Published:Updated:

``கட்சிப் பெயரை மாற்றிய அதிமுக தேசியக் கட்சி ஆகிவிட்டதா?” - காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

``ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலை விமர்சிக்க உரிமை இல்லை” - மல்லிகார்ஜுன கார்கே

``கட்சிப் பெயரை மாற்றிய அதிமுக தேசியக் கட்சி ஆகிவிட்டதா?” - காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

``ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலை விமர்சிக்க உரிமை இல்லை” - மல்லிகார்ஜுன கார்கே

Published:Updated:
மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. அதன் முடிவுகள் அக்டோபர் 19-ம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே நேற்று காந்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) பெயரை மாற்றுவதன் மூலம் தேசிய கட்சியாக மாற முடியாது.

அதிமுக
அதிமுக

கடந்த காலங்களில் பல மாநிலக் கட்சிகள் தேசிய அளவில் பெயர்களை மாற்றிக்கொண்டன. அ.தி.மு.க, அ.இ.அ.தி.மு.க.-வாக மாறியது, டி.எம்.சி அகில இந்திய டி.எம்.சி.-யாக மாறியது. இவை என்ன தேசியக் கட்சிகள் ஆகிவிட்டனவா? அதனால் எதுவும் நடக்கவில்லை. அத்வானி, கட்கரி, ராஜ்நாத் சிங், ஜே.பி. நட்டா, அமித் ஷா மற்றும் பலர் பாஜக தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்களா?. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலை விமர்சிக்க உரிமை இல்லை.

70 ஆண்டுகளில் நாங்கள் என்ன செய்தோம் என்று எங்களிடம் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். அணைகளையும் பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களையும் கட்டினோம். நாங்கள் பெரிய பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினோம், அவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக விற்கப்படுகின்றன. மோடி மற்றும் அமித் ஷா அணியினர் நாட்டை .அழித்துள்ளனர். மோடி ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் சாமானியர்களின் வாழ்க்கை பரிதாபமாக மாறியுள்ளது.

நரேந்திர மோடி - அமித் ஷா
நரேந்திர மோடி - அமித் ஷா

காங்கிரஸ் ஆட்சியில் ரூ.416 ஆக இருந்த எல்பிஜி சிலிண்டர் விலை தற்போது ரூ.1100 ஆக உயர்ந்துள்ளது. பால், பென்சில், ரப்பர் போன்ற பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதித்ததன் மூலம் மோடி அரசு சாமானியர்களின் சுமையை மேலும் அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார்.