நடிகர் பிரகாஷ்ராஜ் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளில் தனது கருத்தினை முன்வைத்து வருகிறார். குறிப்பாக பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலமும், செய்தியாளர் சந்திப்பிலும் தெரிவித்து வருகிறார். பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை தொடங்கி, டெல்லி விவசாயிகள் போராட்டம் மற்றும் அமித் ஷாவின் இந்தி விவகாரம் வரை பல்வேறு விவகாரங்களில் தன்னுடைய கருத்தை முன்வைத்து வருகிறார்.
இந்த நிலையில், அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடி தேநீர் விற்றதை நம்பியவர்கள், அவர் நாட்டையும் விற்றுக் கொண்டிருப்பதை நம்ப மறுக்கிறார்கள்'' என பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism