Published:Updated:

``இமாச்சல் மக்கள் வாய்ப்பு கொடுத்தால்...!" - அரசியல் திட்டத்தில் கங்கனா?

நடிகை கங்கனா ரனாவத்

``அனைத்து வகையான பங்கேற்புக்கும் நான் வெளிப்படையாக இருப்பேன். மேலும், கடினமாக உழைக்கும் மற்றவர்களும் முன்வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன்." - கங்கனா ரனாவத்

``இமாச்சல் மக்கள் வாய்ப்பு கொடுத்தால்...!" - அரசியல் திட்டத்தில் கங்கனா?

``அனைத்து வகையான பங்கேற்புக்கும் நான் வெளிப்படையாக இருப்பேன். மேலும், கடினமாக உழைக்கும் மற்றவர்களும் முன்வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன்." - கங்கனா ரனாவத்

Published:Updated:
நடிகை கங்கனா ரனாவத்

இந்தி பட உலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக அறியப்படும் கங்கனா ரனாவத், அவ்வப்போது திரைத்துறையைத் தாண்டி பல்வேறு அரசியல் கருத்துக்களையும் வெளிப்படையாகப் பேசிவருகிறார். இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பா.ஜ.க எம்.பி ஹேமாமாலினியின் மதுரா தொகுதியை கங்கனா ரனாவத் குறிவைத்திருப்பதாகவும், அதற்காக மாநில முதல்வரைச் சந்தித்துப் பேசி வருவதாகவும் பேச்சுக்கள் எழுந்தது.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

அதைத்தொடர்ந்து ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில், ``என்னிடம் அரசியலுக்கு வரும் திட்டம் எதுவும் இல்லை. ஆனால் ஒரு நடிகையாக எனக்கு இந்திய அரசியலில் ஆர்வம் உண்டு" என கங்கனா கூறியிருந்தார். இந்த நிலையில் ஊடக நிகழ்ச்சியொன்றில், `பொதுமக்கள் வாய்ப்பளித்தால் அரசியல் பிரவேசத்துக்கு தயார்’ என்பது போல கங்கனா ரனாவத் பேசியிருக்கிறார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

இன்று நடைபெற்ற தனியார் ஊடக நிகச்சியில் கலந்துகொண்ட கங்கனா ரனாவத்திடம், வாய்ப்பு கிடைத்தால் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறீர்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு, ``அனைத்து வகையான பங்கேற்புக்கும் நான் வெளிப்படையாக இருப்பேன். மேலும், கடினமாக உழைக்கும் மற்றவர்களும் இதில் முன்வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல், நான் கூறியதுபோல, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ளவர்கள் எனக்கு சேவை செய்ய வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்" என்று கங்கனா ரணாவத் கூறியிருக்கிறார். கங்கனா ரனாவத்தின் இத்தகையப் பேச்சு தற்போது அவரின் அரசியல் நுழைவை வெளிப்படுத்தும் விதமாக இருப்பதாகப் பேச்சுக்கள் எழுந்துவருகின்றன.

இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.