Published:Updated:

குமரி: மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார் தகுதி நீக்கம்! - உயர்நீதிமன்றம் அதிரடி

அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணகுமார்
அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணகுமார்

ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பதவி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து கிருஷ்ணகுமார் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க அதிகார மையமாக விளங்குவபர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம். கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்கள் தளவாய் சுந்தரத்தால் நியமிக்கப்பட்டவர்கள்தான். கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பது, ஆய்வு கூட்டங்களை நடத்துவது என கோலோச்சி வருகிறார் தளவாய் சுந்தரம். இவருக்கு அரசியல் உதவியாளராக செயல்படுபவர் தோவாளையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார். தளவாய் சுந்தரத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் முன் நின்று நடத்தி முடிப்பது கிருஷ்ணகுமார்தான். தளவாய் சுந்தரத்தின் உதவியாளர் மட்டுமல்லாது தோவாளை ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் பதவியையும் வகித்து வருகிறார் கிருஷ்ணகுமார். மேலும் ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராகவும், கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஆகிய அரசுப் பதவிகளையும் வகித்து வந்தார்.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம்
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம்

இந்த நிலையில் கிருஷ்ணகுமார் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பஸ் நிலையம் அருகில் பாலாஜி பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்திவருவதாகவும், கூட்டுறவு சங்க தலைவராக இருப்பவர்கள் சொந்தம் பைனான்ஸ் போன்றவை வைத்திருக்கக்கூடாது என்பதால் அவர் வகித்துவரும் ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பதவி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து கூட்டுறவு சங்க விதிகளின் படி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த முருகேசன், ஜார்ஜ் நியூட்டன் உள்ளிட்டோர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பதவி, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து கிருஷ்ணகுமாரை தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது அ.தி.மு.க-வினர் மற்றும் தளவாய் சுந்தரம் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணகுமார் குறித்த அந்தரங்க வீடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவியது. அவர் அந்த வீடியோவை வாட்ஸ்அப்பில் இரு பெண்ணுக்கு அனுப்பியதாக புகார் எழுந்தது.

தலைமைக்குப் புகார்! - குமரி அ.தி.மு.க-வில் புகைச்சலை ஏற்படுத்திய அந்தரங்க வீடியோ
கிருஷ்ணகுமார்
கிருஷ்ணகுமார்

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் கிருஷ்ணகுமார் ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பதவி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கிருஷ்ணகுமாரிடம் பேசினோம், "கோர்ட் உத்தரவு நகல் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. வந்ததும் அதுபற்றி எனது வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து கூறுகிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு