Published:Updated:

ஆவடி: `கழிவுநீர் எடுப்பது முதல் கிச்சனுக்கு அனுமதி வரை..!' - லஞ்சப் புகார் வாசித்த அதிமுக-வினர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆவடியில் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்
ஆவடியில் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

இந்த மாநகராட்சியில்தான் அமைச்சர், அமைச்சரின் மகன், அவரின் குடும்பத்தினரின் தலையீடு அதிகமாக இருக்கிறது. அதனால் இந்த மாநகராட்சியில் அதிகாரிகள் நிம்மதியாக வேலை பார்க்க முடியவில்லை.

மக்கள் பணி செய்யாத தி.மு.க அரசைக் கண்டித்தும், மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் அ.தி.மு.க தெற்கு மாவட்டம் சார்பில் இன்று ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ-வும், மாவட்டச் செயலாளருமான அலெக்ஸாண்டர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க அரசுக்கு எதிராகவும், மாநகராட்சியில் நடந்துவரும் ஊழல் குறித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய அலெக்ஸாண்டர், ``ஆவடி மாநகராட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. கழிவுநீரை அகற்ற ஒரு லோடுக்கு 2,800 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதில் ஆளுங்கட்சியினருக்கு 2,000 ரூபாய் வரை பங்கு கொடுக்கப்படுகிறது. அ.தி.மு.க ஆட்சியில் வெறும் 800 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

ஆவடி: குடும்பப் பிரச்னை, மன உளைச்சல்! - 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

ஆவடி மாநகராட்சியில் வீடுகட்ட அனுமதி பெற கிச்சனுக்கு 40,000 ரூபாய் வரை லஞ்சமாகப் பெறப்படுகிறது. பிளாட் அனுமதிக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. மேலும், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடந்த பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. குறிப்பாக பாலப்பணிகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பெரிதும் சிரமப்பட்டுவருகின்றனர். மழைநீர் வடிகால்வாய்கள் சரியாக இல்லாததால் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நிற்கிறது. அதைக்கூட மாநகராட்சி அதிகாரிகள் சரிசெய்யவில்லை. இந்த மாநகராட்சியில்தான் அமைச்சர், அமைச்சரின் மகன், அவரின் குடும்பத்தினரின் தலையீடு அதிகமாக இருக்கிறது. அதனால் இந்த மாநகராட்சியில் அதிகாரிகள் நிம்மதியாக வேலை பார்க்க முடியவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகள் வேறு இடங்களுக்குத் தங்களை மாற்றும்படி மனு கொடுத்துவருகின்றனர். அதனால் மக்கள் பணி முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு