Published:Updated:

ஒன் பை டூ: தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்தியது சரியா?

இன்பதுரை, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
இன்பதுரை, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இந்தத் திட்டத்தை நிறுத்தியது மிகவும் தவறானது. முதல்வர் ஸ்டாலினுக்கு ‘அம்மா’ என்ற வார்த்தையே பயத்தை ஏற்படுத்துகிறது

ஒன் பை டூ: தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்தியது சரியா?

இந்தத் திட்டத்தை நிறுத்தியது மிகவும் தவறானது. முதல்வர் ஸ்டாலினுக்கு ‘அம்மா’ என்ற வார்த்தையே பயத்தை ஏற்படுத்துகிறது

Published:Updated:
இன்பதுரை, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
இன்பதுரை, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தை நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ரத்துசெய்துவிட்டு, `மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்’ என்று மாற்றி அறிவித்துள்ளது தி.மு.க அரசு. தாலிக்குத் தங்கம் தரும் திட்டத்தை தமிழக அரசு நிறுத்தியது சரியா?

இன்பதுரை, சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர், அ.தி.மு.க

‘‘இந்தத் திட்டத்தை நிறுத்தியது மிகவும் தவறானது. முதல்வர் ஸ்டாலினுக்கு ‘அம்மா’ என்ற வார்த்தையே பயத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் ‘அம்மா’ பெயரிலிருந்த அம்மா மினி கிளினிக், அம்மா மருந்தகம், அம்மா உணவகம் என்று ஒவ்வொன்றாக மூடுவிழா நடத்திவருகிறார். பாடப்புத்தகத்தில் ‘அ என்றால் அம்மா’ என்பதற்கு பதிலாக இனி ‘அ என்றால் அறிவாலயம்’ என்று மாற்றினால்கூட வியப்பில்லை! தாலிக்குத் தங்கம் தருவதை நிறுத்திவிட்டு, பெண்களின் கல்விக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாகக் கூறும் இவர்களால், தமிழகத்தில் பெண்களுக்கு எதிராகப் பெருகிவரும் பாலியல் குற்றங்களைத் தடுக்கத் துப்பில்லை. பெண்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க எந்தச் செயல்திட்டமும் இல்லை. வருடம் 72 ஆயிரம் ரூபாய் வருமானம் உள்ளவர்கள் மட்டுமே தாலிக்குத் தங்கம் திட்டத்தில் பயனடைந்துவந்தனர். அதாவது, நாளொன்றுக்கு 200 ரூபாய் சம்பாதிக்கும் அன்றாடங்காய்ச்சிகள்! ஒரு சவரன் தங்கம் எவ்வளவு முக்கியம் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். இவையெல்லாம் திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு ஐரோப்பிய மாடலில் வாழும் நிதியமைச்சருக்கோ அல்லது லேண்ட் ரோவர் காரில் வலம்வரும் முதல்வருக்கோ ஒருபோதும் புரியாது.’’

ஒன் பை டூ: தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்தியது சரியா?
ஒன் பை டூ: தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்தியது சரியா?

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்பாளர், தி.மு.க

``கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வெறும் பெயரளவில் மட்டும் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அந்தத் திட்டங்கள் அனைத்துமே பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் மட்டுமே கொண்டுவரப்பட்ட திட்டங்கள். உதாரணத்துக்கு அம்மா மினி கிளினிக்... சுடுகாட்டில், கழிவறைக் கட்டடங்களிலெல்லாம் கிளினிக் கட்டியிருந்தார்கள். அப்படிச் செயல்படாத திட்டங்களைத்தான் நிறுத்தியுள்ளோம். தாலிக்குத் தங்கம் தரும் திட்டத்தைப் பொறுத்தவரை ‘பெண்களுக்குத் தங்கம் முக்கியமா... கல்வி முக்கியமா?’ என்று கேட்டால், பெண்கள்மீது உண்மையான அக்கறைகொண்ட எவருமே ‘கல்விதான் முக்கியம்’ என்பார்கள். கல்விதான் ஒரு பெண்ணுக்கு நிரந்தரமான சொத்து. கல்விதான் ஒரு பெண்ணை சுயமாக நிற்கவைக்கும்; அடிமைத்தளையிலிருந்து விடுவிடுக்கும்; வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும். அதனால், தாலிக்குத் தங்கம் தரும் திட்டத்தைவிட உயர் கல்வி உறுதித் திட்டத்தில் அதிகமான பெண்கள் பலனடைவார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது!”