Published:Updated:

"திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 38 பேர் பாஜக-வுடன் தொடர்பில் இருக்கின்றனர்!"- மிதுன் சக்ரவர்த்தி

மிதுன் சக்ரவர்த்தி

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உடைக்கும் பா.ஜ.க-வின் முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக மம்தா பானர்ஜி கட்சியைச் சேர்ந்த 38 எம்.எல்.ஏ-க்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக மிதுன் சக்ரவர்த்தி தெரிவித்திருக்கிறார்.

"திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 38 பேர் பாஜக-வுடன் தொடர்பில் இருக்கின்றனர்!"- மிதுன் சக்ரவர்த்தி

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உடைக்கும் பா.ஜ.க-வின் முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக மம்தா பானர்ஜி கட்சியைச் சேர்ந்த 38 எம்.எல்.ஏ-க்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக மிதுன் சக்ரவர்த்தி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
மிதுன் சக்ரவர்த்தி

மேற்கு வங்கத்தில் மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி பள்ளியில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக கடந்த வாரம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். அதோடு பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜி கைதுசெய்யப்பட்டிருப்பதோடு, அவரது வீட்டிலிருந்து 20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மத்திய விசாரணை ஏஜென்சி மூலம் பா.ஜ.க உடைக்கப் பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உடைக்கும் பா.ஜ.க-வின் முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக மம்தா பானர்ஜி கட்சியைச் சேர்ந்த 38 எம்.எல்.ஏ-க்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக பா.ஜ.க-வைச் சேர்ந்தவரும் நடிகருமான மிதுன் சக்ரவர்த்தி தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி
அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி

மிதுன் சக்ரவர்த்தி இது தொடர்பாக அளித்தப் பேட்டியில், ``திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 38 பேர் பா.ஜ.க-வுடன் தொடர்பில் இருக்கின்றனர். அவர்களில் 21 என்னுடன் நேரடித்தொடர்பில் இருக்கின்றனர். கைதுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு எதிராக ஆதாரம் எதுவும் இல்லாவிட்டால் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எதாவது தவறு செய்திருந்தால் உலகத்தில் உள்ள எந்த சக்தியாலும் அவரைக் காப்பாற்ற முடியாது. 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளது" என்று தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிதுன் சக்ரவர்த்தி
மிதுன் சக்ரவர்த்தி

மிதுன் சக்ரவர்த்தி கடந்த மக்களவைத் தேர்தலின் போது பா.ஜ.க-வில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். மிதுன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ள புதிய தகவல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சியடைய செய்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் எம்.எல்.ஏ மானிக் பட்டாச்சாரியாவிடமும் அமலாக்கப் பிரிவு இன்று விசாரணை நடத்தியிருக்கிறது. இதனால் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.