சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் மன்சூர் அலிகான் அசால்ட் பேர்வழிதான். விமர்சனம் என வந்துவிட்டால் எதிராளிகளை துவம்சம் செய்துவிடுகிறார். நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அரசியலில் அமைதியைக் கடைப்பிடித்துவருபவரிடம் பேசினோம்.

“சமீபகாலமாக நாம் தமிழர் கட்சிக் கூட்டங்களில், மன்சூர் அலிகானைப் பார்க்க முடியவில்லையே?’’

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என நம்பியிருந்தேன். ஆனால், விலைபோய்விட்டார்கள். இதற்காக இரண்டு பட வாய்ப்புகளை இழந்தேன். உண்மையான தோல்வியல்ல அது. நாடு முழுக்க வாக்கு இயந்திரத்திலும் மோசடி நடந்திருக்கிறது. நீதிமன்றமும் தேர்தல் ஆணையமுமே ஆளுங்கட்சிகளின் பாக்கெட்டில் இருக்கின்றன. இந்த நிலையில் நாம் மட்டும் போராடி என்ன செய்ய முடியும்? ஒட்டுமொத்தத்தில் இந்தப் பாசிச எண்ணம்கொண்டவர்கள் வேரறுக்கப்பட வேண்டும்.’’

“வாக்கு இயந்திரத்தில் மோசடி என்றால், தமிழ்நாட்டில் தி.மு.க எப்படி பெரும்பான்மையான இடங்களைப் பிடித்திருக்க முடியும்?’’

“அவர்களுடைய மோசடி எங்கெல்லாம் செல்லுபடியாகுமோ அங்கே மட்டுமே கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள். மற்றபடி, தி.மு.க கூட்டணி இங்கே 38 இடங்களில் வெற்றிபெற்று பெரிதாக என்ன சாதித்துவிட்டது?”

“தமிழ்நாட்டில் ‘ஆன்மிக அரசியலை அமைப்பேன்’ என்கிறாரே ரஜினி?’’

“ஒரு வெங்காயமும் உரிக்க முடியாது. ‘அரசியலில் ரஜினி ஒரு சுண்டைக்காய்’ என்று 24 வருடங்களுக்கு முன்பே ஒரு டி.வி பேட்டியில் நான் சொல்லிவிட்டேன். சினிமாவில் ஏழைப் பங்காளனாகவும் தொழிலாளிகளின் தோழனாகவும் நடித்துதான் மக்களிடையே கதாநாயகனாக உயர்ந்தார் ரஜினி. நிஜத்திலோ, அவர் முதலாளித்துவத்தின் பக்கம்தான் நிற்கிறார். தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டபோதுகூட ‘போராட்டம்... போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்’ என்றார். இப்போதுகூட ‘போராடாதீங்க... வன்முறையைத் தூண்டாதீங்க...’ என்கிறார். வன்முறையின் ஆரம்பமே இந்தச் சட்டத்திருத்தம்தானே. இந்த நாடே வன்முறை யாளர்களால்தானே ஆளப்படுகிறது. கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவர்கள், நான்கு வருடங்கள் தலைமறைவாக இருந்தவர்கள்தானே பதவியில் இருக்கிறார்கள்.’’

“யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?’’

“நான் யாருடைய பெயரையும் சொல்லவில்லை... ச்சும்மா நீங்கள் தூண்டிவிட்டு என்னை ஜெயிலில் தள்ளப்பார்க்காதீர்கள். மக்கள் நாயகனாக தமிழ்நாட்டின் பக்கம் ரஜினி நின்றால் நானும் அவரைப் பாராட்டிவிட்டுப்போகிறேன். ஆனால், தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிராக நின்றுகொண்டு, ‘போர் வரட்டும்’ என்று சொல்பவர்கள் எல்லோரும் அரசியலுக்குள் வரத் துடிக்கிறார்கள். தமிழ்நாடு, தமிழர்களின் பூமி. இனியும் நாங்கள் ஏமாறத் தயாரில்லை!’’