Published:Updated:

``பிரதமர் மோடி வருகைக்கு எதிராக கருத்து... கண்காணிக்கப்படுவர்" - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சங்கர் ஜிவால்

செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை தமிழ்நாடு வருகிறார். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கருத்து தெரிவித்திருக்கிறார்.

``பிரதமர் மோடி வருகைக்கு எதிராக கருத்து... கண்காணிக்கப்படுவர்" - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை தமிழ்நாடு வருகிறார். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கருத்து தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
சங்கர் ஜிவால்

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசு முழுவீச்சில் செய்துவருகிறது. இந்தப் போட்டியில் 188 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் பங்கேற்கிறார்கள். தமிழ்நாடு அரசு சார்பில் 18 குழுக்கள் இந்த விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கவனித்துவருகின்றன.

இந்த நிலையில், சர்வதேச செஸ் போட்டியைத் தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை தமிழ்நாடு வருகிறார். இந்தப் போட்டியின் தொடக்கவிழா நடைபெறவிருக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கை அமைச்சர்கள் எ.வ.வேலு, மெய்யநாதன், மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் ஆய்வுசெய்தனர்.

மோடி, ஸ்டாலின்
மோடி, ஸ்டாலின்

அதைத் தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏழு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் தீவிர வாகன சோதனை நடைபெறும். மேலும், டிரோன்கள், பலூன்கள் 28, 29 ஆகிய தேதிகளில் பறக்கவிட தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் வருகைக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் கண்காணிக்கப்படுவர். அவர்கள் என்ன மாதிரியான வார்த்தைகலைப் பயன்படுத்துகிரார்கள் என்பது கண்காணிக்கப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார். நாளை மாலை 4:30 மணியளவில் பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!