலில் இருக்கும்வரை அவர் சென்னை தலைமை அலுவலகத்திலிருந்து முன் அனுமதி பெறாமல் வெளியே செல்லக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

எனினும் அந்த உத்தரவில் எந்தக் காரணத்துக்காக வசுமதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடவில்லை. வசுமதி மீது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, ஊழியர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.