Published:Updated:

முல்லைப்பெரியாறு விவகாரம்: `தவறான தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை!' - பினராயி விஜயன்

கேரளத்தில் திரைத்துறையினர் உள்ளிட்ட பிரபலங்கள் முல்லைப்பெரியாறு அணை இடிந்து பல லட்சம் மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பிவந்தனர். இதற்கு தேனி மாவட்ட விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

கேரள மாநிலத்தில் தொடர்மழை காரணமாக பெரும்பாலான அணைகள் 80 சதவிகிதம் நிரம்பிவிட்டன. அதேவேளையில் தொடர்மழையின் காரணமாக வெள்ளம், நிலச்சரிவால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டமும் 136 அடியைத் தாண்டிவிட்டது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள விவசாய சங்கங்கள் வலியுறுத்திவந்தன.

முல்லைப்பெரியாறு
முல்லைப்பெரியாறு
முல்லைப்பெரியாறு அணை: `கேரளா விஷமப்பிரசாரங்களை நிறுத்தவேண்டும்!' - கொந்தளிக்கும் விவசாயிகள்

இதற்கிடையே கேரளத்தில் திரைத்துறையினர் உள்ளிட்ட பிரபலங்கள் முல்லைப்பெரியாறு அணை இடிந்து பல லட்சம் மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பிவந்தனர். இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகர் பிரத்விராஜ், `125 ஆண்டுகள் பழமையான முல்லைப்பெரியாறு அணை செயல்படுவதை அனுமதிக்க முடியாது' என ட்விட்டரில் பதிவிட்டார்.

இதனைத்தொடர்ந்து அவரது ரசிகர்கள் மட்டுமில்லாது மலையாள முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் அணை குறித்து தவறான கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இதற்கு தேனி மாவட்ட விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

இத்தகைய சூழலில், கேரள மாநில சட்டப்பேரவையின் எதிர்கட்சித்தலைவர், ``முல்லைப்பெரியாறு அணை குறித்து தவறான தகவல்கள் பரவுவதால் மக்கள் பீதியில் உள்ளனர்" எனத் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த கேரள முதல்வர், ``முல்லைப்பெரியாறு அணை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை: ``தமிழகத்துக்கான முழு அளவு நீரையும் எடுத்துக்கொள்ளுங்கள்"- பினராயி விஜயன்

இவ்விவகாரத்தில் தமிழக அரசு கேரள அரசுக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. சிறுசிறு முரண்பாடுகள் மட்டும் இருக்கின்றன. அதற்கும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும்" என்றார். இதையடுத்து, முல்லைப்பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு