Published:Updated:

``அரசியல் குறித்து விவாதித்தோம்; ஆனால்...” - ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்த ரஜினி

ரஜினிகாந்த்

``தமிழ்நாட்டை அவர் மிகவும் நேசிச்சிருக்காரு. முக்கியமாகத் தமிழ் மக்கள், அவர்களுடைய நேர்மை, கடின உழைப்பு எல்லாம் அவருக்கு மிகவும் புடிச்சிருக்கு." - ரஜினிகாந்த்

``அரசியல் குறித்து விவாதித்தோம்; ஆனால்...” - ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்த ரஜினி

``தமிழ்நாட்டை அவர் மிகவும் நேசிச்சிருக்காரு. முக்கியமாகத் தமிழ் மக்கள், அவர்களுடைய நேர்மை, கடின உழைப்பு எல்லாம் அவருக்கு மிகவும் புடிச்சிருக்கு." - ரஜினிகாந்த்

Published:Updated:
ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். ஆர்.என்.ரவியுடனான சந்திப்புக்குப் பின்னர் ரஜினிகாந்த், தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

அப்போது சந்திப்பு குறித்து பேசிய ரஜினிகாந்த், ``இது மரியாதை நிமித்தமான ஒரு சந்திப்பு. கிட்டத்தட்ட 20, 25 நிமிஷம் பேசினோம். தமிழ்நாட்டை அவர் மிகவும் நேசிக்கிறார். முக்கியமாகத் தமிழ் மக்கள், அவர்களுடைய நேர்மை, கடின உழைப்பு எல்லாம் அவருக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. இங்கே இருக்கிற ஆன்மிக உணர்வு அவரை ரொம்பவும் ஈர்த்திருக்கிறது. தமிழ்நாட்டின் நல்லதுக்காகப் பணி செய்ய தயாராக இருக்கேன்-னு சொன்னார்" எனக் கூறினார்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த்திடம், இந்தச் சந்திப்பில் அரசியல் சம்பந்தமாக பேசினீர்களா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார். அதற்கு, ``அரசியல் பற்றியும் நாங்கள் விவாதித்தோம். அதைப் பற்றி இப்போது உங்களிடம் பகிர்ந்துக்க முடியாது" என ரஜினிகாந்த் பதிலளித்தார்.

மேலும், அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி வரி உயர்வு குறித்துக் கேட்டதற்கு, `நோ கமென்ட்ஸ்' எனக் கூறிய ரஜினி, மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான திட்டம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.