Published:Updated:

''திமுக-வில் தலை ஆடவில்லை; வாலெல்லாம் ஆடுகின்றன!'' - நடிகை கஸ்தூரி காட்டம்

நடிகை கஸ்தூரி

''தமிழகம் முழுக்க குறுநில மன்னர்கள் மாதிரி, தி.மு.க-வைச் சேர்ந்த சிலர் அராஜகம் செய்துவருவதை இந்த ஒரு வருடத்தில் நான் கண்கூடாகவே பார்த்துவிட்டேன்'' என்கிறார் நடிகை கஸ்தூரி.

''திமுக-வில் தலை ஆடவில்லை; வாலெல்லாம் ஆடுகின்றன!'' - நடிகை கஸ்தூரி காட்டம்

''தமிழகம் முழுக்க குறுநில மன்னர்கள் மாதிரி, தி.மு.க-வைச் சேர்ந்த சிலர் அராஜகம் செய்துவருவதை இந்த ஒரு வருடத்தில் நான் கண்கூடாகவே பார்த்துவிட்டேன்'' என்கிறார் நடிகை கஸ்தூரி.

Published:Updated:
நடிகை கஸ்தூரி

விருதுநகர், வேலூர், கடலூர் என தமிழ்நாட்டில், அடுத்தடுத்து அரங்கேறிவரும் கூட்டுப் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நாட்டையே பதறவைத்திருக்கின்றன. இது குறித்த விவாதங்கள் சமூக ஊடகத்தில் அனல் கிளப்பிவரும் வேளையில், நடிகை கஸ்தூரியும் தன் பங்குக்கு தி.மு.க அரசைக் கண்டித்து கருத்து பதிவிட்டுள்ளார். தன்னுடைய ஃபேஸ்புக் அக்கவுன்ட்டில் விருதுநகர் பாலியல் வன்முறைச் சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், 'புற்றீசல்போல் கிளம்பிவரும் பாலியல் குற்றச்சாட்டுகளில், அதிகம் சிறார்கள் சம்பந்தப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. இந்த விஷயத்தில், தமிழக அரசின் துரித நடவடிக்கை பாராட்டுக்குரியது. ஆனால், தி.மு.க என்றாலே பெண்களுக்குப் பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவுகிறது. குற்றவாளிகளுக்குச் சட்டப்படி தண்டனை கிடைக்காது என்ற சூழல் வருமேயானால், காவல் தெய்வங்களே தங்கள் கடமையைச் செய்யட்டும்!' என்று கொதித்துள்ளார்.

கஸ்தூரியின் இந்தப் பதிவு, தி.மு.க-வினரைக் கடுமையாக உசுப்பேற்றியுள்ளது. எனவே, கஸ்தூரியை மிகக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர் உடன் பிறப்புகள். இந்த நிலையில், நடிகை கஸ்தூரியிடம் பேசினேன்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

''நாட்டில் நடைபெறுகிற வன்முறைச் சம்பவங்களில், குற்றவாளிகளைக் கண்டறிய காவல்துறை விசாரணை துரிதப்படுத்தப்பட்டுவருகிறது. ஆனாலும்கூட, தி.மு.க அரசை குறை கூறுகிறீர்களே ஏன்?''

''மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, இதுவரை செய்துவந்துள்ள திட்டங்கள் எல்லாமே நன்றாகவே இருக்கின்றன. ஆனால், ஸ்டாலின் செய்கிற இந்த நல்ல திட்டங்களால் தி.மு.க-வுக்கு கிடைத்துவருகிற நல்ல பெயரை, தி.மு.க அனுதாபிகள் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதாவது பவர் வந்துடுச்சு என்று சொல்லி, இங்கே தலை ஆடவில்லை; வாலெல்லாம் ஆடிவருகின்றன. தமிழகம் முழுக்க குறுநில மன்னர்கள் மாதிரி, அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலர் அராஜகம் செய்துவருவதை இந்த ஒரு வருடத்தில் நான் கண்கூடாகவே பார்த்துவிட்டேன். எனவேதான் தி.மு.க மீது நான் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைக்கவேண்டியதாகிறது.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''விருதுநகர் பாலியல் வன்முறைச் சம்பவத்தில் குற்றவாளியாகக் கருதப்படும் தி.மு.க நபரை, கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்கள்தானே?''

''குற்றத்தில் சம்பந்தப்பட்ட நபரை 'தற்காலிக'மாகத்தானே நீக்கியிருக்கிறார்கள்?!''

பாலியல் வழக்கு
பாலியல் வழக்கு

''வழக்கு விசாரணையின் முடிவு என்னவென்று தெரியாத சூழலிலேயே, 'நிரந்தரமாக' கட்சியைவிட்டு நீக்கிவிட வேண்டும் என்று வழக்கறிஞரான நீங்களே சொல்கிறீர்களா?''

''தற்காலிக நீக்கம் என்பது நியாயமான நடவடிக்கையாக இருக்கலாம். ஆனால், தற்காலிகமாகத்தான் நீக்கியிருக்கிறோம் என்ற உண்மையைச் சொல்லாமல், 'கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம்' என்று நிரந்தரமாகவே நீக்கிவிட்டது போன்று இணையத்தில் பொய் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார்கள் தி.மு.க உடன்பிறப்புகள்.

