Published:Updated:

வரும்ம்ம்ம்... ஆனா, வராது... தி.மு.க - அ.தி.மு.க உள்ளாட்சி 'அண்டர்'ஸ்டாண்டிங்!

உள்ளாட்சி
உள்ளாட்சி

ஒன்பது மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்ய கால அவகாசம் கேட்பார்கள். தேர்தல் அறிவிப்பாணை வந்தால் துணைமேயர் உள்ளிட்ட பதவிகளில் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட வேண்டும்

''முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும், 'கிட்டத்தட்ட ஓராண்டில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் நிலையில் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க வேண்டுமா?' என நினைக்கிறார்கள். ஆளும்கட்சியைப் பொறுத்தவரை பா.ஜ.க கேட்கும் இடங்களைத் தரவேண்டியிருக்கும். மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் இடங்களைக் கொடுத்து, அதன் பிறகு இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆட்கள், அமைச்சர்களின் ஆட்கள் பங்கீடு செய்வது பெரும்பிரயத்தனமாக இருக்கும். அதனால், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தள்ளிப்போடவே அ.தி.மு.க நினைக்கிறது.'' விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2OB6Dbj

"வேறு?"

"என்னதான் வெளியே தெம்பாகப் பேசினாலும், 'உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற முடியுமா?' என்று ஆளுங்கட்சிக்கு சந்தேகம் இருக்கிறது. 'ஒருவேளை கணிசமான இடங்களில் தோல்வியைத் தழுவினால் அது அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும். சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பேரம், இறுதியாக தேர்தல் முடிவுகள் என எல்லாவற்றிலும் அடிவாங்க நேரிடும்' என நினைக்கிறது அ.தி.மு.க தரப்பு." - கழுகார், தான் திரட்டிய தகவல்களைப் பகிர ஆரம்பித்தார்.

''அ.தி.மு.க-வுக்கு மட்டுமல்ல, தேர்தலைச் சந்திப்பதில் தி.மு.க-வுக்கும்கூட துளியும் விருப்பமில்லை என்பது உண்மைதான். அதனால், இரண்டு கட்சிகளிலும் ஒருசில பெருந்தலைகள் ரகசியமாகக் கூடிப் பேசி உள்கூட்டணி போட்டிருப்பதாக செய்திகள் கசிகின்றன.''

''அதென்ன உள்கூட்டணி?''

''இருதரப்புமே முடிந்த வரையில் தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் உள்ளுக்குள் செய்யவேண்டும். அதேசமயம், தேர்தலுக்கான மனு வாங்குதல், கூட்டணிப் பேச்சு என்று வெளியில் பரபரப்புக் கிளப்பவேண்டும் என்பதுதான் இந்த உள்கூட்டணியின் நோக்கமாம்.''

தேர்தல் அறிவிப்பாணை வந்தால் துணைமேயர் உள்ளிட்ட பதவிகளில் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் வழக்கு போடக் காத்திருக்கிறார்

''பயங்கரமான திட்டமாக இருக்கிறதே!''

''கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்குமேல், தமிழக உள்ளாட்சித் துறையில் நிதி புழங்கியிருக்கிறது. ஒருவேளை முன்பே உள்ளாட்சித் தேர்தல் நடந்திருந்தால் இந்தத் தொகையில் குறிப்பிட்ட ஒரு தொகை, கமிஷன் என்கிற பெயரில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளான 1,30,000 பேருக்கும் போயிருக்கும். தேர்தல் நடத்தாததால் அத்தனையும் ஒரே இடத்துக்குப் போயிருக்கின்றன. அதாவது ஆளுங்கட்சியில் இருக்கும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கியமான புள்ளிகளுக்குப் போயிருப்பதாக ஆளுங்கட்சிக்காரர்களே பேசிக்கொள்கிறார்கள்.''

''ஓஹோ!''

''மூன்று ஆண்டுகளாக பெரியளவில் அறுவடை செய்தவர்கள், `இன்னும் ஓராண்டுக்கும் நாமே மொத்தமாக அள்ளிவிடலாமே!' என நினைக்கிறார்கள். இதற்காகவே ஏதாவது ஒரு வகையில் தேர்தலைத் தள்ளிப்போடப் பார்க்கிறார்கள். ஆனால், டிசம்பர் 13-க்குள் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருப்பதால், தேர்தல் நடத்துவதைப்போலவே சீரியஸாக விருப்பமனு வாங்குவது, அவசர சட்டம் கொண்டுவருவது என்று பாவ்லா காட்டிவிட்டு, தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கு மறைமுகமாக முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள்.''

''தேர்தலை உடனே நடத்தவேண்டும் என்று தி.மு.க கேட்கிறதே?''

''கேட்கிறார்கள்தான். ஆனால் மறுபுறம், 'ஒன்பது புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்த பிறகே தேர்தலை நடத்தவேண்டும்' என்று உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் வாதிடப்பட்டிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். இதுதொடர்பான அனைத்து வழக்குகளும் டிசம்பர் 13-ம் தேதிதான் விசாரிக்கப்படவுள்ளன. அதுவரை தேர்தல் அறிவிப்பு வர வாய்ப்பு இல்லை.''

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

வரும்ம்ம்ம்... ஆனா, வராது... தி.மு.க - அ.தி.மு.க உள்ளாட்சி 'அண்டர்'ஸ்டாண்டிங்!

''அதற்குப் பிறகு?''

''ஒன்பது மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்ய கால அவகாசம் கேட்பார்கள். தேர்தல் அறிவிப்பாணை வந்தால் துணைமேயர் உள்ளிட்ட பதவிகளில் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் வழக்கு போடக் காத்திருக்கிறார். அதன் பின்னணியிலும் ஆளும்கட்சி இருக்கலாம் என்கிறார்கள்.''

''இப்போதைக்கு தேர்தல் வருமா வராதா?''

''வரும்ம்ம்ம்... ஆனா, வராது என்றுதான் சொல்லவேண்டும். உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடுவதில் அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் ரகசிய கூட்டணி இருப்பதாக கே.டி.ராகவன், எஸ்.ஆர்.சேகர் போன்ற பா.ஜ.க நிர்வாகிகளே டி.வி சேனல்களின் விவாத மேடைகளில் கொட்டித் தீர்க்கிறார்களே. அவர்களுக்குத் தகவல் கிடைக்காமல் இப்படிப் பேச வாய்ப்பு இல்லை. ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரே, தி.மு.க தரப்புக்கு அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ மூலம் தூதுவிட்டு, 'தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கு இனிமேல் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் நீங்களே ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, கோர்ட்டில் வாதாடுங்கள்' என்று ஐடியா கொடுத்ததாகவும், அதனால்தான் 'வார்டு வரையறை' என்கிற வாதத்தை தி.மு.க கிளப்பியிருப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.''

- இத்துடன், அ.தி.மு.க அரசின் உள்ளாட்சித் தேர்தல் 'கவனிப்பு'கள், ரஜினி - கமல் இணைப்பு அரசியல், நித்யானந்தா விவகாரம், ஜாதகம் பார்க்கும் தி.மு.க உள்ளிட்டவை குறித்து கழுகார் பகிர்ந்த தகவல்களை முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க - தி.மு.க உள்கூட்டணி... ஊசலாடும் உள்ளாட்சித் தேர்தல்! https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-local-body-election

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு