Published:Updated:

`24 வருடங்களாக நான் பா.ஜ.க-வில் இருந்துவருகிறேன்’ - நடிகை கௌதமியின் புது விளக்கம்!

நடிகை கௌதமி

அண்மையில் தமிழக பா.ஜ.க நடத்திய `நம்ம ஊர்ப் பொங்கல்' குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசிய நடிகை கௌதமி, ``இதெல்லாம் கட்சியின் வளர்ச்சிக்கான சில படிகள். இது ஒரு லாஜிக்கல் குரோத்!'' என்று விளக்கம் கொடுக்கிறார்.

`24 வருடங்களாக நான் பா.ஜ.க-வில் இருந்துவருகிறேன்’ - நடிகை கௌதமியின் புது விளக்கம்!

அண்மையில் தமிழக பா.ஜ.க நடத்திய `நம்ம ஊர்ப் பொங்கல்' குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசிய நடிகை கௌதமி, ``இதெல்லாம் கட்சியின் வளர்ச்சிக்கான சில படிகள். இது ஒரு லாஜிக்கல் குரோத்!'' என்று விளக்கம் கொடுக்கிறார்.

Published:Updated:
நடிகை கௌதமி

`ரஜினிகாந்த் அரசியல், முதல்வர் வேட்பாளர் சர்ச்சை, நம்ம ஊரு பொங்கல்' என தமிழக அரசியலின் அடுத்தடுத்த டிரெண்டிங் செய்திகளின் `பிக் பாஸா’கவே மாறிவருகிறது பா.ஜ.க.

இந்தச்சூழலில், தமிழக பா.ஜ.க-வின் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், நடிகையுமான கௌதமியிடம், நடப்பு அரசியல் குறித்தான `பரபர’ கேள்விகளை முன்வைத்தோம்.

``2021 சட்டமன்றத் தேர்தலில், தமிழக பா.ஜ.க-வின் எம்.எல்.ஏ வேட்பாளராக கௌதமியை எதிர்பார்க்கலாமா?’’'

``எதிர்பார்க்கலாம் அல்லது எதிர்பார்க்க வேண்டாம் என்பதெல்லாம் கட்சித் தலைமையின் கைகளில்தான் இருக்கிறது. ஏனெனில், ஒரு தொகுதிக்கு யாரை வேட்பாளராக முன்னிறுத்தலாம் என்ற தேர்வுக்குப் பின்னே தொகுதியின் நிலை மற்றும் வேட்பாளரின் தகுதி, திறமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அடங்கியிருக்கின்றன

நடிகை கௌதமி
நடிகை கௌதமி
GAUTAMI

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேர்தல் பொறுப்பாளராக எனக்கு ஒரு பொறுப்பைக் கட்சி வழங்கியிருக்கிறது என்று சொன்னாலே, இந்தப் பணியில் என்னால் திறம்படச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கையின்பேரில்தான் கொடுத்திருக்கிறார்கள். இதையும் தாண்டி, `வேட்பாளர் தேர்வு' என்பது கட்சி அறிவிக்கும் வரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பை கட்சி எனக்கு வழங்கினால், அந்தப் பணியையும் திறம்பட செய்து முடிக்க வேண்டியது என் கடமை. என்னைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் அரசியல்ரீதியாக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலத்துக்கும் ரொம்ப ரொம்ப முக்கியமானது!''

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலத்துக்கு இந்தத் தேர்தல், முக்கியமானது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?’’

`ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு, இந்த நான்கு ஆண்டு காலகட்டத்தில் அரசியல்ரீதியாக ஏற்பட்ட பல்வேறு குழப்பங்கள், மக்கள் பிரச்னைகள், இயற்கைச் சீற்றங்கள் என வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடிகள். ஆனால், அத்தனை இடர்ப்பாடுகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு ஆட்சியையும் நல்லவிதமாக நடத்திவருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

குழப்பமான இந்தச் சூழலிலும்கூட, தமிழகம் வளர்ச்சிப் பாதையில்தான் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, வெளிநாட்டுத் தொழில் முதலீடுகள் கணிசமான அளவில் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கின்றன. தொடர்ந்து அ.தி.மு.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றால்தான் இந்த வளர்ச்சி தொடரும். இதனுடைய முழுப் பயனும் தமிழக மக்களைப் போய்ச் சேரும். அதனால், இந்தத் தேர்தல் மக்களின் எதிர்காலத்துக்கு ரொம்பவும் முக்கியமானது!''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`` `வெளிநாட்டு முதலீடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடும் துணிவு உண்டா?’ என்று எதிர்க்கட்சித் தலைவர் சவால் விடுத்திருக்கிறாரே?''

``கோடானு கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்குவதற்கான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படுகின்றன என்றால், அவற்றைச் சட்டென்று எந்தவொரு நிறுவனமும் செயல்படுத்திவிட முடியாது. அதற்கென சில காலம் பிடிக்கும்.''

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

``முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதாகக் கூறி, பா.ஜ.க அடித்த திடீர் பல்டி, எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படுகிறதே?’’

``தேர்தல் பிரசாரத்தில், `மக்களுக்கு என்ன நன்மை செய்யவிருக்கிறோம்' என்பதைப் பற்றியெல்லாம் எடுத்துச் சொல்லாமல், எங்களைப் பற்றி என்ன சொல்லலாம் என எதிர்க்கட்சிகள் பார்த்துக்கொண்டிருக்கின்றன. அப்போதும்கூட, எங்களைப் பற்றிக் குறை சொல்வதற்கு எதுவுமே அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதால்தான் இல்லாத ஒரு விஷயத்தை பூதாகரமாக உருவகப்படுத்திப் பேசி, தங்களை நோக்கி மக்களின் கவனத்தை ஈர்க்கப்பார்க்கிறார்கள்.’’

``அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்ட ரஜினிகாந்தை, வாய்ஸ் கொடுக்கச் சொல்லி தமிழக பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து வற்புறுத்திவருவது நியாயம்தானா?’’

``வற்புறுத்தும் அளவுக்கு யாருக்கு, என்ன நிர்பந்தம் இருக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், பிரபலமானவர், நம்முடைய கொள்கைகளிலும் பெரும்பாலானவற்றில் ஒத்துப்போகிற ஒருவர், நம்மோடு இறங்கி வேலை செய்யாவிட்டாலும்கூட நமக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற ஆசை அரசியலில் எல்லோருக்கும் இருக்கும். அதில் எந்தத் தவறும் இல்லை.

அதேசமயம், ரஜினிகாந்துக்குத் தனிப்பட்ட வகையில் நான் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. அவர் இன்னும் நீண்டநாள்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அவர் எதிர்பார்க்கிற நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்க வேண்டும் என்றுதான் மனதார வேண்டிக்கொள்கிறேன்.’’

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

``தமிழ்நாட்டில், `இந்துந்துவா அரசியல்' எடுபடாததால்தான் `வேல் யாத்திரை’, `நம்ம ஊர்ப் பொங்கல்' எனத் தமிழர் அடையாளங்களைக் கையிலெடுத்துவிட்டதா பா.ஜ.க?’’

``இதெல்லாம் கட்சியின் வளர்ச்சிக்கான சில படிகள். 20 வருடங்களுக்கு முன்னர் இருந்த மாதிரியே இப்போதும் இருப்பதோ அல்லது இப்போது இருப்பது போன்றே 20 வருடங்களுக்குப் பிறகும் இருப்பதோ வளர்ச்சியற்ற நிலையாகத்தான் இருக்கும். 24 வருடங்களுக்கு முன்னர் நான் பா.ஜ.க-வில் இணைந்தேன். இத்தனை ஆண்டுகளில், கட்சியின் தலைவர்கள் ஒவ்வொருவரும் அந்தந்தச் சூழ்நிலைகளோடு போராடி, கட்சியை முன்னேற்றப் பாதை நோக்கி வளர்த்தெடுத்து வந்திருக்கிறார்கள். இந்த வரிசையில்தான் இப்போது `நம்ம ஊர்ப் பொங்கல்' விழாவையும் நாங்கள் கொண்டாடுகிறோம். இது ஒரு லாஜிக்கல் குரோத். தமிழ்நாட்டின் பண்பாடு. கலாசார கொண்டாட்டங்களின் வழியாக மக்களோடு சந்தோஷமாக இணைந்து செல்கிறோம். இது வரவேற்கக்கூடிய அம்சம்தானே!''

``மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க முன்வராத பா.ஜ.க., `நம்ம ஊர்ப் பொங்கல்’ மாதிரியான கொண்டாட்டங்களின் மூலமாக மட்டுமே மக்களை நெருங்கத் துடிக்கிறதே?''

``கண்டிப்பாக இல்லை. மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக மற்ற கட்சிகள் எந்த அளவுக்குப் போராடியிருக்கின்றனவோ அதைவிடவும் அதிகமாகவே பா.ஜ.க போராடியிருக்கிறது. ஆனால், மற்ற கட்சிகள் தங்களைத் தாங்களே பப்ளிசிட்டி செய்துகொண்டன, பா.ஜ.க அதைச் செய்யவில்லை. அவ்வளவுதான்.''

`நம்ம ஊர் பொங்கல்' கொண்டாடும் கௌதமி
`நம்ம ஊர் பொங்கல்' கொண்டாடும் கௌதமி

``கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு ஆர்வம் காட்டுவது குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றனவே?''

``அலோபதி மருத்துவத்தைப் பொறுத்தவரையில் எல்லா மருந்துகளுமே குறிப்பிட்ட அளவில் பக்கவிளைவை உண்டாக்கும்தான். ஆனாலும்கூட கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக நாம் தடுப்பூசி போட்டுக்கொண்டுதான் வருகிறோம். அதற்குரிய நல்ல பலன்களும் நமக்கு இப்போதுவரை கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பெரும்பாலான வெளிநாடுகளில் கடந்த டிசம்பர் மாதமே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். ஆப்பிரிக்காவில், மிக அதிக அளவிலான எண்ணிக்கையில் தடுப்பூசிகளை வாங்கிவிட்டார்கள்.''

``வெளிநாடுகளில், அரசியல் தலைவர்கள் தாங்களே முன்மாதிரியாக தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில்..?''

``அவர்கள் செய்வதையெல்லாம் நாமும் செய்ய வேண்டும்; நாம் செய்வதையெல்லாம் அவர்களும் செய்ய வேண்டும் என்று சொன்னால் உலகமே ஒன்றாகிவிடும்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

ஒவ்வாமை பாதிப்புள்ளவர்கள் இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம்... கொஞ்ச காலம் பொறுத்திருங்கள் என்று ஏற்கெனவே அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதன் பிறகும் யார் முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது தேவையற்றது.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism