Election bannerElection banner
Published:Updated:

`வேட்பு மனுவை கமல்கிட்ட கொடுக்கிறப்போ இதயம் படபடன்னு இருந்துச்சு!'' - நெகிழும் கோமளம்

கமல் வேட்பு மனு தாக்கலின் போது
கமல் வேட்பு மனு தாக்கலின் போது

கமலின் மன்னியும் நடிகர் சாருஹாசனின் மனைவியுமான கோமளம் அவர்களிடம் பேசினோம்.

இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் அமையும் மூன்றாவது அணி எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று, அரசியல் ஆர்வலர்கள் முதல் சாமானியர்கள் வரை விவாதித்துக்கொண்டிக்கின்றனர். இந்நிலையில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த கமல், அதற்கு முன்பாக தன்னை வளர்த்த மன்னியிடம் ஆசீர்வாதம் வாங்கிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். கமலின் மன்னியும் நடிகர் சாருஹாசனின் மனைவியுமான கோமளம் அவர்களிடம் பேசினோம்.

`` `வேட்பு மனு தாக்கல் செய்யப் போறேன். ஆஃபீஸ்க்கு வாங்க'ன்னு கூப்பிட்டான். ஸோ, திடீர்னு கிளம்புற மாதிரிதான் இருந்துச்சு. அதனால என்னன்னு சொல்லி ஆசீர்வாதம் செய்யணும்னு எல்லாம் யோசிக்கவே இல்ல. அந்த மனுவைத் தொட்டு அவன் கையில கொடுக்கிறப்போ, இதயம் கொஞ்சம் படபடன்னு ஆச்சு. எனக்கு கல்யாணமானதுக்கு அப்புறம்தான் அவன் பொறந்தான். என் குழந்தை மாதிரிதான் அவனை வளர்த்தேன். நான் வளர்த்த குழந்தை நாட்டுக்காக ஒரு பெரிய விஷயம் செய்யப் போறான். அதுக்காக அவன் நிறைய க‌ஷ்டப்படப் போறான்னு தெரியுது. அந்த பயத்துலதான் அப்படி படபடன்னு வந்துச்சு போல. என்னையறியாம மனசுக்குள்ள ஆஞ்சநேயர் ஸ்லோகம் சொல்லிக்கிட்டே வேட்பு மனுவை கமல்கிட்ட கொடுத்துட்டு ஆசீர்வாதம் செஞ்சேன்.

அதுக்கப்புறம், `நீ போற பாதை ரொம்ப கஷ்டமான பாதைப்பா. நல்லபடியா போயிட்டு வரணும். நிறைய அம்புகள் உன்மேல வந்து விழும். எல்லாத்தையும் தாங்கிக்கக் கூடிய சக்தியை அந்த பகவான் உனக்குக் கொடுக்கணும்'னு சொன்னேன்.

கமல்
கமல்
``முதலைகளோடு மோதும் தங்க மீன் நான்!” - மதுரவாயல் ம.நீ.ம வேட்பாளர் பத்மப்ரியா

கமல் சினி ஃபீல்டுல இருக்கிறதால ஒண்ணு தூக்கி வெச்சுக் கொண்டாடுவாங்க, இல்லன்னா கீழ போட்டுடுவாங்க. இப்போ அரசியலுக்கு வந்திருக்கான். என் மாமனார், அதாவது கமலோட அப்பாவுக்கு தீவிர அரசியல் ஈடுபாடு இருந்துச்சு. ஆனா, அவர் முழு நேர அரசியல், தேர்தல் அப்படின்னு செய்யலை. அவரோட ரத்தம் கமல் அரசியலுக்கு வந்ததுல எங்களுக்கு ஆச்சர்யமே இல்ல. தவிர, கமல் எது செஞ்சாலும் பர்ஃபெக்ட்டா பண்ணுவான். அதனால மக்களுக்கு அவன் கண்டிப்பா நல்லது பண்ணுவான்கிற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கு'' என்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு