Published:Updated:

போராட்டம், கல்வீச்சு, தடியடி; திமுக-வினரின் களேபரங்களுக்கு மத்தியில் அன்னவாசலைக் கைப்பற்றியது அதிமுக

அன்னவாசல் பேரூராட்சி திமுக- போலீஸாருக்கிடையே தள்ளு முள்ளு

அ.தி.மு.க வேட்பாளராக, சாலை பொன்னம்மாளும், தி.மு.க வேட்பாளராக மதினா பேகமும் போட்டியிட்டனர். பின்னர் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சாலை பொன்னம்மாள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

நடந்து முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என வெற்றிபெற்ற உறுப்பினர்கள் கடந்த 2-ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் மொத்தமுள்ள 15 இடங்களில் அ.தி.மு.க வேட்பாளர்கள் எட்டு இடங்களையும், தி.மு.க ஆறு இடங்களையும், அ.தி.மு.க ஆதரவு சுயேச்சை ஓர் இடத்தையும் கைப்பற்றியிருந்தனர். வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மார்ச் 2-ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.

வெற்றிபெற்ற அ.தி.மு.க வேட்பாளர் சாலை பொன்னம்மாள்
வெற்றிபெற்ற அ.தி.மு.க வேட்பாளர் சாலை பொன்னம்மாள்

இந்த நிலையில். அவர்களுக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4-ம் தேதி இன்று நடந்தது. முன்னதாக தி.மு.க-வினரால் தங்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பாதுகாப்பு கேட்டு அ.தி.மு.க-வினர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து, இன்று மறைமுக வாக்குப்பதிவின்போது 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பேரூராட்சி அலுவலகம் முன்பு பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டிருந்தனர். காலையிலேயே அ.தி.மு.க உறுப்பினர்கள் பேரூராட்சி அலுவலக வாக்குப்பதிவு மையத்துக்குள் பாதுகாப்புடன் சென்றனர். அதேபோல, வெற்றிபெற்ற தி.மு.க உறுப்பினர்களும் வாக்குப்பதிவு மையத்துக்குள் சென்றனர்.

இதில், அ.தி.மு.க வேட்பாளராகச் சாலை பொன்னம்மாளும், தி.மு.க வேட்பாளராக மதினா பேகமும் போட்டியிட்டனர். பின்னர் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சாலை பொன்னம்மாள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்னவாசல் பேரூராட்சி திமுக- போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு
அன்னவாசல் பேரூராட்சி திமுக- போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு

இந்த நிலையில்தான், உள்ளே இருந்த தி.மு.க உறுப்பினர்கள் சத்தத்துடன் கூச்சலிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உள்ளே இருக்கும் தி.மு.க-வினருக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி வெளியே இருந்த தி.மு.க-வினர் பலரும் போலீஸாரின் தடுப்பு வேலிகளைத் தாண்டி உள்ளே செல்ல முயன்றனர். அப்போது போலீஸாருக்கும் தி.மு.க-வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உள்ளே இருக்கும் தி.மு.க உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாகக் கூறி தொடர்ந்து உள்ளே செல்ல முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

அன்னவாசல் பேரூராட்சி திமுக- போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு
அன்னவாசல் பேரூராட்சி திமுக- போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான தி.மு.க-வினர் உள்ளே செல்ல முயன்றதால் போலீஸார் அவர்களை அடித்து அப்புறப்படுத்தினர். இதில் ஆவேசமடைந்த தி.மு.க-வினர் சிலர் கற்களை எடுத்து பேரூராட்சி அலுவலகம் நோக்கி வீசினர். இதில் நான்குக்கும் மேற்பட்ட போலீஸாருக்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான், தொடர்ந்து போலீஸார் அராஜகத்தில் ஈடுபடுவதாகக் கூறி அன்னவாசல் பேரூராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தச் சம்பவம் புதுக்கோட்டை அன்னவாசலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இரண்டு நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகளில் தி.மு.க இரண்டு நகராட்சிகள் மற்றும் ஏழு பேரூராட்சிகளைக் கைப்பற்றியிருக்கிறது. ஒரேயொரு பேரூராட்சியை (அன்னவாசல்) மட்டும் அ.தி.மு.க கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism