Published:Updated:

``பிரதமரை வரவேற்போர் பட்டியலில் பெயர் இல்லை” - ஆதித்ய தாக்கரேவை இறங்கச் சொன்னதால் பரபரப்பு

மோடியை வரவேற்ற ஆதித்ய தாக்கரே

சிவசேனா, பாஜக இடையே தற்போது கடுமையான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. கூட்டணி மீண்டும் ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லாத அளவுக்கு மோதல் இருக்கிறது. ஆனால் மோடியும் உத்தவ் தாக்கரேயும் தனிப்பட்ட முறையில் நல்ல உறவில் இருக்கின்றனர்.

``பிரதமரை வரவேற்போர் பட்டியலில் பெயர் இல்லை” - ஆதித்ய தாக்கரேவை இறங்கச் சொன்னதால் பரபரப்பு

சிவசேனா, பாஜக இடையே தற்போது கடுமையான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. கூட்டணி மீண்டும் ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லாத அளவுக்கு மோதல் இருக்கிறது. ஆனால் மோடியும் உத்தவ் தாக்கரேயும் தனிப்பட்ட முறையில் நல்ல உறவில் இருக்கின்றனர்.

Published:Updated:
மோடியை வரவேற்ற ஆதித்ய தாக்கரே

பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக மகாராஷ்டிா மாநிலத்துக்கு நேற்று வந்திருந்தார். முதலில் புனேயில் கோயில் திறப்புவிழா ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு, பின்னர் மும்பைக்கு வந்தார். மும்பை ராஜ்பவன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு பாந்த்ரா - குர்லா காம்ப்ளக்ஸில் நடந்த பத்திரிகை ஒன்றின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டார். முன்னதாக இந்த விழாவுக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்க விஐபி-க்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மோடி
மோடி

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தன் மகன் ஆதித்ய தாக்கரேயுடன் பிரதமர் மோடியை வரவேற்க தனது காரில் வந்தார். காரைச் சோதித்த பிரதமரின் பாதுகாப்புப் படையினர் உள்ளே இருந்தவர்களைச் சோதனை செய்தனர். பிரதமர் மோடியை வரவேற்க அனுமதிக்கப்பட்டுள்ள விஐபி-க்கள் பட்டியலில் ஆதித்ய தாக்கரே பெயர் இல்லை என்று கூறி அவரை உத்தவ் தாக்கரே காரிலிருந்து கீழே இறங்கும்படி கேட்டுக்கொண்டனர். இதனால் அதிருப்தியடைந்த உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே தன் மகன் மட்டுமல்லாமல் மகாராஷ்டிரா அமைச்சராகவும் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். பாதுகாப்புப் படையினருடன் வாக்குவாதமும் செய்தார். இதைத் தொடர்ந்து ஆதித்ய தாக்கரேயும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க அனுமதிக்கப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோடியை வரவேற்ற ஆதித்ய தாக்கரே
மோடியை வரவேற்ற ஆதித்ய தாக்கரே

பிரதமர் மோடி ஆதித்ய தாக்கரேயின் தலையை வருடி நலம் விசாரித்தார். சிவசேனா, பாஜக இடையே தற்போது கடுமையான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. கூட்டணி மீண்டும் ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லாத அளவுக்கு மோதல் இருக்கிறது. ஆனால் மோடியும் உத்தவ் தாக்கரேயும் தனிப்பட்ட முறையில் நல்ல உறவில் இருக்கின்றனர். ராஜ்ய சபா தேர்தலில் சிவசேனா வேட்பாளரை எதிர்த்து பாஜக கூடுதலாக ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறச்செய்தது. அடுத்த சட்டமேலவைத் தேர்தலிலும் பாஜக கூடுதலாக ஒரு வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism