Published:Updated:

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்களை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அமைச்சரவை

நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்களை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

Published:Updated:
மத்திய அமைச்சரவை

தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 19-ம் தேதி எழுதிய கடிதம் எழுதியிருந்தார். இந்த கோரிக்கை தொடர்ச்சியாக அனைவராலும் முன்வைக்கப்பட்டு வந்தது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்த நிலையில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த சமுதாயங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. நரிக்குறவர், குருவிக்காரர் என அழைப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்திருக்கிறார்.

மேலும் சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேச மாநிலங்களிலும் பழங்குடியினர் பட்டியல் இணைப்புகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.