Published:Updated:

பக்கத்து ஸ்டேட் பரபர!

K. Chandrashekar Rao
பிரீமியம் ஸ்டோரி
K. Chandrashekar Rao

தெலங்கானா- கே.சந்திரசேகர் ராவ் ஆளுநரால் செக்மேட்!

பக்கத்து ஸ்டேட் பரபர!

தெலங்கானா- கே.சந்திரசேகர் ராவ் ஆளுநரால் செக்மேட்!

Published:Updated:
K. Chandrashekar Rao
பிரீமியம் ஸ்டோரி
K. Chandrashekar Rao

மிழக அரசியல் என்பது ஆட்சியைக் காப்பாற்றுவதும், டெல்லி செல்வதுமாய் இருக்கும் சூழலில், அதிரடி சரவெடிகளால் அசரடித்துக்கொண்டிருக்கிறார்கள் அண்டை மாநில முதல்வர்கள். பக்கத்து மாநிலங்களுக்கு ஒரு குட்டி விசிட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
 • போராட்டங்களால் பலமுறை ஆந்திராவை நிலைகுலையச் செய்தவர், டி.ஆர்.எஸ் தலைவரும் தெலங்கானா முதல்வருமான கே.சி.ஆர் என அழைக்கப்படும் கே.சந்திரசேகர் ராவ். போராட்டங்கள் நடத்தியே ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த கே.சி.ஆர்., இன்று போராட்டங்களை ஒடுக்கும் ஒரு நபராக மாறியுள்ளார்.

கே.சந்திரசேகர் ராவ்
கே.சந்திரசேகர் ராவ்
 • போராட்டத்தில் ஈடுபட்ட தெலங்கானா மாநிலப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் அனைவரையும் ஒரே ஆர்டரில் டிஸ்மிஸ் செய்வதாக அறிவித்து, மறைந்த, முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளார் கே.சி.ஆர்.

 • ‘தெலங்கானாவின் திருப்பதி’ என்று அழைக்கப்படும் யாடாத்ரி கோயிலின் ஒரு கல்தூணில் பொறிக்கப்பட்டுள்ள கே.சி.ஆர் முகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 • இருபது ஆண்டுப் பழைய தலைமைச் செயலகத்தை இடித்து, புதிதாகக் கட்ட வேண்டும் என முடிவு செய்திருக்கிறார் கே.சி.ஆர். இதற்கென ஒரு மருத்துவமனையை இடிக்க வேண்டும் என்கிற சூழல் கடும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது.

 • ஆளுநர் தமிழிசை ‘பிரஜா தர்பார்’ என்னும் திட்டத்தை அறிவித்தி ருக்கிறார். இதன்படி, மக்கள் தங்கள் குறைகளை ஆளுநரிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம். ஆளுநரின் இந்த அறிவிப்புக்கு ஆளும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 • ‘தெலங்கானாவில் கே.சி.ஆர் வைத்ததுதான் சட்டம். அவருக்கு ஒரு கடிவாளம் போடவே தமிழிசையை ஆளுநராக பிரதமர் மோடி நியமித்துள்ளார்’ என்று தெலங்கானா மாநில அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஆந்திரா - ஜெகன் மோகன் ரெட்டி திட்டமோ திட்டம்!

 • நூறு நாள்களில் நூறு திட்டங்கள் என்னும் அளவுக்கு அறிவிப்புகளை வாரிவாரி வழங்குகிறார் ஜெகன். தொழில் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 70 சதவிகிதம் வேலைவாய்ப்பு ஒரு சாம்பிள்.

 • விடுமுறையற்ற காவல்துறைக்கு வார விடுமுறை விட்டு அண்டை மாநிலத்தவர்களுக்கே ஷாக் தருகிறார். இலவச கண் சிகிச்சைத் திட்டம், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்கான மருத்துவக்காப்பீடு, ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு ரூ.10,000 நிதி, விடுமுறையற்ற காவல்துறைக்கு வார விடுமுறை எனத் தொடர் அறிவிப்புகளில் திக்குமுக்காட வைக்கிறார்.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி
 • நான்கு லட்சம் பணியிடங்களை உருவாக்கப்போவதாகவும், அவற்றில் 1.33 லட்சம் பணியிடங்கள் நிரந்தரமானவை என்றும் அறிவித்த சில மாதங்களில் இரண்டு லட்சம் பேரைத் தேர்வு செய்துவிட்டார், அவர்களில், 1.26 லட்சம் பேருக்கு தற்போது பணி வழங்கப்பட்டுள்ளது.

 • ஊழலற்ற ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, ‘ஆந்திரப் பிரதேச உள்கட்டமைப்பு மசோதா, 2019’ நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி, ரூ.100 கோடிக்கு மேலான கான்ட்ராக்ட் அனைத்தும், அதற்கென நியமிக்கப்படும் நீதிபதி மூலமாகவே செல்லும்.

 • புகழ் மாலைகளுக்கு இடையே சர்ச்சைகளும் இல்லாமலில்லை. முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் கனவுத் திட்டமான தலைநகர் அமராவதிக்கு குட்பை சொல்லிவிட்டார் ஜெகன்.

 • நிதிப்பற்றாக்குறை ரூ.15,000 கோடியை நெருங்குவதால் அடிக்கடி மோடியைச் சந்திக்கிறார். ஆனாலும், ம்ஹூம்.

 • மணல் அள்ளத் தடை கொண்டுவந்துள்ளார் ஜெகன். கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதே நேரம், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை வரவேற்கிறார்கள்.

 • மக்களுக்கான நல்ல திட்டங்களை முன்னெடுக்கும் அணுகுமுறை கடைசிவரை இருந்தால், ஆந்திர மக்களின் இதயங்களில் நிரந்தர இடத்தைப் பிடிப்பார் ஜெகன்மோகன்.

கேரளா -  பினராயி விஜயன் அனைவருக்கும் நண்பன்!

 • நாடாளுமன்றத் தேர்தலில் தோல்விகள் சூழ்ந்தாலும், சபரிமலை விவகாரத்தில் தன் அரசு எடுத்த நிலைப்பாடு சரியானது, அதில் எந்த மாற்றமும் இல்லை என்று இப்போதும் உறுதியாகச் சொல்கிறார் பினராயி விஜயன்.

 • சரஸ்வதி பூஜைக்கான கேரள நாளேடுகளில் விளம்பரம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. பினராயி விஜயனின் மடியில் ஒரு குழந்தை அமர்ந்திருக்க, அந்தக் குழந்தையின் கையைப் பிடித்து அரிசியில் எழுதவைக்கும் பினராயி விஜயனின் புகைப்படம் இடம்பெற்ற அந்த விளம்பரம் வைரல் அடித்திருக்கிறது. பினராயி விஜயனின் இந்த 'அனைவருக்கும் நண்பன்' அப்ரோச் எல்லாத் தரப்பினரையும் கவர்ந்திருக்கிறது.

Pinarayi Vijayan
Pinarayi Vijayan
 • பாலா சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் கேரள மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது என்கிற செய்தி பினராயி விஜயனுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.

 • வயநாட்டில் ராகுல் பெற்ற வெற்றி மட்டுமே, காங்கிரஸின் ஒரே ஆறுதலாக இருக்கிறது. முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியோ, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணியோ, இன்னபிற காங்கிரஸ் பெரிய தலைகளோ பெரிதாக எதற்கும் தலைகாட்டுவதில்லை. இந்தியா முழுக்கவே பதுங்குகுழியில் இருக்கும் காங்கிரஸ், கேரளாவிலும் அப்படியே இருப்பது பினராயி விஜயனை ரிலாக்ஸ் மோடில் வைத்திருக்கிறது.

 • அதே நேரம், காங்கிரஸ் பலவீனமடைவது பா.ஜ.க-வின் வளர்ச்சிக்குச் சாதகமாக இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. வருகிற 21-ம் தேதி கேரளாவில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அப்போது, யார் பலத்துடன் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.