நான் பா.ஜ.க-வை விமர்சிக்கிறபோது வருகிற எதிர்வினைகள்கூட ஒரு வரைமுறைக்குட்பட்டதாக இருக்கின்றன. ஆனால், தி.மு.க-வினர் விமர்சனம் என்பது பெண் என்ற பாலினத்தை அசிங்கப்படுத்துவதாகவும், நடிகை என்ற தொழிலையே இழிவுபடுத்துவதாகவும் இருக்கிறது. ஆக, என்னுடைய இந்த அனுபவத்தைக்கொண்டுதான் 'ஏன் மூடிக்கொண்டிருக்கிறீர்கள்' என்று தி.மு.க உடன்பிறப்புகளைக் கேள்வி கேட்கிறேன்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''பெண்கள் பாதுகாப்பை முன்வைத்து தி.மு.க அரசை விமர்சிக்கிற நீங்கள், தி.மு.க அரசு கொண்டுவந்துள்ள மகளிர் நலத் திட்டங்களைப் பாராட்டுவதில்லையே... ஏன்?''

''குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்று தி.மு.க-தான் தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ஆனால், இப்போதுவரையில் நடைமுறைப்படுத்தவில்லையே... நானும் குடும்பத் தலைவிதான். மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் எனக்கு எப்போது கிடைக்கிறதோ... அப்போது உங்கள் கேள்விக்கான பதிலைச் சொல்கிறேன்.''

சட்டப்பேரவையில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
சட்டப்பேரவையில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

''இப்போதும்கூட தி.மு.க-வை விமர்சிக்கத்தானே செய்கிறீர்கள்... உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ள தி.மு.க அரசைப் பாராட்ட மறுக்கிறீர்களே?''

''கடந்த அ.தி.மு.க அரசு, 'தாலிக்குத் தங்கம்' என்று பெண்களுக்காகச் செயல்படுத்திவந்த திட்டத்தைத்தான் இப்போது, 'மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை' என்று தி.மு.க அரசு மாற்றியமைத்துள்ளது. பெரியாரின் பார்வையில் மகளிரை முன்னிலைப்படுத்துகிற இந்தத் திட்டம் குறித்து தமிழக அரசு, பட்ஜெட்டில் அறிவித்ததுமே பாராட்டிய முதல் ஆள் நான்தான்.

ஏனெனில், 'ஒரு பெண்ணுக்கு திருமணம் ரொம்ப முக்கியம்' என்ற பார்வையிலிருந்து மாறி, 'படிப்புதான் பெண்ணுக்கு அவசியத் தேவை' என்ற நிலையை அரசு செயல்படுத்த ஆரம்பித்திருப்பதே வரவேற்கத்தக்க அம்சம். எனவே, நல்லது செய்தாலும் அதைப் பாராட்டுகிற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். அதுவே, ஏதாவது தவறு செய்கிறார்கள் என்றால், அது குறித்து திட்டுவதிலும் நான்தான் முதல் ஆளாக இருப்பேன். ஆனால், என்னுடைய பாராட்டுகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளாதவர்கள், நான் திட்டினால் மட்டும் 'திட்டிட்டியே... திட்டிட்டியே' என்று வரிந்துகட்டிக்கொண்டு வருவதைப் பார்த்தால்தான் எனக்குச் சிரிப்பு வருகிறது. நம்முடைய அரசாங்கத்தை நான் திட்டாமல், வேறு யார் திட்டுவார்கள்?''

''தி.மு.க அரசைக் குறிவைத்து விமர்சிக்கிற நீங்கள், மற்ற பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கவில்லையே?''

''பொள்ளாச்சி சம்பவம் மற்றும் ஆசிபா வழக்கு குறித்தெல்லாம் நான் நிறைய எழுதியிருக்கிறேன். என்னுடைய கருத்துகளை காணொலி காட்சிகளாகவும் வெளியிட்டிருக்கிறேன். நிர்பயா வழக்கு குறித்து பல வருடங்களாகத் தொடர்ந்து பேசிவருகிறேன். பல சூழ்நிலைகளில் நிர்பயாவின் தாய் ஆஷாதேவியுடன் சேர்ந்து தொலைக்காட்சி விவாதங்களிலும் பேசியிருக்கிறேன்.''

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள்
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள்

''தொடரும் இதுபோன்ற பாலியல் வன்முறைச் சம்பவங்களிலிருந்து பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள நீங்கள் கூறும் வழிமுறை என்ன?''

''பெண்களுக்கு வழிமுறை சொல்வது கிடக்கட்டும்... பொள்ளாச்சி சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எல்லோரும் சுதந்திரமாக வெளியில் சுற்றுகிறார்கள். ஆக, 'தப்பு செய்தாலும் தப்பித்துவிடலாம்' என்ற நிலை தொடரும்வரையில் இதுபோன்ற தவறுகள் நடந்துகொண்டேதான் இருக்கும். எனவே, விருதுநகர் சம்பவத்திலாவது குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையைக் கொடுத்தால், இதுபோன்ற தவறுகள் இனிவரும் காலத்திலாவது நடைபெறாது இருக்கும். அடுத்தமுறை இதுபோன்று நிகழாது!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism