Published:Updated:

மதுரை: சம்ஸ்கிருதத்தில் மாணவர்கள் உறுதிமொழி; காத்திருப்போர் பட்டியலில் டீன்! - என்ன நடந்தது?

மதுரை மருத்துவக் கல்லூரி

மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற நிகழ்ச்சி சர்ச்சையானதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

மதுரை: சம்ஸ்கிருதத்தில் மாணவர்கள் உறுதிமொழி; காத்திருப்போர் பட்டியலில் டீன்! - என்ன நடந்தது?

மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற நிகழ்ச்சி சர்ச்சையானதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
மதுரை மருத்துவக் கல்லூரி

மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சம்ஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்ற நிகழ்ச்சி சர்ச்சையானதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

புதிய மாணவர்களுக்கு சீருடை வழங்குதல்
புதிய மாணவர்களுக்கு சீருடை வழங்குதல்

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் புதிதாகச் சேரும் மாணவர்களும், பட்டப்படிப்பு முடித்து மருத்துவப் பயிற்சியில் இணையும் மாணவர்களும் `இப்போகிரெடிக் உறுதிமொழி' எடுத்துகொள்வது நீண்டகால மரபாக இருந்து வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், நேற்று புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி மதுரை மருத்துவக் கல்லூரியில் நடந்தது. இதில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், மேயர், கலெக்டர், எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர்.

மாணவர்கள்
மாணவர்கள்

அமைச்சர் மூலம் வழங்கப்பட்ட புதிய சீருடை அணிந்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். அப்போது வழக்கமான 'இப்போகிரெடிக்' உறுதிமொழி எடுக்காமல் 'மகிரிஷ் சரக் சப்த்' என்ற சம்ஸ்கிருத உறுதிமொழியை எடுத்துள்ளனர். இதை அப்போதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கவனித்து டீன் ரத்தினவேலிடம், ``இது தவறான செயல். எப்படி நடந்தது?" என்று கேட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்கு டீன் ரத்தினவேல், ``என் கவனத்துக்கே வரமால் நடந்து விட்டது, விசாரிக்கிறேன்" என்று கூறியதாகத் தெரிகிறது. இந்த தகவல் முதலமைச்சர் கவனத்துக்கு சென்றதையடுத்து, அவர் சுகாதாரத்துறை அமைச்சரிடம் உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டார்.

மருத்துவக்கல்லூரி விழாவில்
மருத்துவக்கல்லூரி விழாவில்

இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன், ``மதுரை மருத்துவக் கல்லூரியில் சம்ஸ்கிருதத்தில் மகரிஷி சரம் சப்த் உறுதிமொழி எடுத்துகொண்ட செய்தி அதிர்ச்சியை தருகிறது. ஒன்றிய அரசின் சமஸ்கிருத திணிப்பு முயற்சியின் பகுதியாகவே இந்த வழிகாட்டுதல் செய்யப்பட்டுள்ளது. அதை நடைமுறைப்படுத்தியது வன்மையான கண்டனத்துக்கு உரியது" என்று கருத்து தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து சம்ஸ்கிருத உறுதி மொழியை புகுத்தியது யார் என்பதை துறை ரீதியாக விசாரிக்க மருத்துவக்கல்வி இயக்குநர் டாக்டர் நாராயண பாபுவுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டு, மதுரை மருத்துவக்கல்லூரி டீன் ரத்தினவேலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும் உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தற்போது தமிழக அரசு மருத்துவத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டீன் ரத்தினவேல்
டீன் ரத்தினவேல்

``டீன் ரத்தினவேல் மிகச்சிறந்த இதய சிகிச்சை நிபுணர், எப்போதும் மருத்துவமனையிலயே வலம் வந்து கொண்டிருப்பவர். நோயாளிகள் சொல்லும் புகார்களை உடனே தீர்த்து வைப்பார். ராஜாஜி அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் முறைகேடுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவர், இவரை இங்கிருந்து மாற்ற வேண்டும் என்று இவருக்கு பிடிக்காத சில மருத்துவர்களும், மதுரைக்கு மீண்டும் வர விரும்பும் முன்னாள் டீன் ஒருவரும் இவர் மீது பல்வேறு புகார்களை தொடர்ந்து சுகாதாரத்துறைக்கு அனுப்பி வருகிறார்கள். இந்த நிலையில்தான், குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்த மருத்துவர்களும், மாணவர்களும் திட்டமிட்டு சர்ச்சையாகும் என்று தெரிந்தே சம்ஸ்கிருத உறுதி மொழியை பயன்படுத்தி அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளனர். மருத்துவக்கல்வி இயக்குநரின் விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிவரும்" என்கிறார்கள் மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவர்களும், அலுவலர்களும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism