Published:Updated:

``உங்கள பத்தி நல்லா பேசிக்குறாங்க" - நேரில் பாரட்டிய நடிகர் நாசர்; நெகிழ்ந்த தஞ்சாவூர் கமிஷனர்!

பாராட்டு தெரிவிக்கும் நாசர் மகிழ்ச்சியில் கமிஷனர்

மேதகு படத்தில் நடித்து வரும் நாசர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது கமிஷனர் சரவணக்குமார் செயல்கள் குறித்து பலரும் தெரிவிக்க நாசருக்கு வியப்பு ஏற்பட்டு நேரில் சென்று அவரை பாராட்டியிருக்கிறார்

``உங்கள பத்தி நல்லா பேசிக்குறாங்க" - நேரில் பாரட்டிய நடிகர் நாசர்; நெகிழ்ந்த தஞ்சாவூர் கமிஷனர்!

மேதகு படத்தில் நடித்து வரும் நாசர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது கமிஷனர் சரவணக்குமார் செயல்கள் குறித்து பலரும் தெரிவிக்க நாசருக்கு வியப்பு ஏற்பட்டு நேரில் சென்று அவரை பாராட்டியிருக்கிறார்

Published:Updated:
பாராட்டு தெரிவிக்கும் நாசர் மகிழ்ச்சியில் கமிஷனர்

தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனராக இருப்பவர் சரவணக்குமார். இவர் பொறுப்பேற்றதிலிருந்தே மாநகராட்சிக்குச் சொந்தமான நகரின் மையப்பகுதியில் ஆக்கிரமிப்பு மற்றும் தனி நகர் கட்டுப்பாட்டிலிருந்த இடங்களை மீட்கத் தொடங்கினார். தற்போதுவரை அந்த அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கடைகளை ஓபன் டெண்டர் முறையில் வாடகைக்கு விட்டார்.

கமிஷனர் சரவணக்குமார், நடிகர் நாசர்
கமிஷனர் சரவணக்குமார், நடிகர் நாசர்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலையில், நிதி நெருக்கடியில் இருந்த நிர்வாகத்தை இது போன்ற செயல்களால் மீட்டு மாநகராட்சியின் வருமானத்தை பெருக்கினார். கடந்த வாரம் தி.மு.க பிரமுகர் ஒருவர் கட்டுப்பாட்டிலிருந்த ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தை மிரட்டலுக்கு அஞ்சாமல் மீட்டு அந்த இடத்தில் விதியை மீறி கட்டப்பட்டிருந்த கடைகளை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றினார். இது போன்ற செயல்களால் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சரவணக்குமார் நன்மதிப்பை பெற்றுள்ளார்.

தஞ்சாவூர் 
மாநகராட்சி அலுவலகத்தில்
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில்

இந்த நிலையில், தமிழீழ விடுதலைக்காக பாடுபட்ட பிரபாகரனின் வாழ்கை வரலாற்றை மையமாக கொண்டு இயக்குநர் யோகேந்திரன் 'மேதகு' என்ற பெயரில் இயக்கிய திரைப்படம் ஏற்கெனவே வெளியானது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஷூட்டிங் தஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இன்று தஞ்சாவூர், விளார் கிராமத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஷூட்டிங் நடைபெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 நடிகர் நாசர்
நடிகர் நாசர்

அப்போது நடிகர் நாசர், சரவணக்குமாரைச் சந்தித்துப் பேசினார். அவரை வாழ்த்தினார். அத்துடன், பழ.நெடுமாறன் எழுதிய `காலத்தை வென்ற காவிய நட்பு' என்ற புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கியதுடன், ``உங்களோட நேர்மை தொடர வேண்டும். இந்த பணி இன்னும் சிறப்பாக அமைய வேண்டும்" என பாராட்டினார். பின்னர் மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன் வணங்கி மரியாதை செலுத்தினார்.

இது குறித்து நாசர் உதவியாளர் கூறியதாவது, ``தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனர் சரவணக்குமாரின் செயல்பாடுகள், மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை துணிச்சலாக அகற்றியது போன்ற நடவடிக்கைகள் குறித்து தெரியவந்ததால் அவரை நேரில் சந்தித்து பாராட்டியதாக தெரிவித்தார். கமிஷனர் சரவணக்குமார் கூறுகையில், `உங்களோட செயல பத்தி ஊருக்குள்ள நல்லா பேசிக்குறாங்க'னு சொன்ன நாசர் புத்தகம் கொடுத்து வாழ்த்தினார்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